எதையும் உடைத்துக் காட்டி விற்பது தான் இப்போது ட்ரெண்டாம்.ஒரே நாளில் ஐந்து சம்பவங்கள் இதற்கு உதாரணமாக கண்டேன்.
இன்று ரீல்ஸில் ஒருவர் புதிய mac book pro வை தரையில் அடித்தார், அதன் மேல் அம்மிக் கல்லைப் போட்டார், அதன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார், எரியும் அதை மணல் கொண்டு அணைத்தார், பக்கத்தில் பசித்தபடி கொதியுடன் இருந்தவரிடம் அதைத் தந்தால் உடனே சரி செய்வீர்களா? என்றார்,ஆமாம் ஓரு மணி நேரத்தில் சரிசெய்கிறேன் ஸ்கிப் பண்ணாமல் ஃபுல் வீடியோ descriptionல் உள்ள linkல் பாருங்க என்றார்,லேப்டாப் ரிப்பேர் கடைக்கு விளம்பரமாம், அடப்பாவத்தே!!!.
நான் ஏன்டா? நடுராத்திரில சுடுகாட்டுக்கு போறேன் எனத் தோன்றியது.
வேறு ஒரு ரீலில் household appliance ஷோரூமில் ceramic glass door கொண்ட ஜம்போ ஃப்ரிட்ஜை அதன் முதலாளி கடப்பாறையால் குத்தினார் , உடையவில்லை,கீறல் விழவில்லை, அதே போல ceramic glass top அடுப்பை கடப்பாறையால் குத்தினார்,நொக்கினார் எதுவும் ஆகவில்லை, அதை நாம் நம்பவில்லையோ என ஐயம் தோன்றலாகாது என அருகே இருந்த anchor பெண்ணிடம் கடப்பாறையைத் தந்து முடிந்தால் உடைக்கச் சொல்ல, அவர் உடைக்க முயன்றும் அவற்றின் கண்ணாடிகள் எதுவும் நொறுங்கவில்லை,தூள் பட புகழ் விவேக் ஒட்டும் ரப்பர் weight lifting மாதிரி ரப்பர் கடப்பாறை போல.
அடுத்து ஒருவர் 46" LED ஸ்மார்ட் டிவி வெறும் 7000₹ தான் என்றவர், மொட்டை மாடியில் தேங்கியிருந்த மழை நீரில் அதை கப்பல் போல தேய்த்து ஓட விட்டார் , இதெல்லாம் இன்று விலை மலிந்ததால் இவர்களுக்கு குழந்தை விளையாட்டாம்.
அடுத்த ரீலில் ஒரு பெண் தொழில் முனைவோர் இவர்கள் அத்தனை பேரையும் roast செய்ய வேண்டி தன் வீட்டு டீவியை தரையில் தூக்கி போட, அது உடைகிறது, தூக்கி போட்டா உடையுதாடா? என்றார், ஒரு லேப்டாப்பை தரையில் தூக்கி போட அதுவும் நொறுங்குகிறது, என்ன நொறுங்குதாடா? என நம்மை நியாயம் கேட்கிறார்,அவர் இது போல house hold கடை வைத்துள்ளதால் வீட்டு உபயோகப் பொருட்கள் என்றால் உடையத்தான் செய்யும் என்கிறார்.
இப்படியாக வெறும் ஐந்து fb reels பார்க்க இவர்களுக்கு பிடித்த கோட்டித்தனம் நமக்கு கிறுகிறுக்க வைக்கிறது, ஒரு புறம் இவை எதுவும் இல்லாதவர், ஒரு லேப்டாப் இருந்தால் part time editing ,tally வேலைகள் செய்து பணம் ஈட்ட எளிய basic laptop கூட வாங்க வழியின்றி வறுமையில் உழல்கின்றனர்,
மறுபுறம் நுகர்வு வெறியின் உச்சத்தில் சிலர் இது போல monetazion hits வேண்டி வீடியோக்கள் செய்து வெளியிடுகின்றனர், இது உடைப்பவர்களின் காலம் போலும்.
PS: தொலைக்காட்சி செய்தியில் மிதமிஞ்சி விளைந்த தக்காளி உரிய விலை போகாத கோபத்தில் மதுரை விவசாயிகள் பெட்டி பெட்டியாக சின்ன யானை வண்டிகளில் ஏற்றிப் போய் வைகை ஆற்றுப் பாலத்தில் நிறுத்தியவர்கள், தக்காளிகளை பெட்டி பெட்டியாக கீழே ஓடும் வைகை ஆற்றில் வீசிய அவலத்தைப் பார்த்தேன், எத்தனை மனித ஆற்றல் வீண்? எத்தனை முதலீடு வீண்? எத்தனை மூலப்பொருள் , விதைகள் ,உரம், மறைநீர் வீண்? இப்படி ஆற்றில் பெட்டி பெட்டியாக விளைச்சலைக் கொட்டுவதற்கா பாடுபட்டு விளைவித்தனர்?
தக்காளி sauce ற்கு இன்று குழந்தைகள் அடிமை, வீட்டிற்கு ஒரு லிட்டர் ஆவது மாதம் வாங்குகின்றனர்,தக்காளியை tomato puree செய்யலாம்,ரசம் பேஸ்ட், sauce, தொக்கு ,ஊறுகாய் என மதிப்பு கூட்டி தயாரிக்கலாம், இப்படி இந்த தக்காளி உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தியாளர்கள் மாற்றி யோசிக்கலாம்,தங்கள் பொருட்களை மதிப்பு கூட்டி லாபத்திற்கு விற்கலாம் .