இவர் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சயீத் ஷாஹேசாதி,இவர் புதுச்சேரியில் கலந்து கொண்ட கூட்டதில் எடுத்தவுடன் இந்தியில் படபடவென பேசியிருக்கிறார், கூட்டத்தில், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஆங்கிலத்தில் பேசுங்கள் என சொல்லி கேட்க , எனக்கு ஆங்கிலத்தில் பேச வராது என்றிருக்கிறார், இவருக்கு ஒத்து ஊதுவது போல புதுச்சேரி உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் இந்தி தேசிய மொழி , நாம் ப்ரிடீஷ் மொழி ஆங்கிலத்தில் பேசுகையில் அவர் நம்மை இந்தியில் பேச எதிர்பார்ப்பது என்ன தவறு என கேட்டு தன் பூஜ்ஜிய பொதுஅறிவை பொதுவில் போட்டு உடைத்துள்ளார்.
ஆங்கிலம் தெரியாதவர் எப்படி சமூகவியல் குடிமையியல் புள்ளியியல் பற்றிய மிகக் கடினமான உலக நிகழ்வு, உள்நாட்டு நிகழ்வு பாடப் புத்தகங்களை கற்று உணர்ந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார்? இந்தியாவுக்கு தேசிய மொழி என்பதே இல்லை என்ற பொது அறிவு கூட இல்லையே.
சிறுபான்மைத்துறை ஆணையத் தலைவருக்கு இஸ்லாம், கிருத்துவம் , பௌத்தம்,சமணம், பார்ஸி என பல மதத்தவரின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை புரிந்து கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது, இதற்கு பெயரளவிற்கு ஒரு அதிகாரியை நியமிப்பது ஆகாது, அந்த ஆணையத் தலைவர் பல மொழிகள் கற்றிருக்க வேண்டும் பிரதான அலுவல் மொழியான ஆங்கிலத்தில் புலமை பெற்றவராக இருத்தல் அவசியம், இந்திய அரசின் அரசியல் சாசனம் ஒரு தர்ம சக்கரம் இது அரசியல்வாதிகளால் சுழலவில்லை, இந்த அரசு எந்திரம் அதிகாரிகளால் பின்னணியில் சுழல்கிறது.
வட மாநிலங்களில் கல்வியில் எத்தனை புரட்டு நடக்கிறது பாருங்கள்,இவருக்கு மறுபடியும் எழுத்து தேர்வுகள், நேர்முக தேர்வுகள் வைக்க வேண்டும் .
இப்படித்தான் கடிகாரம் பழுது பார்ப்பவருக்கு மோர்பி தொங்கு பாலம் பழுது பார்க்க ஒப்பந்தம் தந்து 140 பேரை பலி வாங்கி உள்ளனர்,