ராமநாதபுரம் கமுதியில் மது குடித்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட
12 ஆம் வகுப்பு மாணவன் தலை கிறுகிறுத்து வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளான் என்ற செய்தி பார்த்தேன், டாஸ்மாக்கில் விற்பது கடா மார்க் சாராயத்தை விட வீரியமுள்ள ரசாயன மது, இதை 17 வயது மாணவர்கள் குடிக்கையில் இப்படி உயிருக்கே உலையாகிறது, பீர் குடித்து பழகியவுடன் hard drinks அடித்து சக மாணவர்களிடம் பந்தா காட்டுகிறேன் என நிரூபிக்க நினைத்து இப்படி சிறார் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் முடிகின்றனர், பெற்றோர் கவனமெடுக்க வேண்டும், தம் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,பிள்ளைகள் முன்பு மது குடிப்பதை தவிர்க்க வேண்டும்..