கஃபூரிக்காவாக நம் மாமுக்கோயா, எந்த வேடம் என்றாலும் கலக்கி எடுக்கும் கட்சி, நாடோடிக்காட்டு படத்தில் குஸ்ருதி பிடித்த எத்தன் வேடம், கொச்சி கடல்புறத்திலிருந்து கல்ஃபுக்குள் கள்ளிவளியாக இறக்கி விடுகிறேன், 1 பர்லாங் நீந்த வேண்டியிருக்கும், அரபிக் குப்பாயம் உடுத்தினால் மதி, அஸ்ஸலாமுஅலேக்கம், முஸலாம், என ஆபத்துக்கு இரண்டு அரபி வார்த்தைகள் கற்றுத் தந்து நம்பிக்கை ஊட்டி இரு படித்தவர்களையே ஏமாற்றி சென்னை பெசன்ட் நகர் கடல்புறத்தில் இறக்கி விடும் எத்தன் வேடம்,
இம்மனிதனின் கண், முகம், உடல்மொழி,டயலாக் டெலிவரி என ஏற்ற எந்த கதாபாத்திரத்திலும் அட்டகாசமாக வெளிப்பட்டு இருக்கும்,இவரின் முன் தூக்கிய தெத்துப்பல், பொக்கை வாய், முன்னந்தலை வழுக்கை என பார்க்கையிலேயே சிரிப்பை வரவழைத்து விடும்,கவலை மறக்க வைக்கும், இவர் மலையாள சினிமாவில் பல அருமையான நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் செய்திருந்தும் மிகவும் அண்டர்ரேட்டட் நடிகர்.
இந்த அமரத்துவம் பொருந்திய அவல நகைச்சுவைக் காட்சியை இங்கே பாருங்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=10159673659426340&id=750161339&mibextid=Nif5oz
கஃபூர்காவாக மலையாள நடிகர் மாமுக்கோயாவை ஒருவர் மறக்கவே முடியாது,நகைச்சுவை குணச்சித்திரம் என எந்த வேடம் என்றாலும் கலக்கி எடுக்கும் மனிதர் , நாடோடிக்காற்று படத்தில் அந்த குஸ்ருதி பிடித்த எத்தன் வேடம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது, கொச்சி கடல்புறத்திலிருந்து கல்ஃபுக்குள் கள்ளிவளியாக இறக்கி விடுகிறேன், ஒரு பர்லாங் நீந்த வேண்டியிருக்கும், அரபிக் குப்பாயம் உடுத்தினால் மதி என்று தைரியம் சொன்னவர்,
ஒருவேளை யாராவது கேட்டால் சமாளிக்க அஸ்ஸலாமுஅலேக்கம், முஸலாம், என ஆபத்துக்கு இரண்டு அரபி வார்த்தைகள் கற்றுத் தந்து நம்பிக்கை ஊட்டி இரு படித்தவர்களையே ஏமாற்றி சென்னை பெசன்ட் நகர் கடல்புறத்தில் இறக்கி விடுவார். இந்த எத்தன் வேடம் எத்தனை புகழ்பெற்றது என்று எழுத்தில் விளக்கிவிட முடியாது, இந்த எத்தன் உதிர்த்த வசனமான "கஃபுர்கா தோஸ்த்" என்னும் பெயரில் நிறைய உணவகங்கள் கேரளம் மற்றும் அமீரகத்தில் உண்டு.
இம்மனிதரின் கண்,வழுக்கைத் தலை,சிரித்த முகம்,தேசலான நாடி, மொச்சை பற்கள், உடல்மொழி, டயலாக் டெலிவரி என இவர் ஏற்ற எந்த கதாபாத்திரத்திலும் அட்டகாசமாக வெளிப்பட்டிருக்கும்,
இவரின் வெள்ளந்தி மாப்ளகார முகம் பார்க்கையிலேயே சிரிப்பை வரவழைத்து விடும்,கவலை மறக்க வைக்கும், இவர் மலையாள சினிமாவில் பல அருமையான நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் செய்திருந்தும் மிகவும் அண்டர்ரேட்டட் நடிகர்.
மாமுக்கோயா ஜூலை 5, 1946 பிறந்தார், மலையாள சினிமாவில் நிரூபனமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர், பிரெஞ்சு திரைப்படமான Flammens of Paradise ல் தோன்றியுள்ளார், மாமுக்கோயா பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தோன்றியுள்ளார்,நம் சினிமாவில் நெல்லைத் தமிழ் போல மலையாள சினிமாவில் மாப்ளமார் சமூக பேச்சுவழக்கு பாணியைப் பின்பற்றி நடிப்பவர்,
இது வரை 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதைப் பெற்றுள்ளார்.
மாமுக்கோயா ஆரம்பகாலத்தில் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு மிகவும் நெருக்கமானவர், அவர் வசித்த கோழிக்கோட்டின் பெய்ப்பூரில் தான் இவரும் வசிக்கிறார்,இவர் அன்யருடே பூமி (1979) மூலம் திரைத்துறையில் கால்பதித்தார்.
இயக்குனர் எஸ்.கொன்னனட்டின் சுருமையிட்ட கண்ணுகள் திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. இப்படத்திற்குப் பிறகு இவரை இயக்குனர் சத்யன் அந்திக்காடிடம் திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான ஸ்ரீனிவாசன் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார்.
இவர் காந்திநகர் இரண்டாவது தெரு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் , ஸ்ரீனிவாசன் நடித்த நாடோடிக்காற்று (1987) இல் இவர் ஏற்ற கஃபூரிக்கா கதாபாத்திரம் மலையாள சினிமாவில் அவருக்கு ஒரு முக்கிய இடம்பெற்றுத் தந்தது, இவர் நடிகர் ஜெயராமுடன் இணைந்து செய்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் பார்வையாளர்கள் சிரித்தே சாவார்கள், அப்படி கண்கெட்டு திரைப்படத்தில் வரும் "கீழேறி அச்சு" என்ற ஊரில் ஏமாந்தவர்களிடம் ஜபர் காட்டும் கோழைரவுடி கதாபாத்திரம் மறக்க முடியாத ஒன்று.
கஃபூர் என்ற இக்கதாபாத்திரம் இப்போது கேரளாவில் பெரிய trend ஆகிவிட்டது. இக்கதாபாத்திரத்தின் அடிப்படையில் அனிமேஷன் தொடர்கள் 100 episodes YouTube ல் வெளியாகியிருக்கிறது.
பெருமழக்காலம் (2004) திரைப்படத்தில் இவர் ஏற்ற தந்தை கதாபாத்திரம் நகைச்சுவை அல்லாத பாத்திரங்களையும் இவரால் அனாயசமாக செய்ய முடியும் என்பதை நிரூபித்தது.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வென்ற பியாரி என்ற திரைப்படத்தில் இவர் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்தார். கோரப்பன் தி கிரேட் (2001) திரைப்படத்தில் இவர் கோரப்பனாக நடித்தார், இது சந்தனக்கடத்தல் வீரப்பனின் spoof கதாபாத்திரம், பெருமழக்காலம் திரைப்படத்திற்காக 2004 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதைப் பெற்றார் மாமுக்கோயா.
கஃபூர்கா தோஸ்த் இங்கே பாருங்கள் இது கதாநாயகன் என்று தமிழில் வெளிவந்த புகழ்பெற்ற காமெடியின் ஒரிஜினல் வடிவம்.இந்த கஃபூர்கா கதாபாத்திரத்தை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கண்ணாயிரம் என்று தமிழில் செய்தார்.
https://youtu.be/ThyXVYecbkI
#மாமுக்கோயா,#கஃபூர்கா,#கீழேறி_அச்சு