1980 ஆம் ஆண்டு மொபட்களின் ராஜாவான TVS 50 அறிமுகம் ஆகும் முன்னர் புற்றீசல் போல மொபட் மாடல்கள் பல தோன்றி மறைந்துள்ளன, அதில் ஹீரோ மெஜஸ்டிக், கைனடிக் லூனா, சுவேகா , கைனடிக் ஸ்பார்க் என 1990 ஆம் ஆண்டு வரை பரவலாக சென்னை சாலைகளில் பார்த்துள்ளேன், இது தவிர zundapp explorer ,zundapp silver plus , hero puch , பஜாஜ் m80 , mofa , sujatha என பல மொபட்கள் இருந்தன,
இரு சக்கர வாகனங்களைப் பொருத்த வரை minimalism ஆக தரமாக எளிதில் கிடைப்பவையாக எளிதில் பொருந்துபவையாக உதிரி பாகங்களைக் கொண்டவை மட்டுமே சந்தையில் நீண்ட காலம் பிடித்து நிற்க இயலும், உதாரணத்துக்கு டிவிஎஸ் 50 வழக்கொழிந்து போனாலும் இப்போதும் எந்த கிராமத்தில் கூட உதிரிபாகங்கள் மாற்றி ஓட்டுவதை பார்க்க முடியும், அப்படித் தான் 1980 ஆம் ஆண்டு அறிமுகமான TVS 50 2007 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தால் வழக்கொழிக்கப்படும் வரை மொபட்களின் ராஜாவாகவே விளங்கியது.
இணைப்பு படங்களில் உள்ளவை 1960 ஆம் ஆண்டு மைசூரில் இயங்கிய yezdi என்ற chezh நாட்டு நிறுவனத்தார் சந்தைப்படுத்திய yezdi jet 50 மற்றும் yezdi jet 50 plus, yezdi colt 60 வகை மொபட்களாகும்,இவை கிக் ஸ்டார்ட் வைத்து, 3 step down கியர்களுடன் அறிமுகமாகியுள்ளன,
saree guard அமையும் இடது புறத்தில் சைலன்சர் கொண்ட மொபட்கள் இவை, இது இந்தியர்களின் அன்றைய பாரம்பரிய உடையான புடவைவை புரிந்து கொள்ளாமல் இந்திய சூழலுக்கு மாற்றி வடிவமைக்காமல் சந்தைப்படுத்தப்பட்டதும் தோல்விக்கு பிரதான காரணம் ஆகும்,
இரு சக்கர வாகனங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதும் அதைத் தொடர்ந்த வாடிக்கையாளர் சேவை தருவதும் பிரம்மப் பிரயத்தனமான பணியாகும், இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் அதன் மாடல்கள் மட்டுமே இன்று வரை பசுமை தீர்ப்பாய விதிகளின் கெடுபிடிகளைத் தாண்டி இரு சக்கர வாகன வணிக சந்தையில் நிலைத்து நிற்கின்றன, கோலோச்சுகின்றன,