குஜராத் மோர்பி நகரில் அடுத்தடுத்து சவமரியாதை ஊர்வலங்கள் நடந்த வண்ணம் உள்ளன, 137 பேர் பலி என்பதுடன் பலி எண்ணிக்கை உறைந்து நின்று விட்டது, அதன் பின் பலி எண்ணிக்கை ஏறாதது மற்றொரு மர்மம்.
மோர்பி தொங்கு பாலத்திற்கு அரசு தரப்பில் நிர்ணயித்த நுழைவுக் கட்டணத்திக்கு மேலே 2₹ கட்டணம் நம் டாஸ்மாக்கில் குவாட்டருக்கு 10₹ அதிகம் வாங்குவது போல வாங்கியிருக்கின்றனர் அது குஜராத் மாடல், நாம் லாகிரியில் கொள்ளை அடித்தால் அவர்கள் அடிப்படை மக்கள் வசதிகளில் கொள்ளை அடிக்கின்றனர்.
பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 12 ரூபாயும் டிக்கெட்டுகளை விலை நிர்ணயம் செய்ய நிறுவனம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, சாஹத் பண்டிகையின் கோலாகல சுற்றுலா களிப்பில் இருந்த மக்களிடம் ஒவ்வொரு டிக்கெட் மீதும் 2 ரூபாய் பிரீமியமாக அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது,
அதுவும் 500 பேர்களுக்கு மேல் அதில் அனுமதித்து உயிரிடன் விளையாடியிருக்கிறது கடிகாரம் தயாரிக்கும் ஒரேவா நிறுவனம்.
மோர்பி நகராட்சி பொதுப்பணிதுறை பாலத்தை பராமரிக்க prequalification கொண்ட ஒப்பந்த புள்ளிக்கு டெண்டர் விடாமல் கொள்ளைப்புறமாக இந்த இரண்டு கோடி ரூபாய் பால பராமரிப்பு டெண்டரை தூக்கி கொடுத்திருக்கிறது,ஒரேவா நிறுவனம் அதில் வெறும் 12 லட்சம் ரூபாயை மட்டும் செலவு செய்து மராமத்து செய்துள்ளது , 3000 கோடி ரூபாய்க்கு இரும்பு சிலை , ஆனால் 2 கோடி ரூபாய்க்கு பாலம் பராமரிப்பு இதுவே குஜராத் மாடல்.
https://www.bbc.com/news/world-asia-india-63477292