சத்மா (1983)படத்தில் ஏ ஸிந்தகி என்ற பாடல் பூங்காற்று புதிரானது பாடலுக்கு மாற்றாக வருகிறது,
இதில் கழுதைக் கூட்டம் ஒன்று
பைன் மரச்சோலையின் ஊடே நடந்து வரும், கமல் அங்கே மரத்தடியில் அமர்ந்து நாளிதழ் வாசிப்பார்,
ஸ்ரீதேவி கடைசியில் ஒரு கழுதையில் சவாரி செய்து வருவார், இக்காட்சி அத்தனை அழகாக இருக்கும், கழுதை உதைக்கும் என்ற பயம் நடுக்கமின்றி குதூகல சிறுமி பாவனையில் செய்திருப்பார் அவர்,
கமல் இதைப் பார்த்து அருவருத்து கழுதையில் இருந்து இறக்கி விட அழுதவர் கல்லால் அடிப்பார்.கவிதை போல காட்சி, இப்படி ஒரு காட்சி வைக்க யாரும் இனி இங்கே இல்லை.
இப்பாடல் முழுக்க இது போல அற்புதமான montages ஐ கொண்டிருக்கும்.ஊட்டியை இது போல இண்டு இடுக்கெல்லாம் அள்ளிவந்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா போல யாரும் இலர்.
பாடல் இங்கே
https://youtu.be/0BXqAnZWqdQ
#சத்மா,#பாலு_மகேந்திரா,#கமல்ஹாசன், #ஸ்ரீதேவி,#கழுதைக்கூட்டம்.