பப்பேட்டா என்ற P. பத்மராஜன் ரசிகர்கள் தவற விடக்கூடாத திரைப்படம் கொச்சு கொச்சு தெட்டுகள் (சின்ன சின்ன தவறுகள்)(1980)
ரவிக்கு (சுகுமாரன் )ஜெயஸ்ரீ (சுபா ) மிகப்பெரிய உதவி செய்திருக்கிறாள்,வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த லைசென்ஸ் ராஜ் யுகத்தில் தான் ஆசைநாயகியாக இருப்பவரிடம் சொல்லி அவரின் சொந்த நிறுவனத்தில் வேலை சரியாக்கி தந்திருக்கிறாள் ஜெயஸ்ரீ,
காரணம் அவன் கல்லூரி முதல வருடம் படிக்கும் லதாவுடன் பழகி வீட்டை விட்டு ஒளித்தோடி அழைத்து வந்துவிட்டான், மணமாகாமலே அவளுடன் குடும்பம் நடத்துகிறான்,லதாவின் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தவள், தன்னையும் ஒருவன் ஏமாற்றியதால் இப்படி ஒரு முதலாளிக்கு ஆசைநாயகியாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என வருந்தி அந்த பேருதவியை செய்தாள்,
அதற்கான நன்றியை நன்னடத்தையை ரவியிடம் எதிர்ப்பார்த்திருந்தவள் , அவன் ஒரு Casanova ,அவன் சந்தர்ப்பம் கிடைத்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் சுகிப்பான் எனத் தெரிந்து கொள்கிறாள்,
ரவி வேலை செய்யும் அலுவலகத்திற்கு போன் செய்து அழைத்து தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்கிறாள்.
ரவி நேரில் வர அவனிடம் லதாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறாயே? உனக்கு நன்றி இல்லையா ? என குரலெடுத்து முதலாளித்துவம் காட்டுகிறாள், அவன் இதனால் உங்களுக்கு என்ன வந்தது?மரியாதை காட்டுவதால் குனிய வைத்து குட்டப்பார்க்காதீர்கள், உங்கள் நிலை (concubine) என்ன என்று நான் அறிவேன் மிஸஸ் பணிக்கர் என்று அலட்சியமாக பேசியதும் அவமானம் தாளாமல் அவனை சட்டென அறைகிறாள் ஜெயஸ்ரீ, நன்றியில்லாத ஜென்மம் நீ, நாளை முதல் வேலைக்கு வரக்கூடாது ,நீ போகலாம் என்கிறாள், ரவி அவளை நிதானமாகப் பார்த்தவன் .
அவளிடம் பேசும் வசனங்களைக் கேளுங்கள், ஆகா, பப்பேட்டாவின் பேனா எத்தனை வல்லமை கொண்டது, நடிகர் சுகுமாரனுக்கு எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.
மிஸஸ் பணிக்கர் ,உங்கள் emotions நன்று, அதன் sprit எனக்கு புரிகிறது,ஆனால் எஜமானியம்மாள் வேஷம் உங்களுக்கு சற்றும் எடுபடவில்லை அது தான் கொஞ்சம் கூடுதலாகிவிட்டது, என்று பதிலுக்கு அறைந்து விடுகிறான்.
நான்கு பேர் முன்னிலையில் எனக்கு லதாவை திருமணம் செய்வது கஷ்டம் ஒன்றுமில்லை, ஆனால் திருமணம் என்ற ஏற்பாட்டில் நம்பிக்கையற்றவன் நான்,அந்த சுமையை வெறுப்பவன் நான்.
என்ன நாளை முதல் வேலைக்கு வரக்கூடாதா? இந்த வேலை எனக்கு புல்லைப்போன்றது,இந்த லதா இல்லை என்றால் வேறொரு லதா, இந்த உஷா தங்கச்சி இல்லை என்றால் வேறொரு உஷா தங்கச்சி, இந்த வேலை இல்லை என்றால் வேறொரு வேலை, நீ என்ன சொல்வது நாளை முதல் நான் அந்த வேலைக்கு போகப்போவதில்லை
என்று கர்ஜித்துவிட்டு அகல்கிறான் ரவி.
இந்தக் காட்சியில் மட்டுமல்ல படம் முழுக்க நடிகர் சுகுமாரனும், நடிகை சுபாவும் அப்படி போட்டி போட்டு நடித்துள்ளனர், ஷ்யாம் மாஸ்டரின் பின்னணி இசை எழுந்து அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு வந்ததைச் சொல்கிறது.
படத்தின் இயக்கம் மோகன், பப்பேட்டாவின் casanova ஒருவன் மீது இரு பெண்கள் காதல் கொள்ளும் கதையை அற்புதமாக இயக்கியிருக்கிறார், இவர் இயக்கிய ஆலோலம் என்ற திரைப்படமும் மிக நன்றாக இருக்கும்.
படம் முழுக்க மூணார் மற்றும் எர்ணாகுளத்தில் படமாக்கப்பட்டுள்ளது,
படத்தின் ஒளிப்பதிவு U.ராஜகோபால்,
YouTube ல் சப்டைட்டில் இல்லாத படம் கிடைக்கிறது,
#சுகுமாரன்,#சுபா,#P_பத்மராஜன்,#மோகன்,#ஷ்யாம்_மாஸ்டர், #casanova