தவமாய் தவமிருந்து டிஜிட்டலில் படமாக்கப்பட்ட திரைப்படம், தமிழில் அதே 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழின் முதல் டிஜிட்டல் திரைப்படமான மும்பை எக்ஸ்பிரஸை தொடர்ந்து டிஜிட்டலில் வெளியான படம், மும்பை எக்ஸ்ப்ரஸில் படக்குழு எதிர்கொண்ட சவால்களை அநாயசமாக முறியடித்து வெளியானது,
இதில் மகன் ராமலிங்கம் பொறியியல் கல்லூரி சேர்ந்தவர் நண்பனின் விடுதி அறைக்குச் சென்று அதன் மீது மையலுற்றவர் விடுதியில் சேர்ந்து விட வேண்டும் என முடிவெடுத்துவிடுவார், அதனால் தந்தைக்கு சுமை கூடுமே என்று சிந்திக்க விடாத வயது,
அன்று தந்தை முத்தையாவை சிவகங்கை நகரில் அச்சகம் முடித்து சைக்கிளில் பின் கேரியரில் வைத்து மூச்சிறைக்க டபுள்ஸ் ஓட்டிக்கொண்டு வீடு வரும் காட்சி ஐம்பது வினாடிகள் வரும்,
எத்தனை அழகாக எடுக்கப்பட்ட இரவுக் காட்சி இது, முதலில் அந்த சாலைக்கு நடுவில் ஒரு long shot, பின்னர் சைக்கிள் ஓட்டி வரும் ராமநாதனுக்கு low angle shot, தேரிக்காட்டு பின்னணியில் எதிரே வரும் பேருந்து வெளிச்சத்திற்கு கண்ணைச் சுருக்கி சைக்கிள் ஓட்டுவதை பக்கவாட்டில் காட்சிப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர்,
ஏம்பா, நான் வேணா ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கட்டா? எனக் கேட்கிறார் ராமலிங்கம், இப்போது அப்பா முத்தையாவின் முகத்துக்கு close up, நீயும் ஹாஸ்டலுக்கு போயிட்டா உங்கம்மாவும் நானும் தனிக்கட்டையா ஒருத்தருக்கொருத்தர் யார் முகத்த பார்த்துக்கிட்டிருக்கப்பா? என தடுமாறும் அவர் முகத்தைக் காட்டாமல் மீண்டும் long shotல் அவர்கள் மிதிவண்டிப் பயணத்தைக் காட்டி காட்சியை freeze செய்கிறார் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு. உணர்ச்சிகரமான காட்சிகளை படமாக்க இவர் போல படமாக்குவது கடினம்,மகாநதி தொடங்கி கவனித்து வருகிறேன்.
இயக்குனர் சேரன் மனதில் நினைத்திருந்த காட்சியை இப்படி தத்ரூபமாக திரையில் கொண்டு வருவது எத்தனை ஒளிப்பதிவாளரால் முடியும்.
இப்படி படம் நெடுக மறக்க முடியாத காட்சிகளாக விரவி இருக்கிறது, இந்த நீல வானப் பின்னணி விளக்குகளில்லா சாலைக் காட்சியை மறக்க முடியாது, இரு பறவைகளின் கூடடைதலுக்கு ஒப்பான தன்மையைக் கொண்டிருக்கும்.
இயக்குனர் சேரன் ஒளிப்பதிவாளரை மட்டும் தன் அடுத்தடுத்த படங்களில் மாற்றியிருக்க வேண்டாம் என பட்டது.
Ps:இப்படத்தின் Uncut version மொத்தமாக எட்டு மணிநேரம் வந்ததை எடிட்டர் லெனின் மூன்று மணி இருபத்தி நான்கு நிமிடங்களாக்கி Theatrical Cut ஆக்கி தந்தாராம், இவரை நிம்மதியாக ஊருக்குப் போய் வரச் சொன்னாராம்,
அதற்கு எடிட்டர் லெனின் தனிமையில் பதினைந்து நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார் என்று இயக்குனர் சேரன் Bafta Institute மேடையில் பகிர்ந்தார்.
தவமாய் தவமிருந்து படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10158277539786340&id=750161339
#தவமாய்_தவமிருந்து,#சேரன்,#MS_பிரபு,#ராஜ்கிரண்,#சரண்யா,#இளவரசு,#பத்மப்பிரியா,#செந்தில்குமார்,#மீனாள்,#பி_லெனின்,#சபேஷ்_முரளி,