எலிப்பத்தாயம் திரைப்படத்தில் கரமன ஜனார்த்தனன் நாயர் செய்த உன்னி கதாபாத்திரத்தை ஒருவர் மறக்க இயலாது, எலிப்பத்தாயம் படத்தில் கதாபாத்திரங்களின் குணாதிசயத்தைக் காட்ட ஒட்டுண்ணியான இவருக்கு வெள்ளை, சுயநலமியான மூத்த சகோதரி ஜானம்மாவுக்கு பச்சை , இவருக்காக உழைத்து ஓடாகும் நடுத் தங்கை ராஜம்மாவுக்கு நீலம், எதிலும் பட்டும் படாமல் , காரியம் சாதித்து, நேரம் வருகையில் தப்பிக்கும் கடைசி தங்கை ஸ்ரீதேவிக்கு சிகப்பு என வண்ணங்களை அரத்தமுள்ளதாக தெரிவு செய்திருப்பார் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
உன்னி தன் ஏமாளித் தங்கையை தொட்டதற்கெல்லாம் ராஜம்மா, ராஜம்மா, ராஜம்மோவ் என ராகமாக விளிப்பது இன்னும் காதில் கேட்கிறது
கரமன ஜனார்த்தனன் நாயர் தோன்றும் சிறு கதாபாத்திரத்தையும் மிளிர வைப்பார், திங்களாழ்சே நல்ல திவசத்தில் கவியூர் பொன்னம்மாவின் மூத்த மகன், கல்ஃபில் இருக்கும் இளைய மகன் மம்முட்டி , பெங்களூருவில் ப்ளாட் வாங்க தரவாட்டு வீட்டை விற்க நினைக்க, மும்பையில் அரசு ஊழியரான இவருக்கு அதை மறுக்கவும் முடியாது, ஏற்கவும் முடியாது, மனைவி ஸ்ரீவித்யா 20 வருடங்களாக வாடகை வீட்டிலேயே இருக்கிறோமே என்ற சராசரிப் புலம்பல்கள், என அருமையான வேடம்,தசரதம் படத்தில் மோகன்லாலின் கேர்டேக்கர் / மேனேஜர், அருமையாக செய்திருப்பார்.