இந்திய சினிமாவில் நாயகன் இப்படி வில்லன் தலையில் வைத்து உடைக்கும் break away bottles (candy glass/sugar glass ) ஐ முதன் முதலில் அறிமுகப்படுத்தியது கமல்ஹாசன் தான்,
இது நாயகன் (1987) படத்தில் வரும் வெந்நிற breakaway சாராய bottle, இதை தன் வாப்பாவைக் கொன்ற ப்ரதீப் சக்தி தலையில் வைத்து உடைப்பார், அவர் போகும் போக்கில் எடுத்த எடுப்பில் இப்படி பிறர் தலையில் வைத்து உடைத்து பரிசோதனை செய்து விடவில்லை.
1984 ஆம் ஆண்டில் ஏக் நய் பஹலி (அபூர்வ ராகங்கள் - இந்தி) படத்தில் காரில் தன் மீது சேறு அடித்துப் போனவர்களை இவர் அசிங்கமாய் திட்ட, அவர்கள் இவரைத் தாக்கி ,
தங்கள் கையில் உள்ள பீர் பாட்டிலை இவர் தலையில் அடித்து உடைக்கிறார்கள்.
இந்த பாட்டில்கள் எளிதில் நொறுங்கக் கூடிய சர்க்கரைப் பாகில் உச்ச கொதி நிலையில் ஊதிப் பெருக்கி வேண்டிய வடிவத்தில் வேண்டிய வண்ணத்தில் செய்யப்படுபவை,
அப்போது 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஹாலிவுட் அல்லது ஐரோப்பாவில் இருந்து தான் இவை இறக்குமதி செய்யப்பட்டது, அதை தன் கைக்காசு போட்டு படங்களில் தன்னார்வத்துடன் பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.
நான் நாயகன் பார்க்கையின் இதில் தான் முதலில் break away bottle உபயோகித்து மண்டையை உடைத்தார் என எண்ணினேன், ஏக் நய் பஹெலி பார்க்கையில் அதில் முன்பே செய்திருக்கிறார் என வியந்தேன்.
இன்று இந்த break away bottles அமேஸான் போன்ற ஆன்லைன் தளங்களில் எளிதில் ஐநூறு ரூபாய்க்கு வாங்கலாம்
#candy_glass,#sugar_glass,#break_away_glass,#நாயகன்,#ஏக்_நய்_பஹெலி,#Realism,#stunt