வாழ்க வளர்க படத்தில் வரும் சிட்டுக்குருவி பாரு டைட்டில் பாடல் இசைஞானி எழுதிப் பாடிய அரிய பாடல், இதை மோர்பாளையம் வெள்ளிக்கிழமை சந்தையில் detail ஆக படமாக்கியிருந்தார் இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ்.பாடலில் சந்தையில் விற்கப்படும் ஒப்பாரிப் பாடல்கள் புத்தகத் தொகுப்பு கூட வரும்.
அதில் மாட்டை பல்லைப் பிடித்து வாங்கும் ஒரு காட்சியும் வருகிறது, முன்பு எங்கள் பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் மாட்டை இப்படி உதட்டை நீக்கி பல் பார்த்து வாங்குவதைப் பார்த்துள்ளேன்.
ஒரு மாட்டை விலைக்கு வாங்குவோர் முதலின் அதன் வயதையும், உடல் ஆரோக்கியத்தைப் பார்க்க, அதன் பல்லைத் தான் பிடித்துப் பார்ப்பர்.
மாடுகளுக்கு 32 நிரந்தரப் பற்கள் இருக்குமாம்.
இருந்தும் அவற்றின் கீழ்த்தாடையில் உள்ள 4 ஜோடி முன் வெட்டு பற்களை வைத்து தான் அதன் வயது நிர்ணயிக்கப்படுகிறதாம் .
மாடுகளின் வயதை கண்டுபிடிக்க, அவற்றின் கீழ்த்தாடையின் உதடுகளை சிறிது விலக்கினால் கீழ்த்தாடை பற்கள் தெளிவாக தெரியுமாம்.
இந்த பற்களின் எண்ணிக்கையை கொண்டு வயதை நிர்ணயிப்பார்கள் மாடு வாங்குபவர்கள்.இதைத் தான் தானமா வந்த மாட்டை பல்லைப் பிடித்து பார்க்கிறான் என்பார்கள்.
வாழ்க வளர்க படம் பற்றி மேலும்
https://m.facebook.com/story.php?story_fbid=10158656534786340&id=750161339
வாழ்க வளர்க படம் 1987 ஆம் ஆண்டு வெளியானது, சரிதா, ராதாரவி, பாண்டியராஜன்,செந்தாமரை,விஜய் கிருஷ்ணராஜ், கோவைசரளா, ஒருவிரல் கிருஷ்ணா ராவ், ஆகியோர் நடித்திருந்தனர்,
முப்பது வருடங்களுக்கு முன்பே இதில் ராதாரவி, சரிதா திருமணம் செய்யாமல் ஊரை விட்டு ஒதுங்கி குன்றின் மீது குடிசை போட்டு தனியாக வசிப்பார்கள், ராதாரவி முரட்டு புத்திசாலி, மூனு வேளை சோறு, மூனு மாசத்துக்கு ஒரு புடவை, என்று ஒப்பந்தம் போட்டு குடும்பம் நடத்துவார்.
அன்றைக்கு புதுமையான கதை , இந்த தூண்டா மணி விளக்கு பாடலை நா.காமராஜன் எழுதினார், படத்தில் மொத்தம் பத்து பாடல்கள், இசைஞானி அதில் ஏழு பாடல்களை எழுதினார், இப்பாடல் சித்ரா பாடியது, அப்போது ரேடியோவில் அமைதியாக கலக்கிய பாடல் இது.
படத்தில் பாண்டியராஜனின் எருமை வளர்ப்பு திட்டம் காமெடி நன்றாக இருக்கும்.
ராதாரவி வீட்டுக்கும் ஊருக்கும் அடங்காதவர், தன் சகோதரன்,மற்றும் ஊரார் திருமண வாழ்க்கை பாழாய் போக திருமணம் செய்யக்கூடாது பிள்ளை பெறக்கூடாது என கங்கணம் கட்டி அலைகிறார், அனாதை சரிதாவுக்கு அடைக்கலம் தருகிறார், ஆனால் அவர் கட்டச் சொல்லும் மஞ்சள் கயிறை கட்ட மறுக்கிறார்,
எனவே சரிதா அதை தினமும் முந்தானையில் கட்டி அலைகிறார், அப்போது ராதாரவியின் நிபந்தனைக்கு ஆட்பட்டு தன்னை ஒப்புக்கொடுக்கையில் வரும் montage பாடல் இது, இடையில் வரும் நாட்டுப்புறத் தெம்மாங்கு வரிகள் எல்லாம் அசத்தலாக இருக்கும்.படத்தின் இயக்கம் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்.
படத்தின் ஒளிப்பதிவு ks.செல்வராஜ்,படம் முழுக்க ஈரோடு மாவட்டம் நெடுங்குளம், சிலுவம்பாளையம், காவேரிக்ராஸ் போன்ற எழில் கொஞ்சும் ஊர்களில் படமாக்கியிருந்தனர்.
#இசைஞானி, #வாழ்க_வளர்க,#மாடு,