இன்று என் பால்ய கால நண்பர்களில் 80 சதம் பேர் தினம் மது குடிப்பவர்களாக உள்ளனர், நாற்பதுகளில் பார்க்க ஐம்பது
வயதுக்காரர்களாக தோன்றுகின்றனர், குடியை நிறுத்த நினைப்பவனுக்கு பல ரூபங்களில் கவனச்சிதறல் வரும், அவனை அப்படி போட்டு அலைக்கழிக்கும், குடிநோயாளியின் ஒத்துழைப்பு, அவன் வீட்டார் ஒத்துழைப்பு ,அந்த குடிநோயாளியின் நடப்பு தசாபுக்தி அனைத்தும் குடியில் இருந்து ஒருவன் மீள்வதற்கு அவசியம், நல்ல தசாபுக்தி நடக்கையில் ஒருவன் எத்தகைய கெட்ட பழக்கத்தில் இருந்தும் மீள்வதற்கு ஆத்மபலம் நிச்சயம் கிடைக்கும்.
மலையாள சினிமாவில் மீண்டும் ஒரு முத்து" வெள்ளம் ", மதுவை மலையாளத்தில் மத்யபானம் என்பார்கள், மது குடித்தலை மத்யபித்தல் என்பார்கள்,
நம் தமிழில் திரைப்படக் கவிகள் இதயத்திற்கு முக்கியத்துவம் தந்து "இதயமே" என்று பாடல் வரிகள் எழுதுவர், ஆனால் மலையாளத்தில் "கரலே" என்று கல்லீரலிற்கு முக்கியத்துவம் தந்து பாடல் வரிகள் எழுதுவர்,
கல்லீரலை கூம்பு என்று செல்லப்பெயர் இட்டும் அழைப்பர் மலையாளிகள், ஆனால் பெரும் கலைஞர்கள் அந்த கரலை காக்கத் தவறிவிட்டு,மத்திம வயதிலேயே ஈரல் கெட்டுப்போய் இறந்தும்விடுவர்,கரல் பழுதாகி இறப்பது அங்கே தேசிய நோய்,
குடியை வைத்து ரசனையாக ரகளையாக தத்ரூபமாக எத்தனையோ திரைப்படங்கள் மலையாளத்தில் இறங்கியுள்ளது, அப்படியொரு வரிசையில் வெள்ளமும் சிறப்பான ஒரு திரைப்படம்,
ஜெயசூர்யா அருமையான நடிகர், எந்த கதாபாத்திரத்தையும் இயல்பாக அதே கதாபாத்திரமாக மாறி பரிமளிப்பவர்,
இதில் குடிநோயாளி முரளி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார், இவரைத் திருத்தி நேராக்கும் டாக்டர் சுப்ரமண்யமாக சித்திக் அற்புதமாக செய்திருக்கிறார், தன்னைப் பார்க்க வரும் பழைய குடிநோளிகளை அன்புடன் எதிரே அமர வைத்து இவருக்குப் பிடித்த ஆரஞ்சு நிற பாப்பின்ஸை எடுத்து அவர்களிடம் தந்து எனக்குப் பிடித்த ஆரஞ்சு நிறம்,ஆனால் நீ சாப்பிடு என்ற வாஞ்சை,A complete actor for any character - siddique.
மலையாளத்தில் நல்ல பல குணசித்திர நடிகர்கள் மத்யபித்து மரித்துப் போன நிலையில் எஞ்சியிருக்கும் அற்புத நடிகர் சித்திக்,
குடியை அதன் போக்கில் அணுகி அதில் இருந்து மதுப்பிரியர்கள் வெளியேற முடியும் என்று நம்பிக்கை ஒளியை விதைக்கிறது இத்திரைப்படம்.,
ரம் தான் கேரள டாஸ்மாக்கின் சூப்பர்ஹிட்டாக விற்கும் மதுவகை,அதை நாயகன் வாங்கி அருந்துவதை படத்தில் சரியாக சித்தரித்துள்ளனர்,
படத்தில் நாயகன் முரளி வங்கப் பணியாளர்கள் ஒரு வாரகாலம் சமயம் எடுத்து அறுக்கும் செம்பராங்கல் பாறைகளை இரண்டு மணிக்கூரில் அறுத்து மினிலாரியில் ஏற்றி விடுகிறான்,
அவனிடம் குவாரி உரிமையாளர் நண்பன் கூலி தருகையில் கேட்கிறான், இப்படி நன்றாக வேலை செய்கிறாயே?நீ நிரந்தரமாக பணி செய்து ஜீவிக்க என்ன கொள்ளை? என்று,
முரளி ,பணி செய்யாமல் சும்மா இருக்கும் சுகத்தை நீ அனுபவித்திருந்தால் தான் அந்த அருமை உனக்கு தெரியும்,குடிக்கப் போகனும் காசை எடு என்கிறான்,
இன்று பல திறமையான கடும் உழைப்பாளிகளின் நிதர்சனமான நிலையை முரளி பேசியிருக்கிறான், அவனுள் ஒரு விருட்சம் அடைபட்டுள்ளது,
அது கண்விழிக்க விடாமல் குடிநோய் அவனை அழுத்துகிறது, அந்த குடிநோயை ஜெயித்தால் அவனால் மாற்றி யோசித்து அதே வெட்டி எடுத்த செம்பராங்கல்லை water man என்ற brand ல் பாலீஷ் போட்டு அறுத்து floor tiles, wall tiles செய்து 22 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்த முடிகிறது,
தன் சொத்தான அவமானம் என்ற கண்ணீர் குப்பியை நோக்கியிருந்து அதை சாதிக்க தெம்பு கிடைக்கிறது இந்த முரளிக்கு,எந்த முரளிக்கும் சாதிக்க முடியும்.
A Magnificent film, மதுப்ப்ரியர்கள் அவசியம் பார்த்து நீங்கள் தொலைத்த ஸ்வயம் மீட்டெடுங்கள், வெள்ளம் கண்டிப்பாக பாருங்கள், Cheers!!!
வெள்ளம் மலையாள திரைப்படத்தில் ஒரு ப்ரில்லியண்டான காட்சி வருகிறது, நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பாக சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்ய வழமையாக பகவத் கீதை மதுரிமா என்ற பெண்ணிடம் தரப்படுகிறது ,அவர் நீதிபதியைப் பார்த்து தயங்கியபடி இதில் எனக்கு இதில் நம்பிக்கை இல்லை சார் என இடை நிறுத்த,
நீதிபதி புதிராக பின்னே எதில் உனக்கு நம்பிக்கை எனக் கேட்கிறார் ,மதுரிமா constitution என்கிறார், அங்கு தூசடைந்த அம்பேத்கரின் constitution of india என்ற அப்புத்தகம் தேடி எடுத்து தூசு தட்டித் தரப்படுகிறது.
இந்த one india யுகத்தில் முகத்தில் அறையும் காட்சியை சித்தரித்துள்ளனர் படக்குழுவினர், பெண்களை அறியாபதுமைகளாக காட்டும் வழமையான படைப்புகளுக்கு முன் இப்படி அவர்களை புத்திசாலிகளாக காட்டுவது மெச்சத்தக்கது.
#அரசியலமைப்பு_சட்டம்,#பகவத்_கீதை,#வெள்ளம்,#vellam,
#shot_composition,
#Prajesh_Sen,#dop_Roby_Varghese_Raj
#வெள்ளம், #ஜெயசூர்யா,#சித்திக்,#மலையாளம்
#வெள்ளம்,#vellam,#shot_composition,
#Prajesh_Sen,#dop_Roby_Varghese_Raj