கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது,மில்லேனியம் ஆண்டின் தரமான ஒரு குடும்பச் சித்திரம், அற்புதமான ஒரு Star cast ,இசை, ஒளிப்பதிவு,திரைக்கதை,என மறக்கமுடியாத படம், 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் Jane Austen எழுதிய Sense and Sensibility நாவலைத் தழுவி வெளியான படைப்பு இது.1811ல் இதன் முதல் பதிப்பு வெளியானது.
இதில் ஒரு ஆச்சர்யமான ஒரு தொடர்பு உண்டு, மலையாளத்தில் இயக்குனர் லோஹிததாஸ் 1996 ஆம் ஆண்டு இயக்கிய உத்யானபாலகன்
திரைப்படத்தின் நாயகன் மம்மூட்டி , இவர் படத்தில் செய்த சுதாகரன் நாயர் கதாபாத்திரம் ஒரு முன்னாள் ராணுவ வீரர், போரில் தன் காலை இழந்தவர், ராணுவத்தில் ஓய்வு பெற்று தன் சொந்த ஊரில் வந்து கடை வைத்து நடத்துபவர், தன் வீட்டின் முன்னால் பெரிய ரோஜா தோட்டத்தை நிர்மாணித்து அதை அத்தனை அழகாக பராமரிப்பவர்,பூக்களை எண்ணி வைப்பவர், யாராவது பூவைப் பறித்தால் இவருக்கு கெட்ட கோபம் வரும், இந்த கதாபாத்திரத்தை படைக்க இயக்குனர் லோஹி அவர்கள் sense and sensibility நாவலில் வரும் Colonel Brandon கதாபாத்திரத்தில் இருந்தே உந்துதல் பெற்றிருக்க வேண்டும்.இரண்டு படங்களிலும் நடிகர் மம்மூட்டி இந்த
கேப்டன் சுதாகரன் நாயர்,கேப்டன் பாலா,கதாபாத்திரங்களை அற்புதமாக செய்திருப்பார்.
இந்த sense and sensiblity கதை 1995 ஆண்டு ஹாலிவுட்டில் அதே பெயரில் படமாக்கப்பட்டது, சிறந்த படத்திற்கான ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது, 2008 ஆம் ஆண்டு இதே கதை TV series ஆகவும் வெளியாகியுள்ளது,
பெண் எழுத்தாளர் Jane Austen தான் மிகவும் புகழ்பெற்ற நாவலான pride and prejudice ஐயும் எழுதியவர், அவர் இந்த படைப்புகளை எழுதிய போது, ஒரு அனானியாகவே எழுதினாராம், "ஒரு பெண்"என்ற பெயரிலேயே அவை வெளியாகி பல பதிப்புகள் கண்டுள்ளன, பின்னாளில் அவர் மறைவுக்குப் பின்னர் தான் அவர் பெயர் வெளியே தெரிந்ததாம்.
#கண்டுகொண்டேன்_கண்டுகொண்டேன்,#உத்யானபாலகன்,#ராஜீவ்_மேனன்,#லோஹிததாஸ்,#Jane_Austen,#sense_and_sensibility