The Killing of a Sacred Deer | 2017 | Yorgos Lanthimos




" The Killing of a Sacred Deer"(2017) என்ன அருமையான படம்?ஒரு படம் வெகு நாள் கழித்து யாரும் பேசா பொருளைப் பேசியிருக்கிறது .

தந்தையை  குடிபோதை கவனக் குறைவால் அறுவை சிகிச்சையின் போது கொன்ற டாக்டரை உணர்வு ரீதியாக பழி வாங்கும் மகனின் கதை.ஆனால் இது வரை வந்த பழிவாங்கல் படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட கதை.

டாக்டர் ஸ்டீவனாக வந்த Collins Farrel மனம் கவர்ந்த நடிகர். In Bruges படத்தில் இருந்து பார்க்கிறேன், இக் குற்ற உணர்வு கொண்ட டாக்டர் கதா பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம், அடர்ந்த தாடியையும் மீறி உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறார், மனைவியாக Nicole Kidman பிரமாதமான நடிகை , இது போல சைக்காலஜிக்கல் தரில்லர்களான eyes wide shut போன்ற படங்களில் நிரூபனமானவர்.நடிப்பில் இருவருக்கும் சமரமே நடக்கின்றது.

படம் முழுக்க எனக்கு  நிறைய டேஜாவூ, ஸ்டீவன் கதாபாத்திரம் 21 க்ராம்ஸ் படத்தின் Paul கதாபாத்திரத்தை நினைவு படுத்துகிறது,  மகனாக வந்த சிறுவன் அப்படியே shining படத்தின் danny  கதாபாத்திரத்தை நினைவூட்டினான்.மகள் அமெரிக்கன் பியூட்டி படத்தின் ஜேன் கதாபாத்திரத்தை நினைவூட்டினாள்.

படத்தின் மைய கதாபாத்திரமான மார்ட்டின் borgman  என்ற டச்சுப்படத்தில் வரும் camiel என்ற கதாபாத்திரத்தை நினைவூட்டினான், படத்தின் ஒளிப்பதிவு எனக்கு shining படத்தில் பிதாமகர் John Alcott ன் பணிக்கு ட்ரிப்யூட் செய்தார் போல அத்தனை நிறைவாக இருந்தது.

இப்படி உலக கல்ட் க்ளாசிக்களின்  தாக்கம் படம் நெடுக இருந்தாலும் எல்லாமே ட்ரிப்யூட் தரத்தைக் கொண்டுள்ளது,  ஒரிஜினலான கதை திரைக்கதையைக் கொண்டு பார்வையாளரை அசரடிக்கிறது, அடுத்து இது நடக்கும் என ஊகித்தால் அதை அழகாக உடைக்கிறது,

படம் நெடுக குறியீடுகள்  , உலக சினிமா ரசிகர்கள் விவாதம் நடத்தலாம்.  படம் அற்புதமான சைக்காலஜிக்கல் ரிவன்ஜ் த்ரில்லர் என வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் இது எதற்குள்ளும் அடங்காமல் இயக்கியுள்ளார் இயக்குனர் Yorgos Lanthimos ,இவரின் lobster படமும் பாருங்கள்.

Iphigenia என்ற கிரேக்க வாய் மொழிக் கதையில் இருந்து திரியையும் படத்தின் டைட்டிலையும் எடுத்துக் கொண்டு, மெயின் ஸ்ட்ரீம் ஆடியன்ஸுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் லாஜிக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் இரண்டு மணி நேரம் நம்மை கட்டிப் போடுகிறார்.படம் பாரத்தவர்கள் borgman 2013 படத்தை அவசியம் பாருங்கள், டபுள் டிலைட்டாக இருக்கும்.
#The_Killing_of_a_Sacred_Deer,#Yorgos_Lanthimos


,#மீள்பதிவு

எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)