லதா மங்கேஷ்கர் பாடிய இந்த ரிம்ஜிம் கிரே ஸாவன் வடிவம் எனக்கு மிகவும் பிடிக்கும், காரணம் இதன் அபாரமான அழகியல் கொண்ட விஸுவல்கள், இந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் கே.கே. மகாஜன் அவர்களின் ஒளிப்பதிவு,
ஸாவன் அல்லது ஷ்ராவன் மாதம் என்பது ஜூலை ஆகஸ்டைக் குறிக்கும், அந்த 31 நாட்கள் தென்மேற்குப் பருவமழை மாதம், பம்பாயின் மழைச் சாலைகளை, ஆளுயர அலை எழும்பும் ப்ரோமோனேடை, க்வின் நெக்லேஸ் என்ற பேக்பே ரெக்ளமேஷன் பகுதிகளை மிக அழகாக கவர்ந்து வந்திருப்பார் கே.கே. மகாஜன் அவர்கள்,
இவர் மிருனாள் சென் , மணி கௌல் போன்ற இயக்குனர்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், இதே படத்தில் கிஷோர் தா பாடும் ரிம் ஜிம் கிரே சாவன் இன்டோரில் வரும் அபாரமான பாடல், ஆர்.டி. பர்மன் அவர்களின் மனம் மயக்கும் இசை. ஒன் அண்ட் ஒன்லி கிஷோர் தா, இப்படத்தின் நாயகி மௌசமி சேட்டர்ஜி, இயக்குனர் பாசு சேட்டர்ஜி , லதாஜி என பெரிய வங்காளப் பட்டாளத்தின் படைப்பு மன்ஸில் 1979 திரைப்படம்.
இந்தி சினிமாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு அழகான மான்டேஜ் பாடல், எத்தனை உயரமான அமிதாப், குளிரில் அவரை அழுந்தப் பற்றிக் கொண்டு மழையில் நனையும் பெரிய வீட்டுப் பெண்ணாக மௌசமி சேட்டர்ஜி கலக்கியிருப்பார்.