அம்ருதம் கமயா 1987 (இருளில் இருந்து வெளிச்சத்துக்கு என்னை வழிநடத்து என்கிற சத்வ மந்திரம் தான் இதன் பொருள்)
மலையாள சினிமாவின் மிக முக்கியமான படைப்பு, எம்டி வாசுதேவநாயரின் மிக அருமையான கதை, இயக்கம் ஹரிஹரன் அவர்கள், இசை எம்பி. சீனிவாசன், ஒளிப்பதிவு எஸ் ஸி பதி
லாலேட்டன் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்த படைப்பு இது என்றால் சற்றும் மிகையில்லை, ஒரு டாக்டரின் நெடுநாள் குற்ற உணர்வும் அதற்கு நிகழ் காலத்தில் அவரின் ப்ராயச்சித்தமும் தான் கதை, இவருக்கு குற்ற உணர்வும் ஏமாற்றமும் நேரும் போதெல்லாம் பெத்தடின் ஊசி போட்டு அதன் மயக்கத்தில் ஆழ்கிறார், அக்காட்சிகள் மிகவும் தத்ரூபம்,
மிகவும் உயிரோட்டமான படைப்பு இது, படத்தில் பாடல்களே கிடையாது, அரசு மருத்துவமனையில் புதிதாய் வேலைக்குச் சேரும் மோகன்லால் தன் அக்காவின் மாமனாரும் தன் வருங்கால மாமனாருமான திலகன் ( தாய் மாமன் ) வீட்டில் தங்கிக் கொண்டு அவரின் உதவியால் தனியாக க்ளீனிக் அமைக்கிறார்,
அதிகம் சம்பாதிக்க எண்ணம் இல்லாத லட்சிய மருத்துவர இவர், பல நோயாளிகளிடம் பணம் வாங்க மாட்டார், விலை உயர்ந்த மருந்துகள் பரிந்துரை செய்ய மாட்டார், இதனால் மருந்து வியாபாரம் செய்யும் இவரின் தாய் மாமனுக்கும் அவரது மகன்களுக்கும் இவரைப் பிடிக்காமல் போகிறது
அவ்வூரில் ஒரு ஏழைப்பெண் இதய நோயாளிக்கு ( கமலா காமேஷ்) மருத்துவம் பார்க்க அவர் வீட்டுக்குச் செல்கையில், தன்னால் மருத்துவக் கல்லூரியில் ராகிங் செய்கையில் இதயம் நின்று போய் உயிரிழந்த வினித்தின் அம்மா அவர் என அறிகிறார், அதற்கு ப்ராயச்சித்தமாக வினித்தின் தங்கை பார்வதியை மருத்துவராக்கிப் பார்க்க முடிவு செய்கிறார் ,அதற்கு முன்னின்று உதவுகிறார்.
இந்த ப்ராயச்சித்தப் பயணத்தில் தன் வருங்கால மனைவி கீதா மற்றும், அவர் ஒட்டு மொத்த குடும்பத்தாரின் பகைக்கும் ஆளாகிறார்,
திலகன், பாபு நம்பூதிரி, கரமன ஜனார்தனன் நாயர், கீதா , பார்வதி , சுகுமாரி, தேவன், கேப்டன் ராஜு,என அட்டகாசமான காஸ்டிங்
மிக அருமையான படம் தவறவிடாதீர்கள்
https://youtu.be/EGKsom1pFR8
படத்தில் மோகன்லால் டாக்டர், இவர் மருத்துவக் கல்லூரியில் கடைசி வருடம் படிக்கையில் முதல் வருட மாணவரான வினித்தை நண்பர்கள் குழுவுடன் முரட்டு ரேகிங் செய்கிறார் ,
அவர் ஏழை குடும்பம்,anemic, இதய பலவீனமானவராதலால் சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார், அந்த குற்றத்தை இவர் தன்னுடைய புரபசர் துணை கொண்டு அன்று மூடி மறைத்து விடுகிறார்,
ஆனால் மனசாட்சி இவரை நொடி கூட நிம்மதியாக இருக்கவிடவில்லை, இவர் தூங்க கண்ணை மூடினாலே லட்சிய மருத்துவ மாணவன் வினித்தின் முகம் தான்,காதுகளில் இவர் மற்றும் நண்பர்களின் ராட்சச சிரிப்பு தான்.
மருத்துவப் படிப்பிற்குப் பின் இவர் புது மனிதர், தன் தெம்மாடித்தனம் எல்லாவற்றையும் என்றோ மூட்டை கட்டிவிட்டவர்.
மனம் திருந்தி சமூகத்தில் ஏழை பாவங்களுக்கான அரசு மருத்துவராக மருத்துவமனையில் பணியாற்றுகிறார்,
அதுவும் போக ஏழைகள் வீட்டிற்குச் சென்று இலவச வைத்தியம் பார்ப்பதையும் கடமையாகவே வைத்துள்ளார்,
அன்று இவர் இறந்து போன மருத்துவ மாணவர் வினித்தின் அம்மாவை அவர் வீட்டுக்குப் போய் சிகிச்சை அளித்து வருகிறார், அங்கே வினித்தின் போட்டோவைப் பார்த்ததில் இருந்து குற்ற உணர்வு தலைதூக்கி நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது,எத்தனை குடித்தும் போதவில்லை.
மனம் முழுக்க குற்ற உணர்வு நிரம்பிவிட்டது, இவர் வருங்கால மனைவி கீதா , தாய்மாமன்,தன் அக்கா,அக்காவின் கணவர், மாமனார் ஆகியோர் இவர் பணத்தின் மீது ஆர்த்தி இல்லாததால் காட்டும் உதாசீனம் எல்லாம் சேர்ந்து மேலும்கழிவிரக்கம் கொள்ள வைக்கிறது,
தன் மருத்துவப் பெட்டியில் பிபி பார்க்கும் கருவிக்குள் ஒளித்து வைத்திருக்கும் பெத்தடினை ஊசியில் ஏற்றி போட்டுக் கொள்ளும் காட்சியைப் பாருங்கள், இவருக்கு முகத்தில், கண்களில் , உடம்பில் எப்படி? இத்தனை லாவகமாக உணர்ச்சிகள் கைகூடி வருகிறது.
அம்ருதம் கமயா 1987 (இருளில் இருந்து வெளிச்சத்துக்கு என்னை வழிநடத்து என்கிற சத்வ மந்திரம் தான் இதன் பொருள்)
மலையாள சினிமாவின் மிக முக்கியமான படைப்பு, எம்டி வாசுதேவநாயரின் மிக அருமையான கதை, இயக்கம் ஹரிஹரன் அவர்கள், இசை எம்பி. சீனிவாசன், ஒளிப்பதிவு எஸ் ஸி பதி
லாலேட்டன் நடிப்பில் விஸ்வரூபம் எடுத்த படைப்பு இது என்றால் சற்றும் மிகையில்லை, ஒரு டாக்டரின் நெடுநாள் குற்ற உணர்வும் அதற்கு நிகழ் காலத்தில் அவரின் ப்ராயச்சித்தமும் தான் கதை,
மிகவும் உயிரோட்டமான படைப்பு இது, படத்தில் பாடல்களே கிடையாது, அரசு மருத்துவமனையில் புதிதாய் வேலைக்குச் சேரும் மோகன்லால் தன் அக்காவின் மாமனாரும் தன் வருங்கால மாமனாருமான திலகன் ( தாய் மாமன் ) வீட்டில் தங்கிக் கொண்டு அவரின் உதவியால் தனியாக க்ளீனிக் அமைக்கிறார்,
அதிகம் சம்பாதிக்க எண்ணம் இல்லாத லட்சிய மருத்துவர இவர், பல நோயாளிகளிடம் பணம் வாங்க மாட்டார், விலை உயர்ந்த மருந்துகள் பரிந்துரை செய்ய மாட்டார், இதனால் மருந்து வியாபாரம் செய்யும் இவரின் தாய் மாமனுக்கும் அவரது மகன்களுக்கும் இவரைப் பிடிக்காமல் போகிறது
வினித்தின் கொலைக்குப் ப்ராயச்சித்தமாக வினித்தின் தங்கை பார்வதியை மருத்துவராக்கிப் பார்க்க முடிவு செய்கிறார் ,அதற்கு முன்னின்று அப்படி உதவுகிறார்.
இந்த ப்ராயச்சித்தப் பயணத்தில் தன் வருங்கால மனைவி கீதா மற்றும், அவர் ஒட்டு மொத்த குடும்பத்தாரின் பகைக்கும் ஆளாகிறார்,
திலகன், பாபு நம்பூதிரி, கரமண ஜனார்தனன் நாயர், கீதா , பார்வதி , சுகுமாரி, தேவன், கேப்டன் ராஜு,என அட்டகாசமான காஸ்டிங்
மிக அருமையான படம் இது, தவறவிடாதீர்கள்
https://youtu.be/bmd00OaQNac
#அம்ருதம்_கமயா,#மோகன்லால்,#பார்வதி,#எம்டிவி,#பாபு_நம்பூதிரி,#கீதா,#வினித்,#ஹரிஹரன்
https://m.facebook.com/story.php?story_fbid=10158429778591340&id=750161339