பரிணயம் படத்தில் தாஸேட்டா பாடிய
"ஸாமஜ ஸஞ்சாரினி நீ,ஸரஸீருக மதுவாதி நீ" என்ற இப்பாடலை ஒரு முறை கேட்டு விட்டால் தொடர்ந்து மனதில் ரீங்காரமிடும்,பாம்பே ரவி அவர்களின் முக்கியமான பரிச்சார்த்தம்.
மலையாள சினிமாவில் முக்கியமான படைப்பு " ஸ்மார்த்த விசாரம் " என்னும் நம்பூதிரிகளின் ஒடுக்குமுறையைப் பற்றி விரிவாக பேசிய படைப்பு. தாத்ரிகுட்டி என்னும் நம்பூதிரிப் பெண் மீது செய்யப்பட்ட விசாரணை தான் இந்த நூற்றாண்டின் கடைசி ஸ்மார்த்த விசாரம்.
இப்படத்தில் இளம்விதவை நம்பூதிரிப் பெண் உன்னி மாயா அந்தர்ஜனம் ( மோகினி) என்ற இல்லத்துப் பெண்ணை அவள் சம்மதத்துடன் கூடி கர்ப்பமாக்கி விடுகிறார் மாதவன் என்ற கதக்களி கலைஞர் ( வினித் ),
வயது முதிர்ந்த நம்பூதிரி கணவன் திடீரென இறந்த பின் நார்மடி உடுத்தி வீட்டுக்குள் காவல் வைக்கப்பட்ட நிலையில்,கதக்களி ஆட்டத்தில் மாதவனின் அர்ஜுனன் வேடம் அவள் மன உறுதியை அசைத்து விடுகிறது,
கூத்து நடக்கும் அத்தனை நாளும் தன் நாலுக்கெட்டு வீட்டின் மச்சுப் படிகளில் அந்த அர்ஜுனனை ஏறிவர அனுமதிக்கிறாள் மாயா, மிகுந்த ஆசையுடன் மாதவனுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள்,மாதவன் தன் மோதிரம் அணிவித்து கந்தர்வ மணம் புரிகிறான்,மாயா கருவுருகிறாள்
பின்நாட்களில் ஸ்மார்த்த விசாரம் என்னும் பூதம் பற்றி நினைக்கையில் பயம் கொள்கிறான் மாதவன், எங்கே தனக்கு இனி கதக்களியில் எதிர்காலம் இன்றி போய்விடுமோ? தன்னை ப்ரஷ்டம் செய்து நாடு கடத்தி விடுவார்களோ என்றஞ்சியவர் மோகினியை நட்டாற்றில் கைகழுவிவிடுவார்,
மூத்தமனை நம்பூதிரி (திலகன் ) தலைமையில் நடக்கும் ஆறு கட்ட ஸ்மார்த்த விசாரணை வழக்காடலில் மகா கோழையாகி தன்னிடம் மன்றாடிய மாதவனை காட்டித் தரவும் மாட்டார் மாயா.
அத்தனை கொடுமைகளையும் தாங்கி ஒற்றை ஆளாய் போராடி எதிர்த்து நின்று தன்னை ஏமாற்றியவனையே புறக்கணிப்பார் மாயா
படத்தின் கதை M.T.வாசுதேவ நாயர், பாடல் வரிகள் யூசுஃப் அலி கேச்சேரி, இசை பாம்பே ரவி, இயக்கம் ஹரிஹரன், ஒளிப்பதிவு s.குமார்
இந்த படத்துக்கு 1994 ஆம் வருடத்துக்கான நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது
Best Film on Other Social Issues - G. P. Vijayakumar ( தயாரிப்பு )
Best Screenplay - M. T. Vasudevan Nair
Best Music Direction - Bombay Ravi
Special Mention for Cinematography - S. Kumar
#ஸ்மார்த்தவிசாரம்,#பரிணயம்,#மோகினி,#வினித்,#திலகன்,#பாம்பே_ரவி,#தாஸேட்டா,#ஹரிஹரன்