இயக்குனர் கே.பாலசந்தரின் "ஆடவல்லு மீகு ஜோஹார்லு "(பெண்களே உங்களுக்கு வந்தனம்) தெலுங்கு திரைப்படம் 1981 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த ஊரின் முரட்டு படகோட்டி கிருஷ்ணம் ராஜு,தன் படகில் ஒற்றைக்கு பயணித்த டீச்சர் ஜெயசுதா பாடிய தத்துவப் பாடலில் மனம் கனிகிறான், காசுக்காக எதுவும் செய்யலாம் என்ற அளவுக்கு மனம் கல்லானவன் அவன்,
இவனது பால்யத்தில் கூத்துக்காரியான தாய் ஜெயமாலினி மனம் தடுமாறி ஜமீன்தார் சிரஞ்சீவியுடன் ஓரிரவு கழித்துவிட்டு தங்க மோதிரம் சன்மானம் பெற்று வந்தவள் தனக்கு இனிப்பூட்டுகிறாள் , அதை தின்னும் போதே கத்தியால் குத்தி கொலை செய்தவன், கொலைப்பழியை இவனது கூத்தாடி அப்பா கிருஷ்ண சைதன்யா ஏற்று சிறை சென்றுள்ளார்,இவன் பாறையில் முளைத்த மரமாக வளர்ந்திருக்கிறான்.
அப்படிப்பட்டவன் டீச்சர் ஜெயசுதா பாடலில் மனம் கனிந்து அவருக்கு தான் பிடித்த பெரிய மீனை பரிசளிக்கிறான்,
இந்த காட்சி போலவே மிக அழகான காட்சி கடலோரக் கவிதைகள் (1986) படத்தில் வரும், சின்னப்பதாஸ் டீச்சருக்கு குருகாணிக்கையாக ஏதாவது தந்து கொண்டிருப்பவன், அன்று டீச்சரை கடற்கரை மணலில் நிறுத்தி விட்டு திரைகடலில் மூழ்கி பெரிய மீன் ஒன்றை பிடித்தவன் கலங்கி நிற்கும் டீச்சர் பின்னால் வெளிப்பட்டு வந்து முன்னால் எழும்பி அந்த பெரிய மீனைப் பரிசளிப்பான்,
நடிகர் சத்யராஜ் சின்னப்பதாஸாகவே மாறியிருப்பார், அத்தனை உயர ஆகிருதி மணலில் எடுக்கும் விறுவிறு ஓட்டம் , அந்த பெரிய மீனை (அருவருப்பின்றி) பற்றி தூக்கி வரும் கம்பீரம்,அந்த கள்ளமில்லாத சிரிப்பு எல்லாம் அத்தனை அழகாக இருக்கும்,இவருக்கு மார்பில் முடி அதிகம் என்பதால் கை வைத்த பனியன் காஸ்ட்யூம், எனக்கு ஜென்னிஃபர் டீச்சர் என்றால் ரேகா மட்டுமே.
ஆராதனா படத்தில் சிரஞ்சீவி தான் சின்னப்பதாஸ் , அவர் நல்ல நடிகர், ஆனால் சின்னப்பதாஸ் என்றால் சத்யராஜ் தான், சிரஞ்சீவி மணலில் ஓடுகையில் அந்த கம்பீரம், படபடப்பு,வெள்ளந்தி இல்லை,
மீனை ஏந்துவதிலும் தயக்கம்.
பெரிய மீனை கையில் ஏந்துகையில் லாவகமும் இல்லை, ஆராதனா பார்த்தால் இதை ஒருவர் உணரலாம்.
#ஆடவல்லு_மீக்கு_ஜோஹார்லு,#கடலோரக்_கவிதைகள்,#ஆராதனா,#சத்யராஜ்,#ரேகா,#கிருஷ்ணம்_ராஜு,#ஜெயசுதா,#மீன்,#சிரஞ்சீவி,#சுஹாசினி,#பரிசு,#கே_பாலசந்தர்,#பாரதிராஜா,#BS_லோகநாத்,#B_கண்ணன்,#thanksgiving,#gratitude