தவமாய் தவமிருந்து படத்தில் கடைசி காட்சி இது, மிகவும் முக்கியமானது.
மறைந்த முத்தையா (ராஜ்கிரண்) வீட்டில் அவர் மற்றும் மனைவி சட்டமிட்ட படங்களில் இருந்து துவங்கி புறப்பட்ட கேமரா , அவரின் கிழிந்து நைந்த ஈஸி சேர், பேரன் பேத்திகள் அவர் வரலாற்றை படிப்பதைக் காட்டும்,
மெல்ல ட்ராலியில் தாழ இடது புறம் பயணிக்கும் கேமரா முற்றத்தில் அவர் மூக்குக் கண்ணாடி ,குடை, செருப்புகளை சிரத்தையாக துடைத்து ட்ரங்க் பெட்டியில் வைக்கும் மருமகளைக் காட்டும்.
ட்ரெடில் எந்திரத்தில் மும்முரமாக ஈமைக்ரியை பத்திரிக்கை அச்சடிக்கும் தம்பி ராமலிங்கத்தை காட்டிவிட்டு, வீட்டுக்கு வந்திறங்கும் அண்ணன் அண்ணி குழந்தைகளைக் காட்டும்,
அண்ணன் ராமநாதன் தயங்கியபடி அப்பாவின் சைக்கிளை துடைக்கத் துவங்குவதையும் அழகாக காட்சிப்படுத்தும்,
தம்பி தன்மையாக அண்ணனை நோக்கி அப்பாகிட்ட கேட்ட அந்த ஒரு லட்சத்த நான் தர்ரேன், இந்த வீட்டை விக்க வேண்டாம்ணே, எனக்கினி நீதான் இருக்கே, உனக்கு என்ன தேவைன்னாலும் என்னக் கேளு என்றது தான் தாமதம், கல் மனமும் கூட உடையும்,கண்ணீர் பெருக்கெடுக்கும், பார்வையாளர்கள் உள்ளத்தை புடம் போடும் சினிமா, இத்தனை அழுத்தமான காட்சி இத்தனை இயல்பாக வர ஒளிப்பதிற்கு எத்தனை மெனக்கெடல் செய்திருக்க வேண்டும் இயக்குர் சேரனும் ஒளிப்பதிவாளர் M.S.பிரபுவும்.
#தவமாய்_தவமிருந்து,#சேரன்,#MS_பிரபு,#ராஜ்கிரண்,#சரண்யா,#இளவரசு,#பத்மப்பிரியா,#செந்தில்குமார்,#மீனாள்,#பி_லெனின்,#சபேஷ்_முரளி,