தவமாய் தவமிருந்து படத்தில் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகர் இளவரசு இருவரும் படப்பிடிப்புக்கு பத்து நாட்கள் முன்பே வந்து ட்ரெடில் அச்சு எந்திரத்தை இயக்குவதற்கு பயிற்சி பெற்றதை இயக்குனர் / நடிகர் சேரன் அழகாக விவரிக்கிறார்,
https://www.facebook.com/2149640755266718/posts/2850641021833351/
பயிற்சி பெற்று பத்து நாட்களில் அந்த ட்ரெடில் இயந்திரத்தை இயல்பாக இயக்கியபடி வசனங்கள் பேசினார்கள் என்றார்,
எத்தகையை கதாபாத்திரங்கள் முத்தையாவும் அழகரும், இந்த முத்தையா அச்சக போர்ஷன் ஒரு அழகிய சிறுகதை போல உருப்பெற்றிருக்கும்.
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ட்ரெடில் என்று ஒரு தரமான சிறுகதை எழுதியிருப்பார்,அச்சகத்தில் சொற்ப கூலிக்கு பணிபுரியும் ட்ரெடில் ஆபரேட்டர் வரியநிலையை சொல்லும் கதை.
இங்கே படிக்கலாம்.
http://geethappriyan.blogspot.com/2014/07/blog-post.html?m=1
இந்த முத்தையா கதாபாத்திரம் நடிகர் மம்முட்டி செய்ய வேண்டிதாம்,அவர் செய்தால் இரண்டாம் மகன் ராமலிங்கம் கதாபாத்திரம் செய்கிறேன்,இல்லை என்றால் தந்தை மகன் இரண்டு கதாபாத்திரங்களும் செய்கிறேன் என சொன்னாராம்.
#சேரன்,#ராஜ்கிரண்,#இளவரசு,#MS_பிரபு,#மம்முட்டி,#சேரன்,#தவமாய்_தவமிருந்து,#ட்ரெடில்_எந்திரம்