1932 ஆம் ஆண்டு JRD டாட்டா துவக்கிய விமான நிறுவனம் டாட்டா ஏர்லைன்ஸ், 1946 ஆம் ஆண்டு அது ஏர்இந்தியா என்ற புதிய பெயரில் பொதுவுடமை நிறுவனமானது.முதல் வருடம் நிகர லாபமாக 60 ஆயிரம் ஈட்டிய நிறுவனம், நான்கே வருடங்களில் 60 லட்சம் ரூபாய் நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்தது.
1948 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய அரசால் 49 சதம் பங்குகள் கையகப்படுத்தப்பட்டு ஏர் இந்தியா என்ற பெயரிலேயே 69 வருட காலங்களாக விமான சேவை செய்து வருகிறது, இடையில் எத்தனையோ சோதனைகள, அடுக்கடுக்கான பேரிடர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாத படிக்கு நிறுவனமே நொடிந்து போனது.
தற்போது,மிகுந்த நஷ்டத்தில் இயங்கிவரும் இந்நிறுவனத்தை, மீண்டும் தனியாருக்கே விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, டாடா குழுமத்திற்கே, ஏர் இந்தியா நிறுவனம் கைமாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏர் இந்தியாவில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில், 51 சதவீதத்தை, டாடா குழுமம் வாங்க உள்ளதென்றும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலையில், ஏர் இந்தியா நிறுவனம், ரூ.52,000 கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளதாம், ஏர் இந்தியா டாட்டா வசம் செல்லுமென்றால் , குடும்ப சொத்தை மீண்டும் மீட்ட பெருமை அந்நிறுவனத்துக்குக் கிடைக்கும்.
1930 ,40 களில் வெளியான டாட்டா ஏர்லைன்ஸ் விளம்பரங்கள் இங்கே