https://youtu.be/9wtXS9Mozi8
பணத்தை விட பெரிய தெய்வம் இங்கில்லையடா!!!
ஆயிரம் உள்ளவன் "தனிகன்" (பணக்காரன்)
லட்சம் உள்ளவன் "பிரபு"
கோடி உள்ளவன் "ஈஸ்வரன்" "கோடீஸ்வரன்"
உனக்கில்லாத தெய்வ அனுக்ரஹம் என்னிடம் உள்ளதடா ,பணம்!!!
அடுத்தவனிடம் உள்ள பணம் சமூகத்தில் எத்தனை பெரிய கவர்ச்சியாகவும் எத்தனை பெரிய அச்சுருத்தலாகவும் இருக்கிறது, பணத்தால் ஊரார் வாயை எப்படி சடுதியில் அடைத்து அவமானப் படுத்தவும் முடிகிறது என்பதற்கு சான்றாக எழுத்தாளர் M.T. வாசுதேவன் நாயர் வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் வைத்த ஒரு அற்புதமான வீர்யமான காட்சி,
நடிகர் சுகுமாரன் பேசும் வசனங்களைப் பாருங்கள் , ஆறு வருடங்களுக்கு முன் தாரித்ரியத்தில் உழன்றவர் , கல்ஃப் வாசம் மற்றும் அதிர்ஷ்டம் இன்று அவரை கோடீஸ்வரனாக்கியிருக்கிறது, ஊருக்குத் திரும்பியவர் தன்னை அப்போது அவமானப்படுத்தியவர்களை இரட்டிப்பாக அவமானப்படுத்துகிறார்,
தன் தங்கைக்கு வயிற்றில் பிள்ளை தந்து அவளை திருமணம் செய்யாமல் கைவிட்டு, அவள் தற்கொலை செய்து சாகக் காரணமான நண்பனை ஊர் பொதுவில் வைத்து அடிக்கிறார் , அப்போது வருபவை இந்த வசனங்கள் , எத்தனை கூர்மையாக உள்ளது? பாருங்கள்.
மம்மூட்டி இரு நண்பர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு குளிர் காயந்தவர் அந்த திருப்தியை எத்தனை கச்சிதமாக முகத்தில் காட்டியிருப்பதைப் பாருங்கள், இது அவரின் முதல் படம்.
இவரை மணக்க இருந்த ஸ்ரீதேவிக்கு (ஜலஜா) அண்ணன் அவமானப்படுத்தப்பட்டது தானே அவமானப்படுத்தப்பட்டது போல ஆகிறது, இனி வாழ்க்கை முழுதும் கன்னியாகவே இருந்துவிடுகிறேன் என்ற வைராக்கியத்தை முகத்தில் காட்டி விடுகிறார்.
சிக்கனமான , கச்சிதமான ஒளிப்பதிவு பாருங்கள், இப்படி camera location fast change செய்வது ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபுவின் signature பாணி,
இந்தப்படம் பற்றி எத்தனை எழுதியும் நிறைவடையவில்லை.
#வில்காணுண்டு_ஸ்வப்னங்கள், #MT_வாசுதேவன்_நாயர்,#சுகுமாரன்,#சுதீர்,#மம்மூட்டி, #ராமசந்திரபாபு