தொண்டிமுதலும் த்ருக்ஷாக்ஷியும் படம் இந்திய ரியாலிச சினிமாவில் மிக முக்கியமான படைப்பு, அதற்கு இந்த கள்ளன் பிரசாத்.P.K ன் பங்களிப்பு அபாரமானது. பிரசாத்தின் தந்தை பெயர் புருஷன்.கள்ளிப்பரம்பில்.இவன் ஊர் அண்டத்தோடு po, சாவக்காடு.ரஸம் வேண்டி இளம் வயதில் வீடு விட்டிருப்பான். கன்னடமும் அறிந்திருப்பான்.
இந்தப் படத்தில் எல்லாக் காட்சிகளுமே அழகியல் பொருந்தியதாக இருந்தாலும் இது பெஸ்டு.
தப்பி ஓடி மீண்டும் பிடிபட்டு இனி பிடித்து நிற்க வாய்ப்பேயில்லை என்றாகும் போது பிரசாத்தின் முகம் எந்த சலனமும் இன்றி தெளிவாக மாறும். கால் வேதனை மட்டும் பிண்ணி எடுப்பதால் பக்கத்து செல் கைதி கருணாகரனிடம் கால் பிடித்துவிடச் சொல்லி உதவி கேட்பான்.
அப்போது இத்தனை அடி அடித்த போலீசாரைப் பற்றி கடுகளவே குறை பட்டுக்கொள்வான்.கூடவே
தன் களவுத் தொழிலை அதன் நேர்த்தியை பெருமை பொங்க விவரிப்பான்.
அந்த ஒற்றையடி ஷாட் அழகிய கவிதை . ஃபஹாத்தின் நொடிக்கு நொடி மாறி ஜாலம் செய்யும் முகபாவங்களை இங்கே பாருங்கள்.
கருணாகரா!!! , இந்த போலீஸுக்கு எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் போல, நம் காலில் முள் குத்திவிட்டதென்றால் காலை வெட்டியா முள்ளை எடுப்போம், பதுக்க மெல்ல அந்த முள்ளை மட்டும் தானே கிள்ளி எடுக்க வேண்டும்.என் கேஸ் ஒரு தெஃப்ட் கேசு, இதைப் போய் ராபரியாக பதிந்துள்ளனர். இந்த ராபரி என்றால் என்ன தெரியுமா?
சிங்கப்பூர் டிசைன் செயின் மிகவும் ஷார்ப்பானது, அதை பைக்கில் சென்றுத் திருடுகையில் உறுதியாகப் பிடித்து இழுக்கையில் கழுத்து நரம்பே அறுந்து உயிர் போகும்.அது தான் சரிக்கும் ராபரி.எண்டது தெஃப்ட் கேசு.
நான் தொழிலுக்குப் போகும் போது பூப் போல பதுக்க நெயில் கட்டரால் பின்னங்கழுத்தில் ஒத்தியெடுப்பேன், பெண் சிணுங்கவில்லை என்றால் மட்டும் முன்னெடுப்பேன்.மெல்ல மாலையை கட் செய்து, லயமாக லாவகமாக இதோ இப்படி விரலில் சுற்றி மெல்ல மெல்ல இழுத்து அந்த செயினை சொந்தமாக்குவேன் என்று சொல்லி விட்டு, கொஞ்சம் பாதத்தையும் அமுக்கேன் என கேட்பான்.
4 months 3 weeks 2days and later என்ற ருமானிய படம் ஒரு சிறந்த ரியாலிச பாணி த்ரில்லர் சினிமா அகராதி, அதை ஊன்றிப் படிக்கையில் ஓராயிரம் ரியாலிச சினிமாக்களுக்கான கரு நமக்கு கிடைக்கும்.