மனிதனுக்குள் தூங்கும் மிருகம் சில அத்தியாவசிய தருணங்களில் தட்டிஎழுப்பப்பட்டே ஆகவேண்டும் , இதை மிக அழகாக உலகெங்கும் செல்லுலாய்டில் பதிவு செய்துள்ளனர், செய்து கொண்டே இருக்கின்றனர்,
நிஜ வாழ்வில் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு நீதி விரைந்து கிடைக்காததால் , சினிமாவில் கெட்டவன் வீழ்கையில் நம்மை அறியாமல் கைதட்டுகிறோம், உணர்ச்சிவயப்பட்டு அந்த நிழலின் நடிப்பில் கட்டுண்டு லயித்து குத்து வெட்டு என்கிறோம்.
1971 ஆம் ஆண்டு டஸ்டின் ஹாஃப்மேன் மற்றும் ஸூஸன் ஜார்ஜ் நடித்து வெளியான கல்ட் கிளாஸிக் படம் ஸ்ட்ரா டாக்ஸ் ,
இது ஊரக இங்கிலாந்துக்குள் விடுமுறையைக் கழிக்க வரும் கணக்கு ப்ரொஃபஸர் மற்றும் அவரின் அழகிய காதல் மனைவி உள்ளூரில் ஸெக்சுவல் ஸ்டார்வேஷனில் காய்ந்து கிடந்து வெட்டிப் பஞ்சாயத்து பேசிக்கொண்டு நடக்கும் இளைஞர்கள் மற்றும் கிழவர்கள் தொல்லையில் சிக்கி, தப்பிப் பிழைத்து ஜெயிக்கும் கதை.
எத்தனை அருமையான பெயர் இந்த ஸ்ட்ராடாக்ஸ்,சீனாவில் அறுவடைத் திருவிழாவில் வைக்கோலால் செய்த சொக்கப்பனை நாய் பொம்மைகளை ஊர்மக்கள் நரகாசுரனை கொளுத்துவது போல கொளுத்துவர்.இதில் நாயகன் அப்படி சொக்கப்பனை கொளுத்துவது போல பலி கொடுப்பதால் இப்படத்துக்கு ஸ்ட்ராடாக்ஸ் என பெயரிட்டுள்ளனர்.இதன் பொருள் டஸ்டின் ஹாஃப்மேன் மனைவியிடம் பேசும். வசனம் ஒன்றின் மூலம் அறிந்தேன்.
ஸ்ட்ராடாக்ஸ் படத்தை வடிவம் கெடாமல் அப்படியே தழுவி மலையாளத்தில் மேம்பட்ட வடிவமாக்கி ட்ரிப்யூட் செய்திருக்கிறார் இயக்குனர் அமல் நீரட்.கார்பன் படத்தைத் தொடர்ந்து இதிலும் கேரளத்தின் அழகிய மலைப்பிரதேசமான வாகமன் தான் கதைக்களம்.இசையும் ஒளிப்பதிவும் குறிப்பிடவேண்டிய அம்சங்கள்.
மூலப்படைப்புக்கு தன் படைப்பால் மரியாதை செய்த அமல்நீரட் நன்றி மட்டும் எங்கும் சொல்லவேயில்லை. அது மட்டும் நெருடல்.
படத்தில் ஃபஹாத் ஃபாஸில் ,ஐஸ்வர்ய லெக்ஷ்மி நடிப்பு மிகவும் அருமை , மிகவும் யதார்த்தம்.ஃபஹாத்திடமிருந்து ஜெம் போன்ற ஒரு ஃபெர்ஃபார்மன்ஸ்.மிக அழகிய இளம் கணவன் மனைவியாக அசத்தியிருந்தனர்.
ஸ்ட்ராடாக்ஸ் 1971 மூலப்படம் R ரேட்டிங்கைக் கொண்டது, இப்படத்தை 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஹாலிவுட்டில் மீள் உருவாக்கம் செய்தனர் , அது பூனைக்கு புலி வேஷம் போட்டது போல இருந்தது, ஆனால் ஃபஹாத் பாஸில் டஸ்டின் ஹாஃப்மேனைப் போன்றே அந்த கணவன் கதாபாத்திரத்தில் ட்ரான்ஸ்ஃபார்மாகி வாழ்ந்திருக்கிறார்.
வரத்தன் (வேற்றூரான் அல்லது வெளியூர்காரன்) மலையாளத்தில் முக்கியமான முயற்சி, அந்த கடைசி 20 நிமிடக் க்ளைமேக்ஸ் நமக்கு அட்ரிலினை நரம்புக்கு ஏற்றும்.
இப்படம் பெண்கள் அவசியம் பாருங்கள், நம் சமூகம் பெர்வர்டுகள், பீடோஃபல்கள், இன்செஸ்டுகள் , செக்சுவல் ஸ்டார்வேஷனல் சைக்கோக்களால் நிரம்பியுள்ளது, இந்த சாக்கடையில் உழலும் பன்றிகளுக்கு வெடி வைத்துப் பிடிக்கும் துணிவையும் உத்வேகத்தையும் படம் நமக்குத் தருகிறது.
படம் தவறவிடாதீர்கள்.ஒரிஜினல் வெர்ஷனில் நிரம்பியிருந்த எரோடிக்கல் ரொமான்ஸ் தேஸி வெர்ஷனில் subtle ஆக குறைக்கப்பட்டு இது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக எடுபட்டுள்ளது,
இது மிகப் பெரிய வித்தை.திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கல்ட் படங்களுக்கு எப்படி தரமாக ட்ரிப்யூட் செய்யலாம் என இதைப் பார்த்துப் படியுங்கள். 2011 ஆம் ஆண்டு வெளியான ஸ்ட்ராடாக்ஸின் மீள் வெர்ஷனும் ஒரு திரைப்பாடம் தான்.அதையும் பாருங்கள்.
ஸ்ட்ரா டாக்ஸ் படம் பற்றி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10154307994591340&id=750161339
எழுதியவர் கீதப்ப்ரியன்
உரையாட geethappriyanbloggeratgmail.com