இரவில் சாலையில் செல்கையில் நம் வண்டியின் விளக்கு வெளிச்சம் பட்டு,அபாய எச்சரிக்கை பலகைகள் , வழிகாட்டிப் பலகைகள் ஒளிர்வதைப் பார்த்திருப்போம்,
அதே நோக்கில் நம் கத்திபாரா தொடங்கி பழவந்தாங்கல் சாலை மெட்ரோ வரையிலான விமான ஓடுபாதையை ஒட்டி அமைந்துள்ள மெட்ரோ பாலத்தின் கூரையை முழுக்க வெள்ளை ,சிவப்பு அபாய எச்சரிக்கை ரிஃப்ளக்டர்களால் உருவாக்கியுள்ளனர்,
இது இரவில் விமானியின் கவனத்தை ஈர்த்து இந்த வழித்தடத்துக்குள் விமானம் வராதவாறு உறுதி செய்யும், உலகிலேயே இது போல ரிஃப்ளக்டர் கூரை அமைக்கப்பட்ட முதல் மெட்ரோ வழித்தடம் இது தான்.
இங்கே பறக்கும் விமானத்தின் சக்கரத்துக்குக் கீழே அந்த சிகப்பு வெள்ளை கூரை தெரிவதைப் பாருங்கள், இக்கூரை இல்லாவிட்டால், விமானி இரவில் மெட்ரோ ரயில் மீதோ அதன் உயர் அழுத்தக் கம்பிகள் மீதோ வழி தவறி விபத்து ஏற்படுத்த வழிவகுக்கும்.
நம்ஊரில் கட்டுமானத் தரம் முன்னே பின்னே இருந்தாலும் , மக்கள் பாதுகாப்பு முன் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டிருக்கின்றனர் என நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.