சென்ற வாரம் பாஸ்போர்ட் புதுப்பிக்க தாம்பரம் அலுவலகம் சென்று வந்த அன்றே your passport printing started என்று SMS வந்தது, அன்று இரவே போலீஸ் ஒருவர் விசாரணைக்கு வீட்டுக்கு வந்தவர் கேள்விகள் கேட்டார்,இறுதியாக உங்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது புதிய பழைய வழக்குகள் உள்ளதா? என்று கேட்டார், நீங்கள் ஊரடங்கு சமயத்தில் திருவண்ணாமலை அல்லது ஆற்காடு மாவட்டம் சென்று வந்தீர்களா?என்று கேட்டார்,ஆமாம் திருவண்ணாமலைக்கு ஒரு இறப்புக்கு சென்று வந்தேன் என்று பதில் சொன்னதில் திருப்தியானவர், உடனே clearance கு அனுப்பி விடுகிறேன் என்று கையில் உள்ள tab ல் தகவல்களைப் பதிந்து நொடியில் அனுப்பிவிட்டார், police verification completed என SMS வந்தது, மறு நாள் பாஸ் போர்ட் வந்து விட்டது, இப்போது பாஸ் போர்ட் சேவை அத்தனை துரித கதியில் வருகிறது.normal பாஸ்போர்ட் ஒரு நாளில் வந்தால் tatkal அரைநாளில் வருமா? தெரியவில்லை
இது வரை மூன்று முறையும் என்னிடம் பாஸ்போர்ட் verification ற்கு வந்த போலீஸார் கடமையைச் செய்ய எந்த தொகையும் கேட்டதில்லை, இரவில் பணி செய்யும் நிலைக்கு அலுத்துக் கொண்டதில்லை, அலட்சியமாக பேசியதில்லை, எங்கள் வீட்டில் ஒரு டீ, காபி கூட குடித்ததில்லை, போலீஸாரின் பொருளாதார தன்நிறைவு சட்டம் ஒழுங்கில் இன்றியமையாதது.எப்படி சமகாலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறதோ அது போல போலீஸாருக்கும் நல்ல சம்பளம் வழங்கினால் கையூட்டு வாங்குவது நிச்சயம் நின்றுவிடும்.
இன்றைய சூழலில் இளைஞர்கள் தம் மீது எந்த போலீஸ் கேஸும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம், போலீஸ் கேஸ் இருந்தால் எக்காலத்திலும் பாஸ்போர்ட் வாங்க முடியாது,
#பாஸ்போர்ட்,#போலீஸ்_வெரிஃபிகேஷன்