"Pushpa i hate tears"
காகா ராஜேஷ்கண்ணா அமர் ப்ரேம் (1972) படத்தில் பேசும் வரிகள் இவை,ஐம்பது வருடங்களை நெருங்கினாலும் இன்னும் fresh.
அமர்ப்ரேம் படத்தில் இசையமைப்பாளர் R.D.பர்மன் அளித்த பாடல்கள் எல்லாமே அமரத்துவம் பெற்றவை,அதிலும் "இந்த சிங்காரி கோயி படுகே" அற்புதமானது, இது படத்தில் தாயை இழந்த புஷ்பாவை கல்கத்தா ஹூக்ளி ஆற்றில் படகு சவாரிக்கு அழைத்துப்போய் ஆனந்த்பாபு புஷ்பாவைத் தேற்றும் தருணத்தில் வரும்.
இந்தப் பாடலை கிஷோர் தா எத்தனை அருமையாக பாடியுள்ளார் பாருங்கள், இத்தனை உயரிய சங்கீதத்துக்கு அவருக்கு தேசிய விருது கூட தரவில்லை.
இதில் ஷர்மிளாஙதாகூருக்கு அப்போது தான் மகன் சயீஃப் அலிகான் பிறந்த சமயம்,இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவில் தான் நடந்தது, இந்த ஹூக்ளி ஆறு மற்றும் ஹவுரா பாலம் செட்டை மும்பையின் நட்ராஜ் ஸ்டுடியோவில் தத்ரூபமாக அமைத்திருந்தார் இயக்குனர் ஷக்தி சமந்தா,
இந்தப் பாடலை ஹவுரா பாலத்தில் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது,நட்ராஜ் ஸ்டுடியோவில் நீர்தொட்டி அமைக்கப்பட்டு முட்டி அளவு நீரில் படகுகள் விட்டு படமாக்கப்பட்ட பாடல் இது.
அப்போது சூப்பர்ஸ்டார் ராஜேஷ்கண்ணா எங்கே போனாலும் கட்டுக்கடங்காத கூட்டம், இளம் பெண்கள் கூட்டம் திரண்டு விடும், போலீசாரால் சமாளிப்பது கடினம் ,இந்தப் பாடலை எத்தனை அழகாக இரவு ஒளியமைப்பு செய்து ஒளிப்பதிவு செய்துள்ளார் Aloke Dasgupta.இவர் இயக்குனர் ஷக்தி சமந்தாவின் மூன்றாவது கண்ணாக செயல்பட்ட ஒளிப்பதிவாளர்.
பாலிவுட்டில் வந்த அசல் பிரம்மாண்டமான நளினமான தரமான திரைப்படங்களின் ட்ரெண்ட் செட்டர், படத்தில் எந்த Frame ம் வீணாக்க மாட்டார்,பார்த்துப் பார்த்து ரசித்து இழைப்பார், வண்ணப்படங்களின் மேதை என்றும் இவரை சொல்வார்கள்,
புது தொழில்நுட்பத்தை ஹாலிவுட்டிற்கு இணையாக பாலிவுட்டில் பயன்படுத்தி வெற்றி கண்டவர், international lobby skills ,cross cultural references கொண்டு படமெடுக்கும் திறன், க்ளாஸிக்கை படமாக்கும் முழுத் திறன் கொண்ட இயக்குனர் ஷக்தி சமந்தா, இவர் படங்களை இன்று பாரத்தாலும் fresh ஆக தோன்றும்,படத்தில் எல்லா துறைகளும் உச்சம் தொட்டிருக்கும்.
இந்தப் படத்தின் மூலக்கதை வங்க எழுத்தாளர் பிபூதிபூஷன் பண்டோபாத்யாய் எழுதிய Hinger Kochuri என்ற சிறுகதையைத் தழுவி Aravinda Mukherjee திரைக்கதை எழுதி இயக்கிய நிஷிபத்மா என்ற வங்காள மொழிப் படத்தை தழுவியது,
இந்திய சினிமாவில் எளிமையின் அழகியல் ( elegance in minimalism) ஒருவர் படிக்கவேண்டும் என்றால் இந்தப் பாடலில் இருந்து துவங்க வேண்டும்
சில நாடுகளில் பாடல் ஒலி வராது அவர்கள் யூட்யூப் லிங்கில் பாருங்கள்.
https://youtu.be/kpM0jPd6-7w
#அமர்ப்ரேம்,#ராஜேஷ்கண்ணா,#ஷர்மிளா_தாகூர்,#அலோக்_தாஸ்_குப்தw