https://youtu.be/A_FkEq6lZ_A
மகாநதி (1994 )திரைப்படத்தில் கங்கை தீரத்தில் படகில் செல்லும் போது வரும் " மாதங்கி தாரா ஹோ மா"பாடலை ஒருவர் மறக்க முடியாது,
கல்கத்தாவில் கங்கை நதியில் படகுக்காரர்கள் பாடும் folklore பாடலை Baul sangeet என்கின்றனர், கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் இது போல புகழ்பெற்ற Baul sangeet எழுதி இசையமைத்தும் இருப்பதாகப் படித்தேன்.
இசைஞானியின் இசை மேதமைக்கு மற்றொரு சான்றாக இந்த அந்நிய வங்காள மொழிக்கவிதைக்கு மெட்டமைத்து அந்த படகுக் காரரின் வாயசைப்பிற்கு ஏற்ப அந்த வரிகளை அதே மொழி லாவகத்துடன் பாடக்கூடிய சிறப்பான பாடகரைத் தேர்வு செய்து இப்பாடலின் துவக்கத்தை பாட வைத்திருப்பதைச் சொல்லலாம்,
இப்பாடலை இசைஞானி மற்றும் நடிகர் கமல்ஹாசன் பாடக் கேட்டதற்கிணங்க இங்கு வந்து பாடியது மறைந்த கன்னட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் C. அஸ்வத் அவர்கள், இவர் கன்னட நாட்டுப்புறப்பாடல்கள் இசையமைத்துப் பாடுவதில் பண்டிதர்,கன்னட நாட்டுப்புற பாடல்களை Jaanapada என்பார்கள்.மாதங்கி தாரா ஹோ மா என்று பெண்கள் குழுவினர் பாடியதும் இசைஞானியின் ஹார்மோனியம் அழகாக மெட்டிசைத்து பாடல் கடங்கள் டோலக் ஒலிக்க செவிகளில் விரிகிறது.
பாடகர் C. அஸ்வத் பாடி முடித்ததும் கடங்கள் ஒலிக்க அடுத்து கிருஷ்ணாவின் குரலில் எங்கேயோ திக்கு திசை காணாத தூரம் தான் என்று பாடுகையில் முழுமையாக கிருஷ்ணாவின் துக்கம் நமக்குள் ஊடுருவி நம் வயிற்றைப் பிசைகிறது, உடம்பெங்கிலும் மயிர்கூச்சங்கள் நேருகிறது, இத்தனை அரிய பாடலுக்கு அவ்வருடம் தேசிய விருது தராமல் பாராமுகமாகியிருக்கின்றனர்.
இந்த credits ஐ எல்லாம் documentation செய்திருக்க வேண்டும் அல்லவா? இந்த கவிதையை எழுதிய கவிஞர் பெயர் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் எந்த கேசட் கம்பெனிகளும் இதுவரை செய்யவில்லை,எத்தனை சிறிய மனிதர்களுக்கு எத்தனை பெரிய பதவியை இந்த கேசட் நிறுவனங்கள் தந்திருக்கின்றனர், கலைஞர்கள் பெயர்கள் விடுபட்டதற்கு இசைஞானியிடம் சென்று கேட்க முடியாது அப்போது ஆறுநாட்களுக்கு ஒரு படம் மிகுந்த தரமாக பின்னணி இசையுடன் செய்தவர் அவர், இதே மகாநதி திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்திற்கும் இசைஞானி கவிஞர் வென்னலகாந்தியுடன் அமர்ந்து ஆறு பாடல்களை அதே மெட்டிற்கு மிகுந்த தரமாக உருவாக்கினார், இன்று ஒரு இசையமைப்பாளர் இத்தனை பாரம் தாங்கினால் ஒரே படத்தில் மூளை வெடித்து விடும்.
இதில் இசைஞானி கொடுத்த ஒரு போனஸ் பாடல்,துவக்கமெங்கே இது வரை சரிவரப் புரியவில்லை என்ற பாடல் முக்கியமானது கவிதை நடையில் துவங்கி சொல்லாத ராகங்கள் என்னென்ன என்று புது வடிவம் பெறும், இப்பாடலை ஜானகியம்மா,SPB அவர்கள் பாடினர், இந்த அபாரமான பாடல் படத்தில் இல்லை.
எங்கேயோ திக்கு திசை பாடல் பற்றி
https://m.facebook.com/story.php?story_fbid=10159635500441340&id=750161339
#மகாநதி,#கமல்ஹாசன்,#இசைஞானி, #கங்கை, #C_Ashwath, #Jaanapada,#Baul_sangeet,#MS_பிரபு_DOP