த்ரிஷ்னா 1981 |மலையாளம் | ஐவி சஸி | M.T.வாசுதேவன் நாயர்

 த்ரிஷ்னா 1981 ஆம் ஆண்டு M.T.வாசுதேவன் நாயர் கதை திரைக்கதையில் ஐ.வி.சஸி இயக்கத்தில்  வெளியான மலையாள திரைப்படம்,இப்படத்தின் ஒளிப்பதிவு ஜெயனன் வின்சென்ட், இசை : ஷ்யாம் மாஸ்டர்.


இதே த்ரிஷ்னா என்ற பெயரில் இந்தியில் இரண்டு முறை திரைப்படங்கள் வந்துள்ளன, புத்தர் மறுபிறப்பு எடுக்க காரணிகள் என்று 12 விலக்க வேண்டிய நிதனாக்களை (முன் நிபந்தனைகள் ) போதித்திருக்கிறார், 








அதில் 8 வது நிதனா தான் " த்ருஸ்னா" அதாவது Craving , ருசியாக உண்பது, மது குடிப்பது, சல்லாபிப்பது போன்ற picnic மனநிலை உல்லாசத்துக்கு ஏங்குதல் இதன் பொருள், இந்தியில் வந்த இரண்டு படங்களும் இப்படமும் இந்த theme ஐ பொருத்தமாகக் கொண்டிருக்கின்றன, அதற்கேற்ற இப்பெயரையும் கொண்டிருக்கின்றன.


தாஸ் (மம்மூட்டி )ஒரு இளம் தொழிலதிபன், வாழ்வில் தோல்விகள் பல கண்டவன், தனக்கு பிடித்த எதுவும் கைக்கு கிடைக்கப்பெறாதவன், தந்தை உண்டாக்கிய தொழிற்சாலை இப்போது லாக் அவுட்டில் உள்ளது, இங்கிலாந்தில் வக்கீலுக்கு படித்தவன், இசை தெரியும், நிறைய  உலக இலக்கியம் படித்தவன், முப்பதுகளில் இருப்பவன் .


தன் மறைந்த தந்தை வாங்கி வைத்த உல்லாச  பங்களா இருக்கும்  ஊட்டிக்கு வாடகை காதலி ஜெயஸ்ரீ (ஸ்வப்னா ) உடன் வருகிறான், 


வரும் வழியில் தன் வெளிநாட்டு MG convertible ஸ்போர்ட்ஸ் காரை சூடு தணிக்க bonnet திறந்து வைத்து புகைக்கையில்  , ஜெயஸ்ரீயுடன் நல்ல நட்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை, அவள் தன் பெயரைத் தவிர எதுவும் அவனிடம் பகிர்வதாக இல்லை,அத்தனை மனம் கல்லாகியிருக்கிறாள்.அவளுக்கு  புகைக்க தந்தும், ஸ்காட்ச் ஊற்றித் தந்தும் சிருஷைகள் செய்தும் கூட அந்நியோன்யம் ஏற்படவில்லை.


ஊட்டி பங்களாவில் விசுவாசமான மேலாளர்   பரமேஸ்வரன் தாஸை

வரவேற்றவர்  தான் தன் மகன் கோபன் மற்றும் சமீபத்தில் சேர்த்துக் கொண்ட  துணைவி  கண்ணம்மாவிடம் முதலாளி  மணமுடித்து மனைவியுடன் வந்திருக்கிறார் , என்று பொய்சொன்னதாக சொல்கிறார், 


சுற்றத்தில் நல்ல தரவாட்டின் பெயரைக் காக்க அப்படி சொன்னதாக  சொல்கிறார், தாஸுக்கு வயது முப்பதாகிறதே? திருமணம் முடிக்க கூடாதா? என உரிமையில் உபதேசம் செய்கிறார், தாஸ் உபதேசம் வேண்டாம் என்று அகல்கிறான்.


ஜெயஸ்ரீ வாடகைக் காதலி தான் என்றாலும், சுய மரியாதை உள்ளவள், முதல் சரசத்திற்கு தயாராகையில் தாஸ் அவள் இணங்க மறுத்ததற்கு அவளை பரத்தேவ்டியச்சி என கோபத்துடன் திட்ட, அவள் bloody bastard என்கிறாள், அறையை விட்டு அகன்று தோட்டத்தில் சென்று பூக்களை ரசிக்கிறாள், தாஸ் தன் தடித்த நாக்கின் தவறை உணர்ந்தவன் அவளுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூவை காட்டி , மெல்ல நட்பாகி படுக்கைக்கு கொண்டு செல்கிறான்.


மறுநாள் காலையில் இவன் அப்பாவின் குடும்ப நண்பர்கள் பக்கத்து எஸ்டேட்டில் தங்கியிருப்பவர்கள் , கூட்டாக நடைபயிற்சி செல்கையில் ,பரமேஸ்வரன் மகன் கோபன் அவசரக்குடுக்கையாக அவர்களிடம் முதலாளியும் முதலாளி அம்மாவும் வந்துள்ளனர் என்று சொல்லிவிட  அவர்கள் வீட்டுக்குள்,  கூட்டமாக வந்து பெரிய கூடத்தில் சோஃபாவில் காத்திருக்கின்றனர்,


 தாஸின் படுக்கை அறைக் கதவு தட்டப்படுகிறது.,இனி என்ன?பொய் மேல் பொய்கள், மனைவி இன்னும் எழவில்லை என தாஸ் சொல்லி அவர்களை அனுப்பப் பார்க்கிறான்,


ஆனால்  ஜெயஸ்ரீ குளித்து புடவை அணிந்து ஆச்சர்யமூட்டுபடி அனைவருக்கும் தேநீர் கொண்டு வருகிறாள், எல்லாரும் ஜோடிப் பொருத்தத்தை வியக்கின்றனர், வந்த கூட்டத்தில் தன் தந்தையின் நண்பர் மகளான ஸ்ரீதேவி (ராஜலட்சுமி)என்ற கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணை அவளின் தோற்றம் மற்றும் வெளிப்படையான பேச்சிற்காக பார்த்தவுடன் பிடித்து விடுகிறது தாஸுக்கு, 


தன்னிடமும் எல்லோரிடமும் நன்றாக நடந்து கொண்டதால் ஜெயஸ்ரீக்கு நன்றி சொல்கிறான் தாஸ்.


 மறுநாள் ஊட்டியில் suicide பாயிண்ட் அருகே தனிமையில் பாடிக்களித்து இயற்கையை ரசிக்கும் ஸ்ரீதேவியிடம் சென்று பேசுகிறான் தாஸ், அவளுக்கு இரண்டு வயதில் நடந்த சம்பவங்கள் கூட நினைவிருப்பதாகச் சொல்கிறாள், 


தாஸின் செல்லப்பெயர் சிங்கன் என்பதை நினைவூட்டி வியப்பூட்டுகிறாள், தாஸிற்கு வீட்டிற்கே வந்து பாடமெடுத்த ஆசிரியர்களை உருவத்துடன் நினைவூட்டுகிறாள், தாஸுக்கு தன்னையும் ஒரு ஜீவன் மதித்து இத்தனை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


அடுத்த வாரம் ஸ்ரீதேவி வீட்டினர் தாஸையும் ஜெயஸ்ரீயையும் இரவு உணவுக்கு அழைக்கின்றனர்,ஜெயஸ்ரீ கிளம்ப ஆவலாக இருக்க,அவளை நீ விஸ்கி அருந்திவிட்டு இங்கேயே இரு என புறக்கணிக்கிறான்.


 தாஸ் அவளுக்கு தலைவலி என்று அவர்களிடம் சமாதானம் சொல்கிறான், அவர்கள் மசக்கையாக இருக்கும் என்றதற்கு மறுப்பும் சொல்லவில்லை, இரவு விருந்துக்கு பகலிலேயே சென்று அந்த குடும்பத்துடன் மணிக்கணக்கில் பேசி பாடி நேரம் செலவிடுகிறான்.


ஸ்ரீதேவி தாஸுக்கு சங்கீதத்தின் மீதான ஆர்வத்தை மெச்சி தன்னிடம் இருக்கும் வயலினைப் பரிசளிக்கிறாள்.


இரவு வீடு திரும்பிய தாஸ்,படுக்கையில் போதையில் சோர்ந்து கிடக்கும் ஜெயஸ்ரீயை எழுப்ப,அவள் சுருண்டு படுக்கிறாள், வயலினைப் பிரித்து சிறிதாக வாசிக்கிறான் தாஸ், அந்த இதமான சங்கீதம் ஜெயஸ்ரீயின் மனதை தொடுகிறது, அவன் அருகே வந்து அணைத்துக் கொள்கிறாள் ஜெயஸ்ரீ.


மறுநாள் டேப்ரிக்கார்டரில் டிஸ்கோ ஓடவிட்டு ஆடுகிறாள் ஜெயஸ்ரீ, அங்கு இதைப் பார்த்து வியந்து நிற்கும் பரமேஸ்வரனை என்ன? என்று கேட்கிறாள், 


அவர் போனதும் அவர் மகன் கோபன் வர,அவனை உள்ளே அழைத்து உடன் சேர்த்து ஆடுகிறாள், அப்போது தாஸ் உள்ளே வந்தவன் கோபமாக கத்த, கோபன் ஓடிவிடுகிறான், 


ஜெயஸ்ரீ தன்னை அடிமையாக நடத்துவதை விரும்பாதவள் கண்ணாடி டம்ளரை தாஸை நோக்கி வீச, அது  தாஸ் மீது படாமல் சுவற்றில் மோதி உடைகிறது, தாஸ் மிகவும் பொறுமையாக இதை கையாள்கிறான், 


நான் உன்னை ஒன்றும் சொல்லப்போவதில்லை, கடைசி நேரத்தில் நான் துணைக்கு இணை கேட்டதற்கு உன்னை என் தலையில் கட்டினானே என் நண்பன் அவனுக்கு வட்டியும் முதலுமாய் தந்து கொள்கிறேன் என்றவன், பரமேஸ்வரனை கோபமாக அழைத்து ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது, அதை மாற்று, உடைந்த சில்லுகளை சுத்தம் செய் என்கிறான்.


மறுநாள் தாஸிடம் இப்படி நடந்து கொண்டதற்கு வருந்தும் வகையில் தாஸின் அப்பாவின் நண்பர் குடும்பத்தினர் அத்தனை பேரையும் நேரில் சென்று  விருந்துக்கு அழைத்து நல்ல சாப்பாடு சமைத்து பரிமாறுகிறாள் ஜெயஸ்ரீ, 


இப்போது தாஸிற்கு ஸ்ரீதேவி மீது காதல் வருகிறது, தாஸ் வக்கீலும் ஆதலால் அவள் கணவனை சுமூகமாய் பிரித்து கைபிடிக்க ஆசை கொள்கிறான், ஜெயஸ்ரீ தனிமையில் நின்று ரசிக்கும் suicide பாயிண்டில் வைத்து அவளை விரும்புவதாகச் சொல்கிறான், 


அவளை மணமுடிக்க நினைப்பதைச் சொல்கிறான், இன்னொரு அதிர்ச்சியை பகிரட்டுமா? என்று கேட்டுவிட்டு, அவள் சரி சொன்னதும், தான் ஒரு womanizer, எந்தப் பெண்ணிடமும் கிடைக்காத அன்பும் நட்பும் இவளிடம் கிடைத்ததைப் பகிர்கிறான், 


தன் உடன் வந்த ஜெயஸ்ரீ , மனைவியல்ல ,வாடகை காதலி என்கிறான், இவள் மட்டும் தனக்கு மனைவியாக கிடைத்தால் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து தன்னாலும் எதிலேனும் சாதிக்க முடியும் என்கிறான்.அவள் தனக்கு சிந்தித்து முடிவெடுக்க சமயம் கேட்கிறாள்.


வீட்டிற்கு வந்த தாஸுக்கு ஜெயஸ்ரீயுடனான சதை மயக்கம் சுத்தமாக வடிந்தும் விடுகிறது, அவளிடம் அன்பான குரலில் தான் இப்போது ஸ்ரீதேவியுடன் காதல்வயப்பட்டிருப்பதாகவும்   தான் இங்கு இருந்து கிளம்ப நாள் ஆகும் என்றும் இவளை அவள் வீட்டுக்கு கிளம்பச் சொல்கிறான், ஆனால் ஜெயஸ்ரீக்கு இந்த புறக்கணிப்பு  எதோ செய்கிறது, தான் தனியே போக முடியாது என்று வீம்பு பிடிக்கிறாள்.


பரமேஸ்வரன் மகன் கோபனின் துர்அதிர்ஷ்டம் வரிய நிலை மீது இரக்கப்படுகிறாள் ஜெயஸ்ரீ, மனதுக்குள் சம வயதான கோபன் மீது காதல் கொள்கிறாள், அன்று ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்கிறாள், படகில் இறங்குகையில் கோபனை அணைக்கிறாள்.


நீண்ட தூரம் பேசி நடக்கின்றனர், அப்போது உன் எதிர்கால கனவு என்ன?இதே போல guide ஆகவே இருக்கப்போகிறாயா? எனக் கேட்கிறாள்? கோபன் இந்த வேலையில் இருக்கும் போட்டியை அலுத்துக்கொள்கிறான், 


என்றாவது நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு பதில் இரும்பு பட்டறை வைத்து தினம் இருபது,முப்பது  ரூபாய் கிடைத்தால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவில்லை என்கிறான், லேத் பட்டறை வைக்க ஆயிரம் ரூபாய் கிடைத்தால் போதும், தனக்கு தொழில் தெரியும், வங்கியில் மேலும் கடன் கிடைக்கும் என்கிறான் கோபன்.


தனக்கு ஓட வேண்டும் போல உள்ளது என சொல்கிறாள் ஜெயஸ்ரீ.இருவரும் ஓடிக்களைத்து அமர்கின்றனர், அவள் மூச்சிறைக்கும் அழகு கோபனை சங்கடப்படுத்துகிறது. முதலாளி மனைவி என்று அவள் முன்னெடுப்புக்கு சிக்காமல் விலகுகிறான்.


அப்போது இதமாக மழைபெய்கிறது, கோபனை குளிருக்கு இதமாக அணைத்த ஜெயஸ்ரீ நான் முதலாளியின் மனைவியல்ல, வாடகைக் காதலி,பணமிருக்கும் யாரும் என்னை வாங்கலாம், நீயும் கூட ,என்று சொல்ல, 


 அதிர்ச்சியில் உறைந்து அவள் முகம் நோக்கி அருவருக்கிறான் கோபன், அவனின் அதிர்ச்சி காணப்பிடிக்காமல் அவமானம் கொண்டு வீட்டுக்கு மழையில் நனைந்தபடி ஓடுகிறாள் ஜெயஸ்ரீ.


இனி என்ன ஆகும் ? படம் கண்டிப்பாக பாருங்கள்.


இப்படத்தில் வரும் மைனாகம் கடலில் நின்னுயருன்னுவோ என்ற அற்புதமான பாடல் ஜானகியம்மா மற்றும் தாஸேட்டா பாடிய வடிவங்களில் உண்டு, அப்பாடல் பற்றிய என் முந்தைய பதிவு இது.

https://m.facebook.com/story.php?story_fbid=10158654053361340&id=750161339


இப்படத்தில் தான் மலையாள  சினிமாவில்  முழு வீச்சில் கதாநாயகன் அந்தஸ்து நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்தது, இப்படத்தில் மம்மூட்டியின் தாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது நடிகர் பாபு நம்பூதிரி, அவர் நடித்து சில நாட்களில் அவர் மாற்றப்பட்டு நடிகர் மம்மூட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டது சரித்திர நிகழ்வு, பாபு நம்பூதிரி ஒப்பற்ற நடிகர், தூவானத்தும்பிகள்  திரைப்படத்தில் பெண் தரகர் தங்கல் என்ற கதாபாத்திரம் அருமையாக செய்தவர், 


இப்படத்தில் இளம் மம்மூக்காவின் நடிப்பில் அனைவரும் கண்டுண்டு போவோம், கோபனாக நடித்த ராஜ்குமார் சேதுபதி நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர், இயக்குனர் பாரதிராஜாவின் டிக்டிக்டிக் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்வப்னா அழகும் திறமையும் ஒருங்கே அமைந்த நடிகை, 


இதில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தை மிகவும் அழகாக செய்திருந்தார், பின்னாளில் இயக்குனர் பத்மராஜனின் தூவானத் தும்பிகள் திரைப்படத்தில் சுமலதா நடித்த க்ளாரா என்ற வாடகை காதலி கதாபாத்திரத்திற்கு முன்னோடியான கதாபாத்திரத்தை மிக அருமையாக செய்திருந்தார் ஸ்வப்னா.


வயது வந்தோருக்கான இந்த கல்ட் ரொமான்ஸ் திரைப்படத்தை தவறவிடாதீர்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=10159444478311340&id=750161339

#த்ரிஷ்ணா,#ஐவி_சஸி,#எம்டி_வாசுதேவன்_நாயர்,#மம்மூட்டி,#ஸ்வப்னா,#ராஜலட்சுமி,#சங்கராடி,#ஊட்டி,#ஜெயனன்_வின்சென்ட்,#ஷ்யாம்_மாஸ்டர்,#பிச்சு_திருமலா

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)