வில்கானுண்டு ஸ்வப்னங்கள் திரைப்படத்தில் ஒரு வஞ்சம் தீர்க்கும் காட்சிக்கு எழுத்தாளர் ,இயக்குனர் MT.வாசுதேவன் நாயர் எப்படி treatment வைத்திருக்கிறார் பாருங்கள், simple and powerful.
https://youtu.be/UcyxeiVSa-Y
வஞ்சத்தின் முன்கதை :
ராஜகோபாலின் தரித்திரகாலத்தில் அவரை தரவாட்டில் தங்கநெக்லேஸ் திருடினார் என்று தூணில் கட்டி வைத்து அடித்த குரூப்பு இன்று கல்ஃப்வாசத்தால் கோடீசுவரனாகிவிட்ட ராஜகோபால் வீட்டிற்கு பம்மியபடி அவரைக் காண வருகிறார்,காத்திருக்கிறார்.
ராஜகோபாலன் பணியாளிடம் நான் சொல்லும் போது ஸ்காட்சும் இரண்டு கிளாஸும் கொண்டு வரச் சொல்கிறார்.
குசலவிசாரிப்புகள் முடிந்ததும் , இவர் நண்பன் மாதவன்குட்டி(மம்மூட்டி) முஸ்லிம்களுக்கு கோவில் அருகே உள்ள நிலங்களை விற்றுவிடப் போகிறாரே? என்று தான் வாங்கியதாக சமாதானம் சொல்கிறார் குரூப்பு,
ராஜகோபால் பணியாளிடம் குப்பியும் கிளாஸிம் கொண்டுவரச் சொல்ல, குரூப்பிற்கு 300₹ வெளிநாட்டு சரக்கிற்கு நாக்கு ஊறுகிறது,
queen anne ஸ்காட்சை நன்கு straight ஆகவே ஊற்றி போதை ஏற்றிவிட்டு ராஜகோபால், அவர் போதும் என்கையில் நீங்கள் சாராயம் ஒரு குப்பி குடிப்பவர் ,உங்களுக்கு இது எம்மாத்திரம்?,குடியுங்கள் குரூப்பு என்கிறார், போதையில் கிளாஸ் பிடித்திருக்கும் குருப்பை எழுந்து நில்லுங்கள் என்கிறார்.
குருப்பால் நிற்க முடியவில்லை,ஆத்திரத்தில் என்னை ஒன்றும் செய்துவிடாதே என்று கையெடுத்து கும்பிடுகிறார், அன்று காணாமல போன நெக்லஸ் என்ன விலை சொல்? ,இப்போது தருகிறேன் என்கிறார் ராஜகோபால், அவர் குற்ற உணர்வில் விக்கித்து ஐயோ அது பின்பு புழக்கடையில் வேலைக்காரி கண்டெடுத்து தந்து விட்டாள், அன்று நடந்ததற்காக கால் பிடித்து மன்னிப்பு கேட்கிறேன்,மன்னித்தால் தான் இங்கிருந்து போவேன், என்னை மன்னி,என்னை எதுவும் செய்து விடாதே என்கிறார் குரூப்பு.
ராஜகோபால் ,நான் துபாயில் கம்பி வளைத்துள்ளேன், கலவை எந்திரத்தில் பணியெடுத்துள்ளேன், இந்த காப்பு படிந்த கையால் உங்களை எதுவும் செய்யப்போவதில்லை, நான் உங்களை மன்னிக்கப் போவதில்லை, ஆனால் நன்றி சொல்கிறேன்,
டிரைவரை அழைத்தவர் இவரை வீட்டில்
கொண்டு விடு என்கிறார் ,
அவர் ஐயோ வீட்டில் நாராயணி ஏதாவது சொல்வாளே? என அஞ்ச,
இவர், உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கனும் இப்போது போகத்தான் வேண்டும் என்று டிரைவரிடம், இவரை வீட்டில் அல்லது கடைவீதியில் கொண்டு விடு,என்று சொல்லிவிட்டு
உள்ளே போகிறார்.
இந்த குரூப்பின் நிஜ பெயரும் குரூப்பு தான் பாஸ்கர குரூப்பு, இயக்குனர் மணிரத்னத்தின் உணரு திரைப்படத்தில் இவர் வேலையில்லாத மீனவர் வேடம் அற்புதமாகச் செய்தார், இவரை ஒளிப்பதிவாளர் ராமசந்திரபாபு நல்ல நடிகர் என்று மணிரத்னத்திற்கு பரிந்துரை செய்தாராம்.
அந்த காட்சி இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10158409861206340&id=750161339