நாடோடிக்காட்டு (1987) படத்தில் வரும் வைஷாக சந்த்யேவின் அட்டகாசமான தமிழ் வடிவம் கதாநாயகன் படத்தில் வரும்
பூ பூத்ததை யார் பார்த்தது? பாடல். இதன் இசை சந்திரபோஸ் அவர்கள்,தமிழ் வடிவ பாடல் அத்தனை கோரமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
ஆனால் வைஷாக சந்த்யே எத்தனை அழகுடன் மிளிர்கிறது பாருங்கள்.
இசையின் நகலே இத்தனை இனிமை என்றால் அசல் ?அத்தனை அழகிய இனிமையான பாடல்.
ஷ்யாம் சார் நாடோடிக்காட்டு படத்தில் அமைத்த மெட்டை மாற்றாமல் மலையாளப் பாடலுக்கு மரியாதை செய்திருப்பார் சந்திரபோஸ்.
இப்படம் பிற்பாதி சென்னையில் நடக்கும் கதைக்களம், வேலையில்லாத பட்டதாரியான மோகன்லால் தனக்கு அடுத்த வீட்டுப் பெண் ஷோபனா பணம் தந்து உதவ தள்ளு வண்டியில் காய்கறி விற்பார்,
அப்போது வெளுக்கும் வெயிலில் கனவு காண்கையில் வரும் montage பாடல் இது, அண்ணா சாலை, பெசண்ட் நகர் ஷ்மிட் மெமோரியல், பழைய பல்லவன் பஸ்கள் , ஆட்டோக்கள் பழைய zeebra crossing, இயேசு வருகிறார் என்று எழுதிய பஸ்டாப் தூண் , தண்ணீர் பஞ்சத்தை உரைக்கும் கூட்டம் மிகுந்த குழாயடி எல்லாம் வரும்.
படத்தின் இயக்கம் சத்யன் அந்திக்காடு,ஒளிப்பதிவு விபின் மோகன், பாடல்கள் யூசூஃப் அலி கேச்சேரி
https://youtu.be/GJCj4lfraDc
#நாடோடிக்காட்டு, #மோகன்லால், #ஷோபனா,#வைஷாக_சந்த்யே