எலிப்பத்தாயம் படத்தில் கரமன ஜனார்த்தன நாயர் தோன்றும் காட்சி,இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனின் முக்கியமான படம்,காலம் சென்ற நடிகர் கரமன ஜனார்த்தனன் நாயர் மலையாளத்தில் அபாரமான குணச்சித்திர நடிகர்,இப்படத்தில் அவர் ஏற்றிருந்த பூர்ஷ்வா தரவாட்டுக் குடும்பத்தின் பொறுப்பற்ற கடைசி ஆண்வாரிசு கதாபாத்திரம் முக்கியமானது,
அவர் மற்றும் அவரின் மூன்று சகோதரிகள், அவர்கள் அணியும் ஆடையின் நிறங்களை வைத்து அவர்கள் நால்வரின் குணாதிசயங்களை இயக்குனர் வரையறுத்தது எல்லாம் முக்கியமானவை,
திருமணமாகி சென்ற மூத்த சகோதரி ஜானம்மாவுக்கு ( ராஜம்.கே.நாயர்) பச்சை ரவிக்கை,
இதில் ஜானம்மா தந்திரக்காரி, செழிப்பானவள்,
பூரிப்பானவள்
திருமணமாகாத நடுசகோதரி ( சாரதா) ராஜம்மா நீல ரவிக்கை,
ராஜம்மா ஸ்வயம் விட்டவள்,பிறர் சேவைக்கு தன்னை ஒப்புத்தந்தவள்
கடைக்குட்டி தங்கை ஸ்ரீதேவி( ஜலஜா)
ஸ்ரீதேவி அழகுணர்ச்சி கொண்டவள், எதிர்த்து பேசுபவள்,சண்டைக்காரி, வேண்டியதைப் போராடிப் பெறுபவள்.
இவை மூன்றும் கலந்த வெள்ளை முதலாளித்துவத்தின் நீட்சியான வெள்ளையை உடுத்தும் உன்னி,ஒரு துரும்பை நகர்த்த மாட்டார்,தானும் சுகப்பட மாட்டார்,தன் சார்ந்தோரையும் சுகப்படவிடமாட்டார்,தனக்கு குளிக்க வெந்நீர் போடக்கூட கைவரா வியக்தி.
இயக்குனரின் மூன்றாம் கண்ணான ஒளிப்பதிவாளர் காலஞ்சென்ற மாங்கட ரவிவர்மாவின் ஒளிப்பதிவு அளப்பரியது.
மேலும் எலிப்பத்தாயம் பற்றி
https://m.facebook.com/story.php?story_fbid=10154316165741340&id=750161339
#எலிப்பத்தாயம், #கரமன_ஜனார்த்தனன்_நாயர்,#அடூர்_கோபாலகிருஷ்ணன்,#மாங்கட_ரவிவர்மா,#தரவாடு,#பூர்ஷ்வா