தமிழ் சினிமாவில் இத்தனை சாதித்திமிருள்ள ,இத்தனை மேட்டிமைத் திமிருள்ள, இத்தனை இனவெறியாளரை இன்று தான் பார்க்கிறேன், இவர் கல்லூரிப் பேராசிரியராம்.மாணவர்கள் கதியை அவர்கள் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.
பழனியில் இவர் கல்லூரியில் படிக்கையில் பேருந்தில் தினம் உடன் பயணித்த இளம்பெண்ணிற்கு இவர் வைத்த பெயர் நொண்டி (வார்த்தைக்கு மன்னிக்கவும்) இவ்வார்த்தையை அவர் நேர்காணலில் பல பல முறை உபயோகிக்கத் தயங்கவில்லை.
பழனியில் இவர் படித்த கல்லூரி முதல்வர் அருணாச்சலத்திற்கு இவர் வைத்த பெயர் குட்டையன்.(நாம் யாரும் உத்தமரில்லை, ஆனால் சபை நாகரீகம் அறியாத காட்டுமிராண்டியும் அல்ல)
பண்ணைபுரத்தில் நம் இசைஞானி அங்கு நிலவிய சாதி ஒடுக்குமுறையால் அத்தனை பெரிய தெருவில் ஓரமாக நடந்து போவதை தன் ஆறு வயது முதல் பார்த்து வளர்ந்தவராம்.
அவர் அண்ணன் பாவலர் வரதராசன் தெருவில் செருப்பு போட்டு நடந்தார் என கட்டி வைத்து அடிக்கையில் இவர் வீட்டில் தான் போய் கட்டவிழ்த்து கூட்டிவந்தார்களாம், பால்யத்தில் இவர் அக்காவின் பள்ளித்தோழியான ஜீவா அம்மையாரை ஒதுக்காமல் தங்கள் வீட்டுக்குள் கண்ணாடி பார்த்து தலை வார அனுமதித்தனராம், இசைஞானியை வைக்கும் இடத்தில் இடத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் வைக்காததால் அவர் முன் இவர் சிபாரிசுக்கு சென்று நிற்க வேண்டியதாயிற்றாம்.
இவரின் தாத்தா பண்ணைபுரத்தில் துவங்கிய காந்தி அரிஜன சங்கத்தின் இரண்டு கோடி ரூபாய் பெருமான சொத்துக்களின் ஆவணங்கள் இவர் கைவசம் இன்னும் கேட்பாரின்றி உள்ளதாம்.
இவர் நண்பனைப் பார்க்க பழனி கல்லூரிக்கு போனவருக்கு அங்கே ஆண்களும் அழகிய பெண்களும் ஒன்றாக படிப்பதைப் பார்த்து அதிர்ச்சியாம், என்ன பொம்பளைங்க பெரிய படிப்பெல்லாமா? படிப்பாங்க என வியந்தே போனாராம், இவருக்கு அந்த பெண்களை தினமும் பார்க்க வேண்டும் என்றே முதுகலை படிக்க ஆசை வந்ததாம்.
பழனியில் கல்லூரி சேர சிபாரிசு செய்தவர் PTR பழனிராஜனாம், இவர் வாங்கிய மிகக் குறைந்த மதிப்பெண்களுக்கு முதுகலை MSC பட்டப்படிப்பு தர மறுத்த கல்லூரி முதல்வர் குட்டையன் என்ற அருணாசலத்திற்கு
PTR பழனிராஜன் admit him என்று துண்டுச்சீட்டு தந்து அனுப்ப, எக்கேடும் கெட்டு ஒழி என்று சபித்து அட்மிஷன் கைப்பட எழுதினாராம், பின்னாளில் அதே குட்டையனை சட்டையை பிடித்து அடிக்க வேண்டியானதை பெருமையாக சொல்கிறார்.
பேருந்தில் உடன் பயணிக்கும் அழகிய நொண்டிப்பெண்ணை நடத்துனர் தினமும் உரச , அந்தப்பெண்ணுக்கு உதவ ஐந்து மாணவர்களை திரட்டிச் சென்று அடித்து நன்கு வெளுத்து விட்டனராம், ஆனால் நடத்துனர் சக நடத்துனர் ஓட்டுனர்கள் சுமார் ஐம்பது பேரைத் திரட்டி கல்லூரிக்குள் பேருந்தை கதவை உடைத்து கொண்டு வந்து விட்டாராம்,
இவர் உயிரைக் காக்க பெண் முதுகலை கல்லூரி விரிவுரையாளர் இவர் கையைப் பிடித்து இழுத்து Women Staff ரூமில் ஒளியச் சொன்னதற்கு பொம்பள அறையில் ஒளிந்து கொள்ள மாட்டேன் என்று வீராப்பு பேசி நூறு பேரை எதிர்கொண்டு முழங்கையில் அரிவாள் வெட்டு வாங்கிய வீரராம் இவர்.
இவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைக்கும் sports quotaல் எப்படியோ ஆசிரியரின் சிபாரிசில் தேர்ச்சி பெற்று வந்தவராம்,sslc just pass ஆம், மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்த இவருக்கு PUC அனுமதி பாளையங்கோட்டை சர்ச் ஃபாதர் வாங்கித் தந்தாராம், இந்த முன் தகுதியில் இவருக்கு உயர் போலீஸ் அதிகாரி ஆக ஆசை வருகிறது, நேராக DSP தான் என கங்கனம் கட்டிக் கொண்டாராம்,
DSP ஆக group 1 exam எழுதியும் விடுகிறார், ஆனால் இவருக்கு உயரம் குறைவு அதாவது வெறும் ஒன்றரை சென்டிமீட்டர் தான் குறைவு,
அது எப்போதோ ப்ரிடீஷ் காரன் எழுதிய தகுதி ,அதை நாம் எப்படி இன்றும் கடைபிடிக்க முடியும் என கேட்கிறார் ,வழக்கம் போலவே எட்டாததை கம்பால் அடித்தாவது அடையவேண்டும் என்று கணேசன் IAS,மற்றும் North SP சண்முகநாதனிடம் சென்று அணத்தி யோசனை கேட்கிறார்,
உடன் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் தேர்தல் ஆணையருமான K.மலைச்சாமி IAS இவர் DSP ஆக்கி அழகுபார்க்க காத்திருந்தாராம், இந்த உயரக் குறைபாட்டை அங்கீகரிக்க வேண்டிய முதல்வர் ஜெயலலிதாவை சரிகட்ட அவர்கள் கேட்பது ஒரே ஒரு பிரபலத்தின் வலுவான சிபாரிசு,
அது தான் தன் வீட்டில் இருந்து முன்பு வடித்த கஞ்சி வாங்கிச் சென்று வயிறு வளர்த்து இன்று பெரிய இசையமைப்பாளராக இருக்கும் இசைஞானியிடம் உதவி கேட்க நேராக வந்து விட்டாராம்,
இவர் விதைத்த இடத்தில் தான் அறுப்பாராம், அவர்களுக்கு நன்றி காட்ட வேண்டிய நிர்பந்தம் உண்டாம், ஆனால் பாருங்கள்,அவர் இவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லையாம், பிரசாத் ஸ்டுடியோவின் பூசாரிகள் ஒரு சாதாரண மனிதருக்கு இப்படி மரியாதை செய்கின்றனரே என அவருக்கு கிடைக்கும் மரியாதைகளைக் கண்டு கோபம் கோபமாக வந்ததாம்,
இவரே உயரம் குறைவு ,அந்த சிபாரிசுக்கு என்று இசைஞானி வீட்டிலும் பதிவுக் கூடத்திலும் பல வாரங்கள் பழியாக கிடந்திருக்கிறார், ஆனால் பாருங்கள் ,தனக்கு சிபாரிசு செய்து உதவாத இசைஞானி உயரத்தை கிண்டல் செய்கிறார் இவர்,
பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இருந்த சிறிய வேப்பமரம் கூட பெரிதாக கிளைபரப்பி வளர்ந்து விட்டதாம் , ஆனால் இசைஞானி வளரவில்லையாம்,
பண்ணைபுரம் ஊரில் இருந்து இது போல ஆண்ட பரம்பரை எனச் சொல்லிக்கொண்டு அனுதினம் வந்து சிபாரிசு , பண உதவி எனக் கேட்டு பழியாய் கிடந்து நச்சரிக்கும் ஆட்களையும் மீறித் தான் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்தார் நம் இசைஞானி,
nothing but wind, how to name it, திருவாசகம் போன்ற உலகத்தரமான இசைக்கோர்ப்புகளை நீண்ட பணிச்சுமைக்கு நடுவிலும் பிரதிபலன் பாராமல் மிகுந்த பொருட்செலவில் வெளியிட்டார்,
இது போல மலினமான எண்ணம் கொண்ட கற்கால மனிதர்கள் இதே சமூகத்தில் பழங்கதை பேசிக்கொண்டு, பெண்டாட்டியை தினமும் அடித்து,அவள் கையால் உண்டு, தன் சமூகத்தில் இருந்து பிடித்தவனுடன் ஓடிப்போனப் பெண்ணை அடித்து இழுத்து வந்து அறுத்துக்கட்டும் பஞ்சாயத்திற்கு சென்று வந்து கிடாவிருந்து, கறிச்சோறு ,சாராயம் என வாழ்ந்துவிட்டு ஒருநாள் செத்தும் போவார்கள்.அவர்கள் வாய்க்கு வந்ததை உளருவதற்கு கூட ஒரு களம் கிடைக்கிறது பாருங்கள்.
அன்று நம் இசைஞானி முதல்வர் ஜெயலலதாவை பார்த்து பூங்கொத்து தந்து இவர் தான் நான் சொன்ன candidate என்று பரிந்துரைக்காத காரணத்தால் இத்தனை தகுதியுள்ள நபருக்கு DSP ஆகி DIG ஆக ஓய்வு பெறும் அதிருஷ்டம் அமையவில்லை,சுமார் பத்து வருட காலம் இரு முறை group-1 தேர்வு எழுதியும் DNT (denotified tribe )என்ற சொல்லின் abbreviation தெரியாமல் அப்போதைய tnpsc ஆணையர் லட்சுமி நாராயணன் என்பவரால் இவரது 32 வயதில் fail ஆக்கப்பட்டிருக்கிறார்.ரெம்ப குஷ்டமப்பா.
பிரியத்துக்குரிய இசைஞானிக்காக இந்த சேனலை unsubscribe செய்தேன், hateful or abusive content என report அடித்தேன்.
சாய் வித் சித்ராவில் இருந்து வந்த அருவருக்கத்தக்க episode இது
PS: இது போல கறிச்சோறு சாராய பஞ்சாயத்துக்கு செல்லும் கற்கால மனிதர்களை பற்றி முதல் மரியாதை திரைப்படத்தில் வரும் முக்கியமான காட்சி இது.
https://m.facebook.com/story.php?story_fbid=10158475694606340&id=750161339
#இசைஞானி,#சாய்_வித்_சித்ரா
#சாதியம்,#ஆண்ட_பரம்பரை,#ஐஏஎஸ்,#ஐபிஎஸ்,#சிபாரிசு,#குறுக்கு_வழி,#கட்டையன்