ஓரிடத்தோரு பயல்வான் |1981 | மலையாளம் | P.பத்மராஜன்











பப்பேட்டா என்கிற பி.பத்மராஜனின் ஓரிடத்தோரு பயல்வான் மலையாள கலை சினிமாவில் முக்கியமான படைப்பு.இது 1981ல் வெளியானது.

தவளைக்கால்  கறி உண்ணும் மத்திய கேரளத்தின் ஒரு அழகிய குக்கிராமத்திற்கு வழிப்போக்கனாக குஸ்தி பயில்வான் (ரஷீத் )ஒருவர்  வருகிறார்.

இந்தியா முழுக்க சுற்றி குஸ்தி சண்டை போட்டு களைத்து விட்டு, இவ்வூரில் இறங்க , இங்கே சுட்டிறைச்சி (வேட்டையாடி கிடைத்த பறவை இறைச்சி )கிடைப்பதைக் காண்கிறார்,  குஸ்திக்கு உடம்பை முறுக்கேற்ற அந்த கொக்கிறைச்சி அவசியம் என்பதை உணர்ந்தவர்.

குஸ்திக்கும் இங்கே ஆள் கிடைத்தால் ஏதேனும் வருமானம் ஈட்டலாம் என  அந்த வேட்டைக்காரனிடம் பேச்சு தருகிறார்.  அங்கே சிறிய டெய்லர் கடையுடன் பெட்டிக்கடையும்  நடத்தும் படு காரியக்காரரான சிவன் பிள்ளை மேஸ்திரி ( நெடுமுடி வேணு) அவன் மூலம் பழக்கமாகிறார்.

பஞ்சம் பிழைக்க வந்த குஸ்தி பயில்வானை வைத்து குஸ்தி போட்டி வைத்து சம்பாதிக்க எண்ணிய டெய்லர் ,தன் வீட்டிலேயே பயில்வானைத்  தங்க வைக்கிறார், ராஜ உபசாரம் செய்கிறார். 

பயில்வானுக்கு அண்டை வீட்டில் வசிக்கும் விதவைப் பெண்மணி மற்றும் அவளின் அழகிய மகள் சக்கரையை  அறிமுகம் செய்கிறார்.

சக்கரை உள்ளூரில் ஒரே அழகி ஆதலால் அவளுக்கு போட்டி அதிகம், அவளை தவளையைப் பிடித்து காலை நறுக்கும் கண்ணனும் விரும்புகின்றான், அவனிடமிருந்து தவளைக்கால்  இறைச்சியை சாராயக் கடைக்கு வாங்கும் பூனைக்கண் கொண்ட ஜோபும் விரும்புகின்றான்.

 ஜோப்பின் அண்ணன் குவைத்தில் இருப்பதால் ஜோப் எப்போதும் புதுத் துணியுடுத்தி செண்ட் வாசனையுடன், 80 களின் வாக் மேன் போன்ற சாதனங்களுடன் தன் டெம்போவை ஓட்டி வந்து அவளை எப்படியேனும் வளைக்கப் பார்க்கிறான்.இத்தனை வசதி இல்லாததால் கண்ணன் ( அசோகன்) அடக்கி வாசிக்கிறான்

டெய்லர் சிவன் பிள்ளை , கண்ணணைக் கொண்டு நைச்சியமாக வேலை வாங்கி எண்ணெய் தேய்த்து மாலீஷ் செய்து பயில்வானை தினமும் கவாத்து எடுக்கிறார், அவர் பசிக்கு வகை வகையாக பயில்வானுக்கு சக்கரையின் அம்மாவைக் கொண்டு சமைத்துப் போட்டும் குஸ்தி சண்டைக்கு தீவிரமாக தயார் செய்கின்றனர். 

பயில்வானின் இயற்பெயர் சங்குப் பிள்ளை, அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது, தன் பெயரை எழுத அவர் சங்கை படமாக வரைவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்,  டெய்லர் சிவன் பிள்ளைக்கு இது வசதியாகிறது, அவரும் சங்கு வரையக் கற்றுக் கொண்டு விட்டார், எதிர் வரும் குஸ்திக்கு இவருக்கு பேரம் செய்து 200 ரூபாய் கூலி பேசுகிறார், சங்கு படமிட்ட இண்லேண்ட் கடிதத்தை அண்டை ஜில்லாவில் வசிக்கும் குஸ்தி பயில்வான்களுக்கு அனுப்பி, குஸ்தி சண்டையில் கலந்து கொள்ள வேண்டுகோள் அனுப்பியும் ஒன்றுமே கூடி வரவில்லை, இதனால் எரிச்சலும் சந்தேகமும் கொள்கிறார்.ஆனால் பயில்வானுக்கு இதில் தீவிர நாட்டமில்லை, கச்சை ( லங்கோட்டி) கட்டியவன் பிச்சை எடுப்பான் என்ற மலையாள பழமொழியை நன்கு தனக்குள் புடம் போட்டு வைத்துள்ளார்.

இப்போது பொன்னான வாய்ப்பாக தவளைக் கால் கறி வாங்கும் வியாபாரி ஜோப்பிடம் டெய்லர் வலியப் போய் சண்டை வளர்க்கிறார், தன் கம்பெனி பயில்வான் ஜோப்பின் டெம்போவை ஓற்றைக் கையால் இழுத்துப் பிடிப்பான் என்றும், முடிந்தால் உன்னால் வண்டியை கிளப்பிக் கொண்டு போ, நீ ஜெயித்தால் நான் மொட்டை அடிக்கிறேன், நான் ஜெயித்தால் நீ ஒரு பக்க மீசை எடு என்று சொல்ல, அங்கே சாதுவாக அடக்கி வாசித்த  பயில்வானே ஜெயிக்கிறார், 

இதில் ஆத்திரம் கொண்ட ஜோப் தன் பணம் முழுவதையும் திரட்டி வீம்புக்கு ஆந்திரத்தில் இருந்து ஒரு நல்ல  தேரந்த பயில்வானைப் பிடித்து வந்து இந்த பயில்வானுடன் மோத விடுகிறான், முடிவில் நம் சங்குப் பிள்ளை பயில்வானே ஜெயிக்கிறார்.ஊரில் அவருக்கு நல்ல பெயர் உண்டாகிறது, அவர் தலையைத் தடவி டெய்லரும் நல்ல காசும் பார்த்து விட்டார்.

எனவே பயில்வானை ஊரைவிட்டு அனுப்ப மனம் வரவில்லை, பயில்வானுக்கு திருமண ஆசையை உண்டாக்குகிறார், மனதில் சக்கரயை அவருக்கு எப்படியேனும்  மணம் செய்து வைக்க திட்டம் திட்டுகிறார்.

பயில்வானுக்கு கெட்டப் பழக்கம் எதுவும் இல்லையென்றாலும் பேய்த்தீனி தின்னும் ஆள், ஆக்கிப்போட்டு கட்டுப்படி ஆகாது,ஆனால் ஒரு குஸ்தி போட்டியில் ஜெயித்தால்  300 ரூபாய்க்கு மேல் கிடைக்கும்,  பக்கத்து வீட்டு அம்மாகாரி தன் மகளுக்கு திருமணம் முடிக்க செலவில்லாமல் மாப்பிள்ளை பார்ப்பதால் பயல்வானை மணம் முடித்து வைக்கலாம் என்று அவளும் திட்டம் தீட்டுகிறாள், டெய்லரும் எரியும் தீக்கு நெய்யூற்றி பயில்வானை சக்கரைக்கு ஒரு வழியாக மணமுடிக்கின்றனர். சக்கரைக்கு பயில்வானின் தேக்கு தேகத்தின் மீது மையல் ஆதலால் அவள் ஜோப்பையோ, அவனுக்கும் ஒரு மாற்று குறைந்த கண்ணனையோ கண்டு கொள்ளவில்லை.

பயில்வானுக்கு பெண்ணாசையும் உண்டு அதற்கு மேலாக குஸ்தி ஆசையும் உண்டு, குஸ்தி பயில்வான் பிரம்மச்சர்யம் காத்தால் தான் தேகம் தேக்கு போல இருக்கும் எல்லா போட்டியிலும் எதிராளியை வெல்லலாம் என மணக்கணக்கு போட்டவர்,

 சக்கரையை கட்டிலில் தினமும் பட்டினி போடுகிறார், காமம் கிளர்ந்தெழுகையில்  தன் கோவணத்தை நனைத்துக் இறுக்கிக் கட்டிக் கொள்கிறார்.இதனால் சக்கரை மிகவும் ஏக்கமுறுகிறாள் , இருந்தாலும் கணவனிடம் வாய்விட்டுக் கேட்க முடியாத நிலை,

 இந்நிலையில் பயில்வானிடம்  கையிருப்பு சுத்தமாகக் கரைகிறது, டெய்லரோ பயில்வானுக்கு இனி ஒரு தம்படி செலவு செய்யத் தயாராக இல்லை.பயில்வானை ஐராவத யானை என்றவர் அவரை வைத்து எடுபிடி வேலைகளை வாங்குகிறார், சக்கரையின் அம்மாவோ அவரை கூலி வேலைக்குப் போய் பணம் கொண்டு வரச் சொல்கிறாள்.

இப்போது பயில்வான் தன் முதல் மனைவி பீபாத்துவுக்கு டெய்லர் மூலம் கடிதம் எழுதுகிறார்,பணம் எதுவும் சம்பாதிக்க முடியவில்லை, அங்கே விரைவில் வருகிறேன், உன் அண்ணணிடம் சொல்லி குஸ்தி போட்டிக்கு ஏற்பாடு செய்  என்கிறார். அப்போது தான் பயில்வானுக்கு முன்பே மணமானது டெய்லருக்கு தெரிகிறது, பெருந்தவறிழைத்ததற்கு வருந்தாமல் பயில்வானை வேற்றூருக்குப் போய் குஸ்தி போட்டிக்கு ஆள் பிடிக்க அறிவுருத்துகிறார்.

விரக தாபம் கொண்டு தவிக்கும் சக்கரை, தன் கணவன் தன்னை பட்டினி போட்டாலும் தன் கணவனுக்கு போஷாக்காக ஆக்கிப் போட்டு அவன்  உடம்பைத் தேற்றவே நினைக்கிறாள் ,அதற்கான செலவுக்கு தன் வளையலை டெய்லரிடம் அடகு வைத்து பெரும் செலவு செய்கிறாள், அவளே பயில்வானுக்கு மாலீஷ் செய்து கவாத்தும் எடுக்கிறாள், இதனால் பயில்வானுக்கு தன் மனைவி மீது தீராக்காதல் பிறக்கிறது,

வளையல் அடகு வைத்த விஷயம் அவள் அம்மாவுக்குத் தெரிய தண்டக்கருமத்துக்கு வாக்கப்பட்டு அவனுக்கு ஆக்கிப்  போட கைவளையலை அடகு வைக்கிறாயா? எனக்கேட்டு துடைப்பத்தால் விளாசுகிறாள்.

இத்தனை அவமானத்துக்குக்குப் பின்னர், இனி பயில்வானால் வருமானமின்றி இவ்வூரில் வாழ முடியாது என்ற நிலை வர, ஊரை விட்டு வேற்றூருக்கு குஸ்திக்கு ஆள் தேடிப் போகிறார்.சக்கரையைக் கதறக் கதற பிரிகிறார், இளமை காட்டுத் தீயாய் தகிக்கும் சக்கரை ஆத்திரத்தில் கணவன் வழிபடும் ஆஞ்சனேநர் படத்தை கையால் மோதி உடைக்கிறாள்.

பல நாட்கள் ஆகியும் பயல்வானிடமிருந்து கடிதம் வராததால் தினமும் டெய்லரை பார்த்து உலுக்குகிறாள் சக்கரை, டெய்லர் அவளிடம் பயில்வானுக்கு ஏற்கனவே மணமாகியதை விளக்கி , அவர் இனி திரும்புவார் என்று நம்பிக் கொண்டிருக்காதே என்கிறார், 

இங்கே மிகவும் குழப்பமுறுகிறாள் சக்கரை, சக்கரையின் இக்கட்டான நிலையை பயன்படுத்திக் கொண்ட ஜோப், அவளை ஆசை வார்த்தைகள் பல சொல்லி மூங்கில் புதருக்குள் அழைத்துப் போய் பெண்டாளுகிறான். 

பதுங்கி பதுங்கி புதரில் உறவு கொண்டவள், தேகம் தகிக்க, அவனை தன் வீட்டுக்கே அழைத்து கூடுகிறாள், இச்சூழலை பாப்பேட்டா ஒரே காட்சியாக விவரிக்கிறார், அவளின் வீட்டு புழக்கடையில் ஜோப்பின் டெம்போ டயர் தடம் , அதை அவள் பெருக்கி அழித்து மறைக்கிறாள்.

சக்கரையை விரைவில் மறுமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்த ஜோப்  குவைத்துக்கு யாரிடமும் சொல்லாமல்  விமானம் ஏறி விடுகிறான்.ஆனால் சக்கரையோ ஜோப்பால் கருவுருகிறாள்.ஊரில் இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவி தொலைவில் இருக்கும் பயில்வானுக்கும் எட்டுகிறது

இங்கே சக்கரயின் அம்மாவுக்கு கவலை அதிகமாகிறது, தன் மகளுக்குத் துணையாக குடிசையில் வந்து தங்கி வாழும்படி  கண்ணனிடம் சோறு பரிமாறிவிட்டு நைச்சியமாகக் கேட்க, கண்ணன் யோசித்து விட்டுச் சொல்கிறேன் எனச் சொல்கிறான், 

அந்த பதிலை அவனிடம் எதிர்பார்க்காதவள் , சாப்பிட்டுக் கொண்டிருப்பவனை எழுந்து போகச் சொல்லுகிறாள், சக்கரையோ அம்மாவை கண்டிக்கிறாள், அப்போது பயில்வானுக்கு பணத்துக்காக தன்னை கட்டிக் கொடுத்து விட்டு, இப்போது கர்ப்பமாக இருப்பவளை ஒரு அப்பாவிக்கு கட்ட நினைக்கிறாயே? என கேட்கிறாள், 

இந்த உண்மையும் நேர்மையும் கண்ணனை உறைய வைக்கிறது, தன் பழைய காதலியை எப்போதும் இனி அவன் கைவிடத் தயாராகயில்லை, பயில்வானே திரும்ப வந்து இவனை அடித்துக் கொன்றாலும் அவளை விடமாட்டேன் என உறுதியாயிருக்கிறான்.
அன்றிரவு முதல் அவளுடன் சேர்ந்து வாழத் துவங்குகிறான்.அவள் வயிற்றில் வளரும் கருவுக்கு அப்பாவாகவே மாறிவிடுகிறான் கண்ணன்.

இப்போது டெய்லருக்கு பயில்வானிடமிருந்து தான் குஸ்தி செய்து  பணம் சம்பாதித்துக் கொண்டு அடுத்த  வாரம் ஊர் திரும்புகிறேன், என் மனைவி பற்றிய செய்தி உண்மையா? எனக் கேட்டு கடிதம் வருகிறது.

எல்லோரும் துணுக்குற்றிருக்கின்றனர்,வந்தவுடன் சக்கரைக்கு மறுகட்டு கட்டிய செய்தி அறிந்த பயில்வான் கண்ணனை காயலில் வைத்து நார் நாராகப் புரட்டி எடுக்கிறார்,பின்னர் வீட்டுக்குள் சென்றவர் சக்கரையையும் அவள் அம்மாவையும் அடித்து துவைக்கிறார், 

அத்தனை அடி வாங்கியும் அவள் அசைந்து கொடுக்கவில்லை, கண்ணனிடமே போகவே விழைகிறாள், அரிவாளை வைத்து பயில்வானை வெட்டப் பார்க்கிறாள், பயில்வான் அரிவாளைப் பிடுங்கி அவள் கழுத்தில் வைத்து, கண்டம் துண்டமாக வெட்ட நினைத்தவர், 

அவளின் தெளிவான பிடிவாதம் கண்டு தன்நிலை உருகிவிடுகிறார், தான் மிகவும் விரும்பும் சக்கரைக்கு தன் மீது விருப்பமில்லாததை அவரால் அங்கே தாங்கிக் கொள்ள முடியவில்லை.ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அங்கிருந்து அகல்கிறார். வேகமாக அங்கேயிருந்து கிளம்பிய சக்கரை , குற்றுயிராகக் கிடக்கும் கண்ணணைத் தாங்கியெடுத்து  தேற்றுகிறாள்.

இது போல விளிம்பு நிலை மனிதர்களின் கதையை இத்தனை நுணுக்கமாக படைப்பதில் பாப்பேட்டா கை தேர்ந்தவர்.இப்படத்துக்கு எடிட்டிங்கும் பாப்பேட்டாவே.

பாப்பேட்டா என்கிற பி.பத்மராஜனின் ஓரிடத்தொரு பயல்வான் படத்தை ஒரு புண்ணியவான் நல்ல தரத்தில் ஆங்கில சப்டைட்டிலுடன் யூட்யூபில் தரவேற்றியிருக்கிறார், கலை சினிமா விரும்பிகள் தவற விடாதீர்கள்.பாப்பேட்டாவின்  இயக்கத்தில் வெளியான படங்களில் தனித்துவமான படைப்பு, நெடுமுடி வேணு, ரஷீத் ,அசோகன் மற்றும் ஜெயந்தி என அபாரமான காஸ்டிங்கைக் கொண்டது,  ஜான்சன் மாஷ்ஷின் பிரமாதமான பின்னணி இசை, விபின்தாஸ்ஸின் எழிலான ஒளிப்பதிவு. பயில்வானாக வந்த ரஷீத் மிக அருமையான நடிகர்,அவரை மலையாள சினிமா உலகம் அதிகம் பயன்படுத்தாதது வருத்தத்திற்குரியது

#பப்பேட்டா, #பி_பத்மராஜன்,#ஓரிடத்தோரு_பயல்வான்


எழுதியவர் கீதப்ப்ரியன் உரையாட geethappriyanbloggeratgmail.com
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)