கொக்கரக்கோ (1983) படம் இசைஞானியின் சொந்தப்படம், கங்கை அமரன் இயக்கம், இதில் எஸ்பிபி,எஸ்பி சைலஜா பாடிய கீதம் சங்கீதம் அற்புதமான இனிய ஹிட் பாடல், பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து, இதில் மொத்தம் எட்டு பாடல்கள்(1ரிபீட்) என்றாலும் அதில் ஒன்று மட்டுமே கங்கை அமரன் எழுதியுள்ளார்,
ஐந்து பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத , வாலி ஒரு பாடல்,சிவகாம சுந்தரி ஒரு பாடல் , கங்கை அமரன் இயக்கிய படத்திலேயே வைரமுத்து இத்தனை பாடல் எழுதியுள்ளார் என்றால் அவரை இசைஞானி எத்தனை பெரிய இடத்தில் வைத்திருந்தார் பாருங்கள்.
அவர் எழுதும் வெளிப்படங்களில் எல்லா பாடல்களையும் நானே எழுதுவேன் என்ற நிபந்தனை இடுபவர், இதை கங்கை அமரன் பல பேட்டிகளில் இனிமையாக இடித்துரைப்பார்
"நீங்க தானே வைரமுத்து இயக்குனர்களிடம், இசையமைப்பாளர்களிடம் சொல்லனும் ,நானும் எழுதறேன், அவரும் எழுதட்டும் , இவரும் எழுதட்டும் என்று ".
Ps:சிறுவனாக ஒளியும் ஒலியுமில் இந்தப் பாடல் பார்க்கையில் நாயகன் நாயகியை ரவுண்ட் ட்ராலியில் அமரவும் நிற்கவும் வைத்து தள்ள வைத்து புதருக்கு முன்னே கேமராவை வைத்து காட்சிப்படுத்தியது பசுமையாக நினைவில் நின்று போனது, backroundல் atmosphere முழுக்க நகரும்
#கொக்கரக்கோ,#இசைஞானி,#கங்கை_அமரன்,#DOP_PS_நிவாஸ்,#வைரமுத்து,#மகேஷ்,#இளவரசி