https://youtu.be/UcyxeiVSa-Y
M.T. வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வெளியான பந்தனம் (பிணைப்பு) (1978) திரைபடத்தில் வரும் " கனி காணேனோம் " என்ற அற்புதமான பாடல் , லீலா மேனோன் பாடியது, M.B.சீனிவாசன் இசை, கவிஞர் O.N.V.குரூப் வரிகள்.கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு ராமசந்திரபாபு அவர்கள்.
கொச்சியிலிருந்து அரசு குமாஸ்தா உண்ணிகிருஷ்ணன் (சுகுமாரன் ) ஒரு மாத விடுப்பில் தன் சொந்த கிராமத்திற்கு இருபது வருடங்கள் கழித்து வருகிறார், தன்னையும் தாயையும் கைவிட்டு இரண்டாம் கட்டு கட்டிய தந்தை இறந்திருக்க, அவரின் மகள் தங்கம் (ஷோபா )அண்ணனுக்கு நிஜ பாசத்துடன் கடிதம் எழுதி இந்த கல் மனத்தை கரைத்து இங்கே வரவழைத்திருக்கிறாள், அவள் பூஜை செய்கையில் இந்த குருவாயூரப்பன் மீதான பாடலைப் பாடுகையில் கரைந்து உருகிவிடுகிறார் உண்ணி கிருஷ்ணன், மனம் கவலையில் இருக்கையில் இந்தப் பாடலைக் கேட்டால் அப்படியே மனம் தெளிவதை உணர்வீர்கள், எனக்கு இந்தப் பாடலை முதலில் அறிமுகம் செய்தது ஒரு மலையாளி கிருத்துவர், மகத்தான ஒரு மனம் தெளிவிக்கும் பாடல் , படம் பற்றி எழுதுவேன்.
#பந்தனம், #ஷோபா,#சுகுமாரன்,#MB_சீனிவாசன்,#லீலா_மேனோன்,#ONV_குரூப்,#MT_வாசுதேவன்நாயர்