16 வயதினிலே படம் பார்க்கையில் கவனித்த காட்சி இது, பரட்டையும் அவரது அல்லக்கை நண்பரும் குருவம்மாவின் பெட்டிக்கடையில் இருந்து வாழைப்பழம் திருடிச் செல்ல வரும் காட்சி,
பின்னால் சுவற்றில் கன்னட எழுத்தில் அரசியல் சுவர் விளம்பரம் பாருங்கள்,அந்த சுவற்றில் சுண்ணாம்பு அடித்து விட்டு கூட படப்பிடிப்பு நடத்த பட்ஜெட்டோ நேரமோ இல்லை.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் , சாமராஜநகர் மாவட்டத்தில் இருக்கும் கொல்லேகால் என்ற ஊரில் நடந்தது.
மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் ஆதலால் பெரும் பொருளை கட்டணமாக வசூலிக்கும் ஸ்டுடியோவை தவிர்த்தார் இயக்குனர் பாரதிராஜா.( ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்கையில் வாடகை தவிர செட் அமைக்கையிலும் வாடகை,செட்டை பிரிக்கையிலும் வாடகை தர வேண்டும்.)
விலை குறைந்த orwo film ஸடாக்கைக் கொண்டு ஒளிப்பதிவில் பல பரீட்சார்த்தங்கள் செய்தார் ஒளிப்பதிவாளர் p.s.நிவாஸ்.
ஒரு சமயம் கமல் நடிக்க வந்துவிட்டார் ஆனால் அவர் நடிக்கும் காட்சியை படம்பிடிக்க film stock கையிருப்பு இல்லை, இயக்குனர் ஒளிப்பதிவாளர் நிவாஸிடம் சொல்லி ஃபிலிம் load செய்யாத கேமராவை இயக்கச் சொல்லி படமாக்கியிருக்கிறார், நடிகர் கமல்ஹாசனுக்கு ஃபிலிம் ஓடினால் எப்படி சப்தம் கேட்கும்,
ஓடாவிட்டால் எப்படி சப்தம் கேட்கும் என எல்லாம் அத்துப்படி, பொதுவில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்,தனிமையில் இயக்குனரிடம் இனி எதையும் மறைக்காமல் பகிருங்கள்,நான் இதை எல்லாம் தாண்டித் தான் வந்திருக்கிறேன் என தெம்பளித்தாராம்.
அதற்கு முன் வண்ணப்படம் என்றால் விலை உயர்ந்த Eastman Kodak ஸ்டாக் அல்லது கேவா கலர் ஸ்டாக் ( Agfa-Gevaert ) தான்.
அதே 1977 ஆம் வருடம் இயக்குனர் கே.பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் படத்திலும் orwo film ஸடாக்கைக் கொண்டு ஒளிப்பதிவு செய்திருந்தார் ஒளிப்பதிவாளர் B.s.லோகநாத் அவர்கள்.
#16வயதினிலே,#பாரதிராஜா,#DOP_PS_நிவாஸ்,#ORWO,#Eastman_kodak