இயக்குனர் கே.பாலசந்தரின் அவர்கள் திரைப்படம் (1977) அவரது இயக்கத்தில் தெலுங்கில் இதி கதா காது (1979) என்ற பெயரில் மீள் உருவாக்கம் பெற்றது,
இதில் சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயசுதா, ரவிகுமார் கதாபாத்திரத்தில் சரத்பாபு, ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி, கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன், மாமியார் லீலாவதி கதாபாத்திரத்தில் லீலாவதி,குட்டி பத்மினி கதாபாத்திரத்தில் சரிதா நடித்திருந்தனர்,
இப்படத்தின் ஒளிப்பதிவும் b.s.லோகநாத் அவர்களே,இப்படத்தின் இசை எம்.எஸ்வி அவர்கள்.இப்படத்தில் அற்புதமான ஐந்து பாடல்கள் உண்டு, கவிஞர் ஆத்ரேயா எழுதியவை,கவிஞர் ஆத்ரேயா கவிஞர் கண்ணதாசனின் நண்பரும் ஆவார்.
அவர்கள் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை, அதே போன்ற வீர்யமிக்க வரிகளை தெலுங்கிலும் இயக்குனர் வாங்கியிருந்தது அவரின் ரசனைக்கும் நேர்த்திக்கும் எடுத்துக்காட்டு.
தெலுங்கு வடிவத்தின் அத்தனை பாடல்களின் காட்சியாக்கமும் அவர்கள் போல அல்லாமல் முற்றிலும் வேறு theme, வேறு location, வேறு costume என்று மாற்றம் கண்டு படமாக்கப்பட்வை, இன்று ரீமேக் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.கமல்ஹாசன் இதில் ventriculoist மற்றும் magician கூட, சரிதாவுடன் அந்த மேஜிக் பாடல் வருகிறது.
இனி மலையாளம்,
ஸ்ரீமான் ஸ்ரீமதி (1981) என்ற அவர்கள் படத்தின் மலையாள ரீமேக் இன்று மீண்டும் பார்த்தேன், ஹரிஹரன் இயக்கியது, பல symbolism ததும்பும் காட்சிகள், தத்துவார்த்த வசனங்கள் எல்லாம் இதில் வெட்டப்பட்டிருக்கும்,
இது வண்ணப்படம்,படத்தில் rehearsal, thesis,எதுவும் கிடையாது,டைட் schedule படப்படிப்பு.
இயக்குனர் கே.பாலசந்தரின் வசனங்களை டாக்டர் .பவித்ரன் மலையாளத்தில் எழுதியிருந்தார்.கருப்பு வெள்ளை ஒளிப்பதிவு கொண்டிருந்த details எல்லாம் வண்ணத்தில் அடிபட்டுப்போனது,
இயக்குனர் ஹரிஹரன் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவநாயர் கதைகளை அற்புதமாக இயக்கியவர்,அதில் அம்ருதம் கமயா போல பல படங்கள் இன்றும் கல்ட் க்ளாஸிக் வகையாக கொண்டாடப்படுகிறது, தமிழில் மங்கை ஒரு கங்கை படம் இயக்கியவர். ஆயினும் இந்த அவர்கள் படத்தின் மீள் உருவாக்கத்தை அவர் சாதாரண ஒரு family drama படம் போல் எடுத்து வைத்திருந்தார்.
இதில் சுஜாதா கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா , ரவிகுமார் கதாபாத்திரத்தில் விஜயன்,ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் எம்.ஜி.சோமன், கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருந்தனர்.,
மாமியார் லீலாவதி கதாபாத்திரத்தை இதில் ஆண் கதாபாத்திரமாக மாற்றி மூத்த நடிகர் பெஹதூரை இதில் நடிக்க வைத்திருந்தனர், கடைசியில் இதில் தந்தை மகனையே கத்தியால் குத்தி விட்டு கைவிலங்குடன் மருமகளை ரயிலடியில் வந்து சந்திப்பது போன்றும்,
விதவன் நாகேஷ் மீண்டும் தன் காதலை இழந்து ப்ளாட்பாரத்தில் இருந்து கைகாட்டுவது போன்றும் மாற்றியிருந்தனர் ,இந்த நடிகர் பெஹதூர் தான் சத்யா படத்தில் கமலின் அப்பா கதாபாத்திரம் செய்தவர்.
குட்டி பத்மினி கதாபாத்திரத்தில் இதில் கவர்ச்சி கச்சோடத்துக்கு வேண்டி ஜெயமாலினி நடித்திருந்தனர், இப்படத்தின் ஒளிப்பதிவு Melli Irani, இப்படத்தின் இசை ஜி.தேவராஜன் மாஸ்டர்.இப்படத்தில் அற்புதமான நான்கு பாடல்கள் உண்டு, கவிஞர் மாங்கொம்பு ராதாகிருஷ்ணின் எழுதியவை.
படத்தில் நாகேஷ் கதாபாத்திரம் கமலின் சாயலின்றி அவர் பாணியில் இருத்தது, கோயமுத்தூரில் பிறந்து வளர்ந்த மலையாளி கதாபாத்திரம், ஆதலால் கொச்சை மலையாளம் சொந்த குரலில் பேசி நடித்தார் நாகேஷ், கமல்ஹாசன் செய்தது போல் extra curricular எதுவும் அறிந்திராத ஒரு க்ளார்க் கதாபாத்திரம் இது, அதை சிறப்புறச் செய்திருந்தார்.
நாகேஷ் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.
இவரது அலுவலக மேலாளராக ஒடுவில் உண்ணிகிருஷ்ணன், இவருக்கும் நாகேஷுக்கும் கைப்பிள்ளைக்காரி ஸ்ரீவித்யாவுக்கு உதவி அவர் மனதில் இடம்பெற போட்டியிடும் காட்சிகள் படத்தில் உண்டு , இவர் மலையாள சினிமாவில் மிக நல்ல நடிகர்.
நடிகை ஸ்ரீவித்யா மலையாளத்தில் பல பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்,உடம்பு எத்தனை பூசினாலும் அவர் முகத்தில் இருக்கும் குழந்தைமை முதிர்ச்சி கண்டதில்லை, எதிராளியை ஊடுருவும் அழகிய கண்கள் , ஸ்ரீவித்யா செய்த நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்கள் நம் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு வராமலே போய்விட்டது,அவரை தமிழ் சினிமா நன்கு பயன்படுத்தவில்லை, மலையாள சினிமா வாரியெடுத்தது. பூமுகப்படியில் நின்னையும் காத்து என்ற திரைப்படத்தில் டாக்டரான மம்முட்டியின் மனைவி இவர், இவர் கணவன் மீதான சந்தேகம் ஊரே அறிந்தது, மிக அருமையாக செய்திருப்பார்,அதன் நீட்சி தான் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் கீதா கதாபாத்திரம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10158660770541340&id=750161339
கமல்ஹாசனுக்கு நாகேஷ் எப்போதும் ஒரு ஆதர்சம்,அவரை எப்படி எந்த டிகிரி வரை வேலை வாங்கி பொன்னுருக்குவது என்ற சூட்சுமம் தெரிந்தவர், இது போல பல முக்கிய கதாபாத்திரங்களை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.
இதே போல் மகளிர் மட்டும் படத்தில் தமிழில் நாகேஷ் தோன்றிய கூலிங் க்ளாஸ் அணிந்த பிணம் கதாபாத்திரத்தில் கமல் இந்தியில் ladies only என்ற முழுக்க முடித்தும் வெளிவராத படத்தில் நடித்திருந்தார் ( cameo), இதற்குமுன் எந்த பெரிய ஹீரோவும் தன்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு கீழாக ஒரு பிரேதமாக தோன்றும் படி அமைத்து கொண்டதேயில்லை.
#அவர்கள், #கே_பாலசந்தர்,#சுஜாதா,#ரஜினிகாந்த்,#கமல்ஹாசன்,#ரவிகுமார்,#லீலாவதி,#இதி_கதா_காது_1979,#கே_பாலசந்தர்,#அவர்கள்,#ஜெயசுதா,#கமல்ஹாசன்,#சரத்பாபு,#சிரஞ்சீவி,#Dop_BS_லோகநாத்
#எம்எஸ்வி,#கவிஞர்_ஆத்ரேயா,#எஸ்பிபி,#ஜானகியம்மா,#சுசீலாம்மா,#சரிதா,#ventriloquism,#magician,#ஜூனியர்,#2years_gap,#entirely_different
#ஹரிஹரன்,#ஸ்ரீவித்யா, #நாகேஷ்,#எம்ஜி_சோமன்,#பெஹதூர்,#விஜயன்