அஜ்னபி 1974 படத்தின் அனைத்துப் பாடல்களுமே அற்புதமானவை, அதில் இந்த ஹம் தோனோ தோ ப்ரேமி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாலிவுட்டின் முதல் சூப்பர்ஸ்டார் காகா என்கிற ராஜேஷ் கண்ணாவின் ஒப்பற்ற ஸ்டைல்,இளம் ஜீனத்தின் துடிப்பான அழகு, பஞ்சம் தாவின் மிக எளிமையான அழகான sustainable train note tune, கிஷோர் தாவின் macho உச்சஸ்தாயி குரல், லதாஜியின் குயிலிசைக் குரல், ஆனந்த் பக்ஷியின் பாடல் வரிகள், என அனைத்தும் அழகாய் பொருந்தி வந்த பாடல்,
இப்படத்தின் இயக்கம் பிதாமகர் ஷக்தி சமந்தா,பாலிவுட்டின் எழிலான ,நளினமான மேக்கிங் ஸ்டைல் கொண்ட படங்களுக்கு வித்திட்ட முன்னோடி இயக்குனர்.படத்தின் ஒளிப்பதிவு அலோக் தாஸ் குப்தா.
படத்தின் இசைப்பதிவின் போது ம்யூஸிக் டெக்னீஷியன் ஸ்ட்ரைக் நடந்ததால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட வேண்டி
படத்தின் இசை சேர்ப்புக்கு பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன் எதுவுமே உபயோகப் படுத்தப்பட்டு இருக்காது ,
ரயிலின் ஹாரன் சப்தம் போன்ற விசிலும் madal என்ற நேபாளத்தின் டோலக் போன்ற தோல் வாத்தியம் மட்டும் உபயோகித்து இத்தனை இனிமையான பாடலை தந்திருந்தார் பஞ்சம் தா என்ற ஆர்டி பர்மன்.
இப்பாடல் அழகியல் அற்புதமாக வந்தது, இதுவே இந்திய சினிமாவில் ஓடும் ரயிலின் மீது எடுக்கப்பட்ட முதல் முழு நீளப் பாடல்.
இதே படத்தில் கிஷோர் தா ,லதாஜி பாடிய பீகி பிகி ராத்துமேன் அற்புதமான மழைப்பாடல், அதிலும் madal என்ற தோல் வாத்தியமும், மழையும் இடியும் தத்ரூபமாக துவக்க, இடையிசையாக சேரக்கப்பட்டிருக்கும்.
மற்ற ஒரு கிஷோர் தாவின் ஸோலோ பாடலான ஏக் அஜ்னபி அஸினா என்ற பாடல் கிஷோர் தாவின் ரேர் ஜெம்.காலத்தால் மறக்கடிக்க முடியாத கலைஞன் கிஷோர் தா.