தினமும் காலை ஒன்றரை மணி நேர வேகமான நடைபயிற்சி (சுமார் பத்தாயிரம் காலடிகள் ) மூலம் ஒரு மாதத்தில் ஆறு கிலோ எடை குறைந்துள்ளேன்(90 கிலோவில் இருந்து 84 கிலோ), காலை வெயிலில் பெரிய வெட்டவெளியில் நடப்பது உடலுக்கு தேவையான விட்டமின் D ஐ யும் தானே பெற்றுக் கொள்கிறது.
18 முறை சுற்றி வந்தால் ஒன்பது கிலோ மீட்டர், முதலில் தினமும் ஆறு கிலோ மீட்டர் நடக்க ஆரம்பித்து இப்போது ஒன்பது கிலோமீட்டர் நடக்கிறேன்.
முதல் நான்கு கிலோமீட்டர் நடப்பது தான் கடினம், அதன் பின்னர் ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது என மிக அருமையாக இலக்கை எட்டி விடுவீர்கள், உங்கள் உடம்பு இளைக்கப் போகும் தசைகளில் வியர்வை கொட்டும், முதலில் அந்த கசகசப்பு பழக கடினமாக இருக்கும், நாளடைவில் பழகிவிடும், சிறிய 500 மில்லி தண்ணீர் பாட்டில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு சுற்று சுற்றி முடிந்தவுடன் சிறிது மிடறு தண்ணீர் பருகுங்கள்.
பம்மல் பகுதியில் இருப்பவர்கள் இந்த சூரியம்மன் கோயில் நடைபயிற்சி குளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
#நடைபயிற்சி,#பத்தாயிரம்_காலடி