நல்ல குடிக்கும் தரத்தில் உள்ள உப்பு மற்றும் தாதுக்கள் அதிகம் இல்லாத தண்ணீரில் மட்டும் வீடு கட்ட வேண்டும் ,நீராட்ட வேண்டும்.
கட்டுமானம் செய்வதற்கு முன் உங்கள் siteல் கிடைக்கும் கிணற்று நீர்,ஆழ்குழாய் கிணறு நீர் எதுவாக இருந்தாலும் அதை கட்டுமானத்திற்கு பயன்படுத்த உகந்ததா? என பரிசோதனை செய்ய வேண்டும் என தொடர்ந்து எழுதி வருகிறேன்,
காரணம் இந்த நீரின் தரம் கட்டுமானத்தின் நீண்ட ஆயுளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதனால் தான்.
இந்த தரப்பரிசோதனைக்கு ஆகும் செலவு 2000₹ ரூபாய் என்றாலும்,இந்த கட்டிடத்தின் ஆயுள் சம்மந்தமான முக்கியமான முடிவை எடுக்க நமக்கு உதவும் பரிசோதனை என்பதால் பணத்தை பார்க்காதீர்கள்.
இன்று திருவாரூர் நண்பர் ஒருவர் தன் வீட்டிற்கு நீர் பரிசோதனை செய்தவர் , அந்த நீர் கட்டுமானத்திற்கு உகந்ததல்ல , எதனால் உகந்ததல்ல என்ற விபரங்களுடன் துறை சார் வல்லுனர் ஒப்பமிட்டு தந்த unfit சான்றை என்னிடம் பகிர்ந்தார், இது போல சான்று வாங்கி விட்டு நல்ல தரமான நீரை வெளியில் வாங்கி வீடு கட்டத் துவங்குங்கள்.
இந்த TWAD Tamilnadu Water Supply and Drainage Board சென்னை முகவரி இங்கே:
TWAD House, No-31, Kamarajar Salai, Chepauk, Chennai - 600 005.
twadho@gmail.com
+91 -44-28416420
தமிழ்நாட்டில் பிற நகரங்களின் பட்டியல் இங்கே இணைப்பு படத்தில்
இணையதளம்
https://www.twadboard.tn.gov.in/content/water-testing-charges
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339