அண்ணா பல்கலைக்கழகம் 1970 ஆம் ஆண்டுக்கு முன் முன்பு கிண்டி எஞ்சினியரிங் காலேஜ் என அழைக்கப்பட்டது, இந்த கல்வி நிறுவனம் ஆசியாவின் மிகப்பழமையான பொறியியல் பல்கலைகழகம் ஆகும், 1794 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது, இதை வடிவமைத்த கட்டிடக்கலைஞர்
W.A. James ஆவார், 229 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவுக்கு வெளியே துவங்கப்பட்ட பொறியியல் பல்கலைக்கழகம் என்ற சிறப்பும் இந்த பல்கலைகழகத்துக்கு உண்டு, ஆனால் எல்லாம் பழம் பெருமை ஆகிவிட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் தன் பெருமைமிகு பல்கலைகழக வளாகத்தை 1980 துவங்கி பல திரைப்படங்களுக்கு நீதிமன்ற காட்சிகள், வகுப்பறை காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடத்த வேண்டி நாள் வாடகைக்கு விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
ஒரு கைதியின் டைரி , இதயகோயில் , நாயகன் என இந்த பட்டியல் நீளும் , அப்போது எல்லாம் சிக்காதவர்கள் , பொன் முட்டை இடும் வாத்தை அறுத்தது போல கடந்த 2022 துவங்கி பெருமைமிகு விவேகானந்தா பட்டமளிப்பு மண்டபத்தை அரை நாள் வாடகைக்கு விடுகையில் கையும் களவுமாக பிடிபட்டு சந்தி சிரித்துள்ளது,
உழவன் விதைநெல்லை பொங்கித் தின்றதற்கு ஒப்பான அவலம்.
இந்த வளாக வாடகைக்கு , மண்டப வாடகைக்கு எல்லாம் முறையாக கணக்கு வழக்கு உள்ளதா? அல்லது எல்லாருக்கும் பங்கு போகிறதா? என விசாரணை நடத்த வேண்டியது அவசியம்,
இனியேனும் பழமையும் பெருமையும் மிகுந்த பல்கலை கழக வளாகங்களை கைச்செலவுகளுக்காக மசாலா திரைப்படங்கள் ,தனியார் விழா நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது வழக்கொழிய வேண்டும் .
அண்ணா பல்கலையில் படித்த பழைய மாணவர்கள் இந்த மண்டப வாடகைக்கு விடும் போக்கிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும், இனியும் இது தொடர்ந்தால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரங்கில் கூட பல்கலைகழக தரம் என்பது கிடைக்காமல் போகலாம் ,தற்போது உலக அரங்கில் qs ranking ல் 551 - 560 ஆகும்.