`மனிதன், மகத்தான சல்லிப்பயல்'!
`நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால், முழுமையும்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்.'
~எழுத்தாளர் ஜி.நாகராஜன்~
நேற்று முன்தினம் துவங்கி எங்கு நோக்கிலும் அந்த ஓரினசேர்க்கை எழுத்தாளரின் பாலியல் வல்லுறவு கண்டன பதிவுகள் காணக்கிடைக்கின்றன, கண்டும் காணாமல் போக முடியவில்லை என் மகனுக்கு இப்படி ஒரு அவலம் நேர்வதை நினைத்துப் பார்க்ககூட கூசுகிறது ,அச்சமாக உள்ளது, இது போன்ற எழுத்தாளர் எழுதிய படைப்புகள் எனக்கு பீக்கு சமானம்,ஆமாம் இது போல சூழலுக்கு ஏற்ற பொருத்தமான சொல்லை அன்றே விருமாண்டி சொன்னார்.
வல்லுறவுக்கு ஆளான அந்த விடலைச் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் உடல் மற்றும் மனரீதியாக எத்தனை காயப்பட்டிருப்பார்கள்? என இங்கு சொல்ல வேண்டியதில்லை,
அந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ ஆலோசனை மற்றும் தரமான உரிய மனநல ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும்.
காரணம் , எதிர்பாராத அல்லது அதிர்ச்சிகரமான சூழலில் நிகழும் குதப்புணர்ச்சி அல்லது வாய்ப்புணர்ச்சி வல்லுறவு பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் முழுக்கத் துரத்தும், கடுமையான மன உளைச்சலைத் தரும், வாழ்நாள் முழுக்க கடுமையான தாழ்வு மனப்பான்மையைத் தரும், முன்னேற்றத் தடையைத் தரும்,கல்வியில் கவனம் செல்லாது, பணியில் சாதிக்க விடாது, தற்கொலைக்குத் தூண்டும், சமூகத்தை வெறுக்க வைக்கும், தன் உடம்பை வெறுக்க வைக்கும், தன் பாலினத்தை சந்தேகிக்க வைக்கும், பின்நாளில் மணவாழ்க்கையில் நுழைய கூட தயக்கம் தரும்.
நம் சமூகத்தில் இது போன்ற வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தான் இந்த வல்லுறவுக்கு ஆட்பட்டேன் என்று சொன்னால் பெற்றோரிடம் இழிசொல்லும், உற்றார் உறவினரிடம் அவமானமும் நெருங்கிய நண்பர்களிடம் கூட ஏளனம் தான் மிஞ்சும் என்பது கண்கூடு.
கடந்த பத்து வருடங்களாகத் தான் நம் வீட்டுக் குழந்தைகள் குட் டச் பேட் டச் பற்றி பரவலாக அறிந்து முன்னெச்சரிக்கையுடன் நடக்கின்றனர்,
குடும்பத்தார் தூரத்து உறவினர் கூட குழந்தைகளைத் தொடாமல் உரையாடும் புதிய வழக்கம் கூட நம்மிடையே உருவாகியுள்ளது,
பீடோஃபைல் மற்றும் இன்ஸெஸ்ட் தன்மை கொண்டவர்களை இன்றைய குழந்தைகள் அடையாளம் காண்பதற்கு போதிய அறிவு மற்றும் புரிதல் உள்ளன,
ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை பொதுவில் வெளிப்படையாக அறிவித்து அது தெரிந்து வலிய வந்து பழகுபவர்களிடம் ஓரினச் சேர்க்கை உறவு கொள்ளட்டும்,
ஒன்றும் அறியாமல் நம்பி வந்து வல்லுறவுக்கு இரையாகும் விடலைகள் எதிர் கொள்ளும் வலி மற்றும் மனத்துயர் கொடூரமானது, அவர்களின் உள்ளத்தவிப்பை வார்த்தையில் யாரும் எழுதி விட முடியாது,
இந்த சமூகத்தில் அதற்கான ஆறுதல் பெற வெளி இன்னும் இங்கில்லை,
எப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வருகிறதோ அப்படி ஆணுக்கும் ஆணுக்கும் , பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் வரும், அப்படி இயற்கையாக ஒத்திசைந்து காதல் வருகையில் அவர்கள் மனம் ஒத்து, ஊரறிய லிவின் வகை உறவில் சேர்ந்து வாழ்ந்து ஓரினச்சேர்க்கை காதலர்களாக வாழ்க்கையை முயன்று பார்க்கட்டும், தடுக்கவில்லை.
ஐந்து வருடங்கள் அந்த பந்தம் நிலைத்தால் மனமும் உடலும் இசைந்தால்,உள்ளம் உறுதி கொண்டால், அத்தம்பதிகள் ஒருபால் திருமணம் கூட புரியட்டும், ஒரு பால் உறவிலும் ஓருவருக்கு ஓருவர் உண்மையாக இருக்க வேண்டிய தார்மீக புரிதல் அவசியம், நான் போகிற போக்கில் சந்திக்கும் அனைவருக்கும் ஆசனவாயை தருவேன், வாய்புணர்ச்சி பெறுவேன், என ஒரு ஓரினச்சேர்க்கையாளர் வாழ்வது மிகவும் அருவருக்கத்தக்கது.
இது போல மனநிலை கொண்டவர்கள் சமூகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள், பெயரெடுத்த வல்லுறவாளர்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை,
இவர்கள் வல்லுறவு செய்த பதின்ம வயது பாலகர்கள் அல்லது இளைஞர்களுக்கு உரிய ஆறுதல், மருத்துவ உதவி, மனோதத்துவ நிபுணர் சிகிச்சை கிடைக்காத பட்சத்தில் தாம் வாழும் சமூகத்தை முற்றிலும் வெறுக்கத் துவங்கலாம், சோஸியோபாத் ஆகலாம் , நாளடைவில் சைக்கோ ஜெயசங்கர் , சைக்கோ ஜான்டேவிட் , சைக்கோ தஷ்வந்த் போல மாறக் கூட வாய்ப்பு உண்டு,காரணம் அவர்கள் எதிர்கொண்ட வலி அதிர்ச்சி அத்தகையது.
காரணம் இவர்களுக்கு கிடைக்காத மன ஆறுதல் தான், ஆங்கிலத்தில் பெய்ன் இன் த ஆஸ் என்பார்கள், மூலவியாதிக்காரர்கள் அதை நன்கு அறிவார்கள், அந்த வலியை பாலகர்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிர்ச்சிகரமான தருணத்தில் வல்லுறவில் தருபவர்கள் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்களே,
அவர்கள் இருபாலின சேர்க்கையாளராகவும் இருந்தால் இன்னும் ஆபத்தானது,
நம்பி வந்த மனைவிக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருக்கும், பெற்ற தாயிடம் கூட தன் கணவனின் விபரீத இச்சையை அவள் அனுபவிக்கும் வலியை பகிர முடியாது என்கையில் வேறு யாரிடம் அதை பகிர்ந்து விட முடியும்?,
இருபாலின இச்சை கொண்டவர்களின் மனைவியர் பாவப்பட்ட பிறவியர் எனலாம், எந்த நம்பிக்கையில் தன் கணவனுடன் பயமின்றி பாதுகாப்பு கவசமின்றி உடலுறவு கொள்ள இயலும்?
நம்பி வந்த மனைவிக்கு இப்படி துரோகத்தை செய்வது எத்தனை இழுக்கானது?, கணவன் எங்காவது இரவு தங்கி விட்டு வந்தால் மனைவி மனம் என்ன பாடு படும், கணவன் அறையில் யாரேனும் விருந்தினர் வீட்டு விடலை வந்து தங்கினால்,திருடனுக்கு தேள் கொட்டியது போல எப்படி மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்?
நம் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான பாவச்செயல் தான் என்கையில் ஓரினச்சேர்க்கையில் வல்லுறவு மிருகத்தனமானது.
ஒரினசேர்க்கையாளர்களான இருபாலர்களுக்கும் சொல்வது இது தான், உங்களுக்கு ஏற்ற ஒத்திசைவுடன் காதலன் அல்லது காதலி கிடைத்தால் நேர்மையாக துரோகம் செய்யாமல் சமூகத்துக்கு தொந்தரவு இல்லாமல் அந்த ஓரினச்சேர்க்கை உறவை தொடருங்கள்,
இல்லையா, பகீங்கரமாக எனக்கு ஓரினசேர்க்கைக்கு நிரந்தர துணை தேவை என உங்கள் சமூக ஊடக biodata பகுதியில் பிரகடனப்படுத்துங்கள், காரணம் குதம் கிழிந்து புண்ணாகையில் பால்வினை நோய் இருவருக்குமே பரவும்,பால்வினை மருத்துவர் பிறப்புறுப்பில் செலுத்தும் தடுப்பூசியின் வலியை விட அவரின் ஏச்சு பேச்சு,ஏளனப் பார்வை அத்தனை கொடியது.
எஸ்டிடிடி , சிபில்லிஸ், ஹெச்ஐவி என மேக, ஏப்பு வியாதிகள் வந்தால் அந்த கணவன் மனைவியின் இரு குடும்பங்கள் நொடியில் தகரும்,
இருபாலின சேர்க்கை என்பது பெருமையல்ல , மனைவியை ஏமாற்றுவது, பெற்ற குழந்தைகளை ஏமாற்றுவது ஆகும்,
ஒரு இருபால் இச்சை உறவாளருக்கு இருபது வயதில் மகன் இருக்கிறான் எனக் கொள்வோம்,அந்த தந்தை இருபது வயது உள்ள இளைஞன் ஒருவனுடன் வல்லுறவு கொள்வது மகனுடன் வல்லுறவு கொள்வதற்கு ஒப்பான இழிசெயலாகவே நான் பார்க்கிறேன்,
மணந்த பாவத்துக்காக மனைவிக்கு பாலியல் தொற்று நோயைத் தருவது இழிச்செயல்,பஞ்சமாபாதகமாகும்.
அமீரகத்தில் பணிபுரிகையில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சாதாரணமாகத் தென்படுவர், ஃபிலிப்பினோக்கள் அதில் அதிகம், மிகவும் அழகிய இளம்பெண்கள் இப்படி ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்களாகி விடுவர்,அதை பணியிடத்தில் யாருமே பொருட்டாக கருத மாட்டோம், அந்த பெண்கள் ஆண்களை ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டார்கள், தனக்கு கிடைத்த பெண் துணைக்கு அத்தனை உண்மையாக இருப்பார்கள்,கைகோர்த்து தான் நடப்பார்கள்,அத்தனை பொஸஸிவ்னெஸ் அவர்களிடையே இருக்கும்.
அமீரகத்தில் புதிதாக வரும் இந்தியர்களுக்கு சொல்லும் பொதுபுத்தி அறிவுரை உண்டு, பத்தான் (பஷ்தூன்) டாக்ஸியில் பயணிக்கையில் ஓட்டுனர் இருக்கை அருகே அந்த பயணி அமரக்கூடாது ,அமர்ந்தால் பாலியல் சீண்டல் செய்வர், பத்தான்கள் தங்கி உள்ள வில்லா மீது பறக்கும் புறாக்கள் கூட இறகுகளால் ஆசனவாயை மறைத்துக் கொண்டு தான் பறக்கும் என்ற மலினமாக நகைச்சுவையைக் கூட நம்மாட்கள் பகிர்வர், ஆனால் அது உண்மையில்லை என்பதை 15 வருட அமீரக வாழ்க்கையில் கண்டறிந்துள்ளேன், பாய்ஜான் என்று சொல்லிவிட்டால் அத்தனை மகிழ்ச்சி கொண்டுவிடுவார்கள் , அப்படி முன்னின்று உதவுவார்கள் அவர்கள், நம்மாட்களுக்கு எங்கே யாரை சந்தேகிக்க வேண்டும்,யாரிடம் அதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், எந்த விஷயத்தை நகைச்சுவையாக்கி நீர்த்து போக வைக்க வேண்டும் என்றே தெரியாது என்பதற்காக இந்த பத்தான் உதாரணத்தை இங்கே பகிர்ந்தேன், முன் பின் தெரியாத பத்தான்கள் கூட செய்யாத ஒரு கொடிய வல்லுறவை மன சிதைத்தலை எழுத்தாளர் என்ற போர்வையில் ஒரு வல்லுறவாளர் செய்வது கடும் தண்டனைக்குரியது.
மேலை நாடுகளில் ஆத்மார்த்தமான தம்பதிகளிம் இதுதான் வழக்கம், ஒருபால் ஈர்ப்பாளர்கள் , ஸ்ட்ரெயிட் என யாருமே கோர்ட்ஷிப் என்ற பழகும் காலத்தில் டேட் செய்து துணையை கண்டறிந்து நிதானமாக ரிலேஷன்ஷிப் காலகட்டத்திற்குள் நுழைவர், அதன் பின்னர் ஐந்தாண்டு கடந்து தான் திருமணம், கோர்ட்ஷிப்பிற்கு முன் எத்தனை பேரிடம் பழகுகிறோம் என்பது பொருட்டல்ல ஆனால் ரிலேஷன்ஷிப் காலத்தில் நிகழும் துரோகம் மன்னிக்க முடியாததாகவே அத்தம்பதிகள் கருதுகின்றனர், வெட்லாக் ஆன பின் துணைக்கு செய்கிற துரோகத்தை மகா பாவமாகவே கருதுகின்றனர்,
அது போல நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்டால் கூட போதும் இங்கே கணவன் மனைவிக்கோ , மனைவி கணவனுக்கோ எந்த நிலையிலும் துரோகம் இழைக்கவே மாட்டோம்.
எழுத்தாளர் J. M. Coetzee எழுதிய Disgrace கதையில் தன்னிடம் உள்ள internal marks என்ற லகான் துணையுடன் இளம் கல்லூரி மாணவி மெலனியை வலுக்கட்டாயமாக பெண்டாளும் பேராசிரியர் டேவிட் லூரி ஒரு தெருநாயைப் போலவே வாழும் காலத்தில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு மனசாட்சியால் தண்டனை அடைவதைக் காண்போம்.
அக்கதையில் வல்லுறவுகொள்ளப்படுவது இளம்பெண் என்றாலும் கூட இக்கதையின் பேசுபொருள் ஒன்றே , அதாவது "மனத்தை சிதைத்தல்".
Disgrace பற்றி இங்கே படிக்கலாம்
https://m.facebook.com/story.php?story_fbid=10155449628286340&id=750161339&mibextid=Nif5oz
கோணங்கி பல்லாண்டுகளாக அரங்கேற்றிய இளைஞர்கள் வல்லுறவு பற்றி வினி சர்பனா எழுதிய விகடன் கட்டுரை இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10160939969206340&id=750161339&mibextid=Nif5oz
#me_too
#SpeakUpAgainstAbuse
#ArtistsAgainstAbuse
#EndSexualAbuse
#KonangiExposed
#NoMoreSilence
#MeTooArtistCommunity
#BreakTheSilence
#ProtectSurvivors
#JusticeForVictims
#HoldPerpetratorsAccountable
#StopSexualAbuseInArt
#SafeArtistsCommunity
#SupportSurvivors
#TogetherAgainstAbuse