ஐந்து வருடங்கள் முன்பு சோளிங்கர் போகையில் சின்னமலை படிகளில் பக்திபடங்கள் விற்கும் கடையில் "வெண்ணெய சாத்தி நின்றோம் ஹனுமந்தா ஆஞ்சனேயா " பாடல் ஒலித்தது, அட நம் பாலமுரளிக்கிருஷ்ணா அவர்கள் குரல் என்று அமர்ந்து கேட்டுவிட்டு படிகள் ஏறினேன்.
திரும்ப வருகையில் " வாயு புத்திரனே ஆஞ்சனேயா " பாடல் ஒலிக்க அதையும் கேட்டு விட்டு சிடியை வாங்கிக் கொண்டு காரில் கேட்டபடி வீடு வந்தோம்.
முழுக்க முழுக்க பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தமிழில் ஆஞ்சனேயர் மீது பாடிய பக்திப்பாடல்கள் இவை, அத்தனை அற்புதமாக இசையமைத்திருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா, கவிஞர் திருப்பத்தூரான் வரிகள் ஒவ்வொன்றும் ஆத்மார்த்தமானவை, அனுமன் சரிதத்தை உரைத்து மனதுக்கு உரம் தந்து காக்கிறது.
மொத்தம் எட்டு பாடல்கள் அத்தனையும் அற்புதமானவை, வெவ்வேறு அழகிய ராகங்களால் கட்டமைக்கப்பட்டவை,
5.5 நிமிடம் நீளுபவை,மனிதில் ரீங்காரமிடுபவை,நிச்சயம் உங்கள் தினசரி play list ல் அமரும் .
1.ராமனின் நாமத்தை பூமிக்கு சொல்லவந்த நாயகன் நீயல்லவா?
2.சேது அணைக்கரையிலே ராம ஜெபம் செய்யும் அனுமந்தனே
3. வாழ்க்கையில் சுகம் ஏதும் அறியாதவன், ராமன் வைகுந்தம் அழைத்த போதும் தொடராதவன்.
4.ஓம் அஞ்சனையின் மைந்தா நமோ நமோ ஓம் ஆஞ்சனேயனே நமோ நமோ
5.காலங்கள் தோறும் ராமனைப்பாடி வாழ்கின்ற தூயவனே.
6.வாயு புத்திரனே ஆஞ்சனேயா, தவவலிமையில் சிறந்தவனே ஆஞ்சனேயா
7.வெண்ணைய சார்த்தி நின்றோம் அனுமந்தா ஆஞ்சனேயா, வடமாலை சூட்டி நின்னோம் அனுமந்தா ஆஞ்சனேயா.
8.ஆஞ்சனேயர் அஷ்டோத்திரம்
வீட்டில் ஒலிக்க விடுங்கள் ஆத்மபலம் பெருகும்,மனசஞ்சலம் ஓடும், சனி இன்னல்கள் குறையும்.
இங்கே juke box
https://youtu.be/ZiurkbLLUug