வீட்டிற்கு ஜன்னல் அமைக்கையில் Sill Beam மற்றும் Lintel Beam அமைப்பது அவசியம்,ஜன்னல் மீது இறங்கும் அழுந்து விசையை சீராக சுவற்றுக்கு கடத்துவதற்கு கட்டுமானத்தில் lintel beam மற்றும் sill beam அவசியம், அப்படி அமைக்காமல் போகையில் சரியாக அமைக்காமல் போகையில் ஜன்னலின் நான்கு மூலைகளிலும் விரிசல்கள் உருவாகும், சுவற்றின் உறுதியை குலைக்கும், ஜன்னல் சட்டங்களை உருகுலைக்கும்,சட்டங்கள் உடையவோ,ஜன்னல் கதவுகள் சார்த்த முடியாமலோ போகும்,இணைப்பு படங்களில் lintel beam மற்றும் sill beam அமைக்காமலோ அல்லது குறையுடன் அமைக்கப்பட்ட ஜன்னல்களின் மாதிரியை பாருங்கள்.
கட்டுமான செலவை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் cut lintel ,ready made lintel, cut sill beam, readymade lintel, readymade sill beam என கண்டிப்பாக அமைக்க வேண்டும், reinforcement செலவை குறைக்க வேண்டிய அவசியம் நேர்ந்தால் இப்படி readymade Custom Industrial Fabricated Expanded mesh கிடைக்கிறது, அதைப் பயன்படுத்தி cast in situ முறையில் 1:2:4 விகிதத்தில் காங்க்ரீட் இட்டு sill beam அமைக்கலாம், குறைந்தது 3 அங்குல தடிமன் அமைப்பது அவசியமாகும், குறைந்தது bearing ஏறுவாசி 6 அங்குலமாவது இருபுறமும் நீளுமாறு sill beam அமைக்கவும், இதன் மூலம் ஜம்பது வருடங்கள் ஆனாலும் கட்டிடத்தின் ஜன்னல்கள் நீடித்து உழைக்கும் என்பது கண்கூடு.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#sustainability ,#sustainable_living,#go_green,#refurbished,#table_side_unit