"என் சட்ட தான் அழுக்காயிடுச்சே"
மகாநதி திரைப்படத்தில் நேப்பியர் பாலத்தின் மீது கிருஷ்ணாவும் பஞ்சாபகேசனும் பேசிக் கொண்டே வரும் காட்சி, அவர்கள் சென்ட்ரல் ஜெயிலில் சப்ஜெயிலர் முத்துசாமியைப் பார்த்து விட்டு நடந்து வருகின்றனர், கூவம் நதி சாக்கடையாகி வங்கக்கடலில் கலக்கும் அவலத்தை வசனங்களில் நன்கு வெளிப்படுத்தியதைப் பாருங்கள்,
முத்தாய்ப்பாக சாக்கடையில் இவர்களின் நிழலும் பாலத்தின் நிழலும் விழுவதை காட்டியிருப்பார் ஒளிப்பதிவாளர் M.S.பிரபு.
இக்காட்சியில் அப்போது வானில் தோன்றி மறைய இருந்த வானவில்லைக் காட்ட வேண்டியது, அது கடைசி நேர களேபரத்தில் நிகழாமல் போனது என இயக்குனர் சேரன் பேட்டியில் பகிர்ந்திருந்தார், கடைசி உதவி இயக்குனராக பேய்களை நம்பாதே பாட்டுக்குள் தொலைக்காட்சிக்குள் வரும் ஜலதரங்கரங்கம் கலைஞர் மற்றும் props தேடி மயிலையில் கண்டுபிடித்து அழைத்து வந்ததைச் சொன்னார், கமல்ஹாசனிடம் அன்று வாங்கிய திட்டுகள் தன்னை perfectionist ஆக செதுக்கியதை உளமாறச் சொன்னார் சேரன்.
இக்காட்சிக்கு பின் அண்ணா சமாதி அருகே நடக்கும் தெருக்கூத்தில் கிருஷ்ணாவின் மகன் பரணியைக் கண்டடைவதில் merge ஆகும்.
மகாநதி என கூகுளில் யூட்யூபில் ஆங்கிலத்தில் தேடினால் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தான் வருகிறது,மிகவும் எரிச்சலடைய வைக்கிறது.
மகாநதி மேலும்,
ஹில்ஸா மீன் உணவு
கிருஷ்ணாவின் அமெரிக்க நண்பர் trivia
மாதங்கி தாரா ஹோ மா படகோட்டியின் குரல்
எங்கேயோ திக்கு திசை
திருநாகேஸ்வரம் ரயிலடி இந்தி எதிர்ப்பு கருப்பு பெயிண்ட்
ஒரு விதவனின் தடுமாற்றம்
மகாநதி மக்களின் வெற்றி
மகாநதி பூஜை
மகாநதி பாராட்டு கடிதங்கள்
மகாநதி தந்தைமையின் இலக்கணம்
மகாநதி பஞ்சாபகேசன் கதாபாத்திரம்
மகாநதி Own Personal Money
மகாநதி தெலுங்கு வெளியீடு
மகாநதி தன்னம்பிக்கையின் உச்சம்
மகாநதி Avid எடிட்டிங் அறிமுகம்
மகாநதி கிருஷ்ணா காவேரி பரணி சரஸ்வதி
#மகாநதி,#கூவம்,#சாக்கடை,#கழிமுகம்,#மெரினா,#கமல்ஹாசன்