கிருஷ்ணாவுக்கு திருநாகேஸ்வரம் பூர்வீக வீடு விட்டபின் நாய்பிழைப்பு, நரி ஊளையிடும் மடிப்பாக்கம் வீடு, மத்திய சிறை, யமுனாவின் ரேழி வைத்த வீடு, சிறை அதிகாரி முத்துசாமியின் காவலர் குடியிருப்பு வீடு
கிருஷ்ணாவும் பஞ்சாபகேசனும் மகள் காவேரியை சோனாகாச்சியில் இருந்து மீட்டு வரப்போன ஐந்து நாளும் சிறை அதிகாரி முத்துசாமி வீட்டில் தான் யமுனா பரணி தங்கியிருப்பார்கள்,வீட்டில் காவலர் கவாத்து புகைப்படம் மாட்டியிருப்பதைப் பார்க்கலாம்.
மீட்டு வந்தவுடன் புது மனிதர்களால் அந்த வீடே நிரம்பியிருக்கும், இதனால் யமுனாவிடம் காவேரியின் துரத்தும் கோர கனவுகள் பற்றி மாடிப்படிகளில் அமர்ந்து புலம்பி அரற்றுவார் கிருஷ்ணா.
மிகச் சிறிய காவலர் குடியிருப்பு வீடு அது, அந்த வீட்டில் பஞ்சாபகேசன் நீண்ட ரயில் பயணக் களைப்பில் சோஃபாவில் அசௌகர்யமாக உறங்குவார்,
ஐந்து நாட்களாக முத்துசாமி பணிக்குச் செல்லமாட்டார், காரணம் மிகவும் நேர்மையான அதிகாரி முத்துசாமி ,சீருடை அணிந்தால் தன்னால் கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய முடியாது, பாதுகாப்பு தரமுடியாது என்பதால் தான்,
கிருஷ்ணா பெயரில் வெங்கடாசலம் ஆளை அடித்ததாக கொலைவழக்கு குற்றப்பத்திரிக்கை பதிவானதால், மறுநாள் விடியலில் கிருஷ்ணா சரண்டைந்தால் தான் தன்னால் வேலைக்கு போகமுடியும் என்பதை கிருஷ்ணாவை தனியே அழைத்து ரகசியமாக சொல்வார் முத்துசாமி,
படித்துக் கொண்டிருக்கும் தன் மகன் முருகேசனை வெளியே போகச் சொல்ல வேண்டி சிகரட் வாங்கி வரக் கேட்பார், அப்பயே வாங்கி வச்சுட்டேன்பா என்றவனிடம் அப்படின்னா வாழைப்பழம் வாங்கிவா என வெளியே அனுப்புவார் முத்துசாமி,
அவன் அப்பாவுக்காக அலுத்துக் கொண்டே போனாலும் உடனே எழுந்து போவதில் செய்தி உள்ளது, பின்னாளில் அப்பாவின் நண்பர் கிருஷ்ணாவின் மகள் காவேரியை மணமுடிப்பவன் முருகேசன், முத்துசாமிக்கு மகன் இருப்பதை காட்டியது போலவும் ஆயிற்று , அவன் அப்பா சொல் தட்டாத பிள்ளை என்பதை அந்த காட்சியில் நிறுவியது போலவும் ஆயிற்று.