கோடாலி வடிவ மனையை வாங்காமல் தவிர்க்க வேண்டும், அது பூர்வீக சொத்து பாகம் பிரிக்கும் போது கிடைத்த சொத்து என்றால் வடகிழக்கில் தென்கிழக்கில் வாசல் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும், கோடாலி மனையில் எக்காரணம் கொண்டும் எல்லை மீது அணைத்து இடம் விடாமல் கட்டக்கூடாது, க்ரில் வைத்த பால்கனி போன்றவை விதிவிலக்கு, பால்கனிகளை சுவர் எழுப்பி மூடக்கூடாது,
கோண சூத்திரக்கோடு தென்மேற்கு முதல் வடகிழக்குக்கு பாதைக்கு ஒன்றும் மனைக்கு ஒன்றுமாக வரைந்து பார்த்து அக்கோட்டின் மீது கீழ்நிலை நீர் தொட்டி,செப்டிக் டேங்க், ஆழ்குழாய் கிணறு அமையாமல் பார்த்து வடிவமைக்க வேண்டும், இது தவிர மனையின் நடுப்புள்ளி கண்டறிந்து சக்தி சக்கரம் வைத்து 360 கோடுகள் வரைந்து நல்ல சக்தி வரும் பாகத்தில் கதவுகள் ஜன்னல்கள் அமைக்க வேண்டும்.
கோடாலி மனையில் சமையலறை தென்கிழக்கில் மட்டும் வர வேண்டும், தென்மேற்கில் கஜானா அல்லது ஒப்பனை அறை வர வேண்டும், குடும்பத்தலைவர் படுக்கை தெற்கில் தலை வைக்குமாறு அமைய வேண்டும், கோடாலி மனையில் அமையும் படுக்கைகள் தெற்கில் அமைவது வீரியமான வாஸ்து தோஷம் களையும்,குடும்பத்தாருக்கு ஆரோக்கியத்தை தரும்.
கோடாலி மனையில் வடக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு அல்லது கிழக்கு பார்த்து நுழைவது போல வாசல் கதவு வைப்பதே சரி, கோடாலி மனை அல்லது எந்த மனையிலும் வடகிழக்கில் மாடிப்படிகள் அமைக்க கூடாது முதல் விதியாக தென்மேற்கில் அமைக்கலாம்,அது முடியாத பட்சத்தில் தென்கிழக்கில் அமைக்கலாம், வடமேற்கு மூன்றாவது பட்சம், இதில் தென்கிழக்கில் மாடிப்படிகள் மின்தூக்கி அமைக்கப்பட்டு, மனை மற்றும் வீட்டின் உயரமான பகுதியாக மேல்நிலை நீர் தொட்டி தென்மேற்கில் அமைக்கப்பட்டுள்ளது, அது போல வடகிழக்கில் மொத்த மழைநீர் வடிந்து வெளியேறுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது, கிழக்கு பார்த்த பூஜை அறை, பெரிய சமையலறை சிறிய பால்கனி, குடும்பத்தலைவர் படுக்கை அறைக்கு சிறிய பால்கனி என வடிவமைக்கப்பட்டுள்ளது.
வீடு வடிவமைக்கையில் உடன் interior design ஒருங்கே சரியான ergonomics அளவில் ஃபர்னீச்சர்களை வரைந்து வடிவமைக்க வேண்டும்,சுவற்றில் படுக்கை அமைகையில் symmetry அமைய வேண்டும், நல்ல காற்று உள் நுழைந்து பிராண சக்தி தந்து வெளியேற இரண்டு ஜன்னல்கள் அமைக்க வேண்டும், படுக்கை அறை வெளியே இருந்து பார்க்கையில் படுக்கை அறை தெரியங்கூடாது,
இந்த கோடாலி மனை பரப்பளவு - 1759 சதுர அடி
GF தரைத்தளம் ஒற்றை படுக்கை அறை வீடு மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கீழ்நிலை நீர்தேக்க தொட்டி செப்டிக் டாங்க் பைக் பார்க்கிங் கொண்டது, கட்டுமான பரப்பளவு 755 சதுர அடி,
FF,SF முதல் மாடி, இரண்டாம் மாடி விசாலமான இரட்டை படுக்கை அறை வீடு மற்றும் பொதுப்படிகள் மின்தூக்கி கொண்டது, கட்டுமான பரப்பளவு 1056 சதுர அடி ஒரு தளத்துக்கு, ,
மொட்டை மாடி, பொதுப்படிகள் மின்தூக்கி பராமரிப்பு அறை கொண்டது, கட்டுமான பரப்பளவு 140 சதுர அடி , மொட்டை மாடியில் 8 வடிவ நடைபாதை, சோலார் சக்தி பேனல்கள் 2 கிவாட் உற்பத்திக்கு, வார இறுதி கொண்டாட்டங்களுக்கு barbeque , உணவு மேஜை,சிறுவர் விளையாட்டு இடம், ac external unit வைக்க இடம், மேல் நிலை நீர் தொட்டிகள் இரண்டு எண்ணிக்கையில் அமைய வேண்டிய இடம் என அனைத்தும் வடிவமைக்கப்பட்டது, இதை bespoke design, passive design, vasthu, fengshui intergrated interior design என எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம், landscape design இன்னும் இதற்கு செய்யவில்லை , குடும்பத்தார் ராசி நட்சத்திரப்படி வடிவமைக்கப்படுகிறது அதற்கு தனி plan பகிர்கிறேன்.
#DFD
#Collaborative_Design
#Bespoke_planning
#Indoor_plant_tips
#Interior_Design_tips
#Passive_Design_tips
#Sustainable_Design_tips
#vastu_tips
#fung_shway
#fengshui_tips
#vasthu_tip_of_the_day
#வாஸ்து
#ஃபெங்ஷுய்
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD| Let's Design Online | Dial for Design |
dialfordesignstudio@gmail.com
9 9 4 0 2 5 5 8 7 3