இன்றுடன் மகளுக்கு +2 CBSE பொது தேர்வுகள் முடிந்து விட்டன (computer science ),பொது தேர்வு என்பது மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தமான காலம் அது நல்லபடியாக கடந்தது, இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிய நிம்மதி எனக்கு,
மந்திரம் கால் மதி முக்கால் என்பதால் ஒவ்வொரு பொது தேர்வு அன்றும் திருநீர்மலை சென்று வேண்டி வந்தேன், மகளுக்கு இன்னும் JEE mains தேர்வு உள்ளது , அதன் பின்னர் JEE advanced தேர்வு உள்ளது,Professional தேர்வுகளில் பாதி கிணறு தாண்டி உள்ளார், மூன்று மாதங்களாக Fiitjee வகுப்புகளுக்கு செல்லவில்லை, வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் செல்ல வேண்டும்.
JEE advanced தேர்வு NEET தேர்வை விடவும் கடிமானது, நூற்றுக்கணக்கில் reference புத்தகங்கள் ஒவ்வொன்றும் கிலோ கணக்கில் இருக்கிறது, சீன பல்கலைகழக நுழைவுத்தேர்வான GAOKAO உலகின் எந்த நுழைவுத் தேர்வையும் விட மிகவும் கடினமானது, GAOKAO வுக்கு சமமானது JEE advanced தேர்வு.
நல்லபடியாக JEE mains தேர்வு , JEE advanced தேர்வு முடிந்தவுடன் விரிவாக அனைத்தையும் எழுதுகிறேன்.
இங்கே JEE mains JEE advanced போட்டி தேர்வுகள் எதற்கானவை? யார் அதில் சேரலாம்? அதில் படித்தால் என்ன இளங்கலை படிப்பு படிக்கலாம் என எழுதியுள்ளேன்.